விஜய லட்சுமி எமானி

விஜய லட்சுமி எமானி ( மே 14, 1957 - ஜனவரி15, 2009) ஒரு இந்திய அமெரிக்க சமூக ஆர்வலர் ஆவார், இவர்,குடும்ப வன்முறைக்கு எதிரான தனது பணிக்காக அறியப்பட்டார், மேலும் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் உள்ள இந்திய அமெரிக்க சமூகத்தில் குடிமைத் தலைவராக இருந்தார். வடகிழக்கு ஓஹியோ தெலுங்கு சங்கத்தில் தொடங்கி, அதைத் தொடர்ந்து இந்திய சமூக சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கிரேட்டர் கிளீவ்லேண்ட் ஆசிய சமூகத்துடன், இவர் இந்திய சமூகத்தின் கூட்டமைப்பின் தலைவராகவும், இந்திய சமூக சங்கங்களின் கூட்டமைப்பு (FICA) குழு உறுப்பினராகவும் இருந்தார். 2011 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான ஜனாதிபதி குடிமக்கள் பதக்கம் இவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது [1] [2]

விஜய லட்சுமி எமானி
பிறப்புமே 14 1957
கர்னூல், ஆந்திரப் பிரதேசம்
இறப்புஜனவரி 15 2009 (age 51)
ஒகையோ
பணிசமூக செயற்பாட்டாளர்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

எமானி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்னூலில் இந்துராணி மற்றும் ஜி.வெங்கடரமண ரெட்டிக்கு மகளாகப் பிறந்தார். ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு 1986 இல் அமெரிக்கா சென்றார். ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்ட் மாநில பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். [3]

தொழில் தொகு

ஒற்றைப் பெற்றோராக, இவர் இதே போன்ற சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்காக ஆதரவு குழுக்களைத் தொடங்கினார். எமானியின் முக்கிய குறிக்கோளானது, அமெரிக்காவில் உள்ள இந்திய-அமெரிக்கர்களுக்கு சமூக அவமதிப்பைக் கடக்க உதவுவதாகும். அமெரிக்காவில் குடியேறிய சமூகங்களுக்குள் குடும்ப வன்முறை பரவுவது பற்றிய விவாதத்தையும் இவர் தொடங்கினார். எமானி 2002 - 2006 வரை இந்திய கலாச்சார பூங்காவை நிர்மாணிப்பதில் தனது பணியின் மூலம் கிளீவ்லேண்ட் கலாச்சார பூங்காவிற்கு புத்துயிர் கொடுப்பதில் முக்கிய பங்காற்றினார். ஓஹியோவின் கிளீவ்லேண்டில் உள்ள ராக்ஃபெல்லர் பூங்காவில் உள்ள இந்திய கலாச்சார பூங்காவின் கட்டுமானம் ஆறு பாரம்பரிய தூண்களுடன் ஒரு வட்ட தோட்ட இடத்தையும், 2006 இல் நிறுவப்பட்ட மகாத்மா காந்தியின் சிலையையும் கொண்டுள்ளது, இந்தச் சிலை கவுதம் பால் என்பவரால் செதுக்கப்பட்டது. [4]

இறப்பு தொகு

எமானி 2009 ஆம் ஆண்டு தனது [3] 51வது வயதில் ஓஹியோவில் ஒரு சாலை விபத்தில் இறந்தார். அக்டோபர் 20, 2011 அன்று, ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்திய-அமெரிக்க சமூகத்தில் உள்ள குடும்ப துஷ்பிரயோகங்களை எதிர்த்துப் போராடியதற்காகவும், அதற்கு எதிராகப் பேசியதற்காகவும் அவருக்கு ஜனாதிபதி குடிமக்கள் பதக்கத்தை மரணத்திற்குப் பின் வழங்கினார். எமானி "வீட்டு துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முன்மாதிரி" என்று விவரிக்கப்பட்டார். இந்த விருதை எமானியின் இரண்டு மகள்களான சுஜாதா மற்றும் நிர்மலா ஆகியோர் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் பெற்றுக்கொண்டனர். [3] [5]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய_லட்சுமி_எமானி&oldid=3703020" இருந்து மீள்விக்கப்பட்டது