விஞ்ஞானபிட்சு
விஞ்ஞானபிட்சு (Vijnanabhiksu) மத்தியகால இந்தியாவின் 15 அல்லது 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த, தற்கால பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்து தத்துவஞானி.[[1][2] இந்து தத்துவங்களின் பல்வேறு பள்ளிகள், குறிப்பாக பதஞ்சலி யோகசூத்திரம் உரைக்கு, இவரது யோகவர்த்திகா எனும் விளக்க உரைக்காக விஞ்ஞானபிட்சு பெரிதும் அறியப்பட்டவர்.[3] வேதாந்தம், யோகம் மற்றும் சாங்கிய தத்துவங்களுக்கிடையில் ஒருமைப்பாடு இருப்பதாக அறிவித்த விஞ்ஞானபிட்சுவின் புலமையால் பெரிதும் அறியப்படுகிறார்.[4][5] மேலும் இவர் நவீன காலத்தின் புதிய-வேதாந்தம் இயக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறார்.
தத்துவம்
தொகுவிஞ்ஞானபிட்சு, 15ம் நூற்றாண்டில் இந்தியத் தத்துவத்தின் மூன்று வெவ்வேறு பள்ளிகளான வேதாந்தம், சாங்கியம் மற்றும் யோகா ஆகியவற்றிற்கு விளக்க உரைகள் எழுதினார். மேலும் வேதாந்தத்தின் பேதாபேதம் மற்றும் அத்வைதம் ஆகிய இரண்டு துணைப் பள்ளிகளுக்கும் சொந்தமான இரண்டல்ல எனும் தத்துவத்தை ஒருங்கிணைத்தார்.[4][6] ஆண்ட்ரூ நிக்கல்சனின் கூற்றுப்படி, இது புதிய-வேதாந்தத்தின் அடிப்படையாக மாறியது. அவரது ஒருங்கிணைப்பு அவிபாக அத்வைதம் ("பிரிந்து பார்க்க முடியாத இருமைவாதம்") என்று அழைக்கப்படுகிறது. யோக சூத்திரங்கள் பற்றிய அவரது துணை வர்ணனையான யோகவர்த்திகா ஒரு செல்வாக்கு மிக்க படைப்பாக உள்ளது.
ஆண்ட்ரூ கோட்டையின் கூற்றுப்படி, விஞ்ஞானாபிட்சுவின் வர்ணனை யோக அத்வைதம் ஆகும். ஏனெனில் அவரது வர்ணனை அத்வைதத்தின் தாக்கம் கொண்ட சாங்கிய யோகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவர் ஆன்மீக ரீதியில் விடுதலை பெற்ற நபரை சீவன் முக்தனாக கருதுகிறார்.[5][7]
படைப்புகள்
தொகுவிஞ்ஞானபிட்சு சமசுகிருத மொழியில் எழுதிய சில நூல்கள்:[8]
- விஞ்ஞான அமிர்த பாஷ்யம் (பிரம்ம சூத்திரத்திற்கான விளக்க உரை)
- ஈஸ்வர கீதா பாஷ்யம் ("ஈஸ்வர கீதைக்கான விளக்க உரை)
- சாங்கிய சாரம்
- சாங்கிய சூத்திர பாஷ்யம் (கபிலர் (சாங்கியம்)|கபிலரின்]] சாங்கிய சூத்திரங்களுக்கு விளக்க உரை)
- யோகசார சம்கிரகம் (பதஞ்சலி யோக சூத்திரத்திற்கான விளக்க உரை)
- யோக பாஷ்ய வார்த்திகா (பதஞ்சலி யோக சூத்திரத்திற்கான வியாசரின் உரைக்கு விளக்க உரை)
ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள்
தொகு- Ganganatha Jha, Yogasarasamgraha of Vijnanabhiksu, New Delhi: Parimal Publications, 1995.
- José Pereira, Hindu Theology: A Reader, Garden City: Doubleday, 1976. Includes translated excerpts from Vijnanamritabhashya and Sankhyasutrabhashya.
- T. S. Rukmani, Yogavarttika of Vijnanabhiksu, New Delhi: Munshiram Manoharlal, 1981.
- Nandalal Sinha, The Samkhya Philosophy, New Delhi: Oriental Books Reprint Corporation, 1979. Contains a complete translation of Vijnanabhikshu's Sankhyasutrabhashya.
- Shiv Kumar, Samkhyasara of Vijnanabhiksu, Delhi: Eastern Book Linkers, 1988.
மேற்கோள்கள்
தொகு- ↑ T. S. Rukmani (1978), VIJÑĀNABHIKṢU ON BHAVA-PRATYAYA AND UPĀYA-PRATYAYA YOGĪS IN YOGA-SUTRAS, Journal of Indian Philosophy, Vol. 5, No. 4 (August 1978), pages 311-317
- ↑ Andrew O. Fort (2006), Vijñānabhikṣu on Two Forms of "Samādhi", International Journal of Hindu Studies, Vol. 10, No. 3 (Dec., 2006), pages 271-294
- ↑ T. S. Rukmani (1988), VIJÑĀNABHIKṢU'S DOUBLE REFLECTION THEORY OF KNOWLEDGE IN THE YOGA SYSTEM, Journal of Indian Philosophy, Vol. 16, No. 4 (DECEMBER 1988), pages 367-375
- ↑ 4.0 4.1 Nicholson 2007
- ↑ 5.0 5.1 Edwin Francis Bryant; Patañjali (2009). The Yoga sūtras of Patañjali: a new edition, translation, and commentary with insights from the traditional commentators. North Point Press. pp. 190, 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86547-736-0.
- ↑ Borelli, John (1978). "Vijnanabhiksu and the Re-Assertion of Difference-in-Identity Vedanta". Philosophy East and West 28 (4): 425–437. doi:10.2307/1398647.
- ↑ Andrew O. Fort (1998). Jivanmukti in Transformation: Embodied Liberation in Advaita and Neo-Vedanta. State University of New York Press. p. 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-3904-3.
- ↑ Sato, Hiroyuki (1989). "Vijñanabhiksu's Theory of Mutual Projection". Journal of Indian and Buddhist Studies (Japanese Association of Indian and Buddhist Studies) 37 (2): 945–943. doi:10.4259/ibk.37.945.
உசாத்துணை
தொகு- Burley, Mikel (2007), Classical Samkhya and Yoga: An Indian Metaphysics of Experience, Taylor & Francis
- Lorenzen, David N. (2006), Who Invented Hinduism: Essays on Religion in History, Yoda Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788190227261
- Nicholson, Andrew (2007), "Reconciling Dualism and Non-Dualism: Three Arguments in Vijñānabhikṣu's Bhedābheda Vedānta", Journal of Indian Philosophy, 35 (3): 2007, pp 371–403, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/s10781-007-9016-6, S2CID 170439037
- Nicholson, Andrew J. (2010), Unifying Hinduism: Philosophy and Identity in Indian Intellectual History, Columbia University Press
- Daniel P. Sheridan, "Vijnanabhikshu", in Great Thinkers of the Eastern World, Ian McGready, ed., New York: Harper Collins, 1995, pp. 248–251.
வெளி இணைப்புகள்
தொகு- A General Idea of Vijñāna Bhikṣu’s Philosophy, Surendranath Dasgupta, 1940
- Chapter one of Vijnanabhiksu's Ishvaragitabhashya (Sanskrit only; PDF Format).