விஞ்ஞான ரத்னா விருது

விஞ்ஞான ரத்னா விருது (Vigyan Ratna Award) என்பது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் சாதனைகள் செய்ததற்காக ஒரு தனிநபருக்கு இந்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருது ஆகும்.[1][2] இது நோபல் பரிசுக்குச் சமமான இந்திய விருது என்று கூறப்படுகிறது.[3] இந்த விருது, மற்ற மூன்று விருதுகளுடன், அதாவது, விஞ்ஞான் சிறீ, விஞ்ஞான யுவ-எசு. எசு. பி மற்றும் விஞ்ஞான குழு ஆகிய விருதுகளுடன் 2023ஆம் ஆண்டில் இந்திய அரசின் இராட்டிரிய விஞ்ஞான புரசுகார் திட்டத்தின் கீழ் ஒரு தொகுப்பாக நிறுவப்பட்டு 2024ஆம் ஆண்டில் முதல் முறையாக வழங்கப்பட்டன.

விஞ்ஞான ரத்னா விருது
விருது வழங்குவதற்கான காரணம்அறிவியல், தொழில்நுட்பம், புதுமைக்கான தனி மனித வாழ்நாள் சாதனை விருது
இதை வழங்குவோர்இந்திய அரசு
நாடுஇந்தியா
வெகுமதி(கள்)சான்றிதழ், பதக்கம்
முதலில் வழங்கப்பட்டது2024
இணையதளம்awards.gov.in
2024 ஆகத்து 22-இல் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து முதல் முறையாக விக்யான் ரத்னா விருது பெரும் கோ. பத்மநாபன்

இராட்டிரிய விஞ்ஞான புரசுகார் திட்டத்தின் நோக்கம், இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்கள் தனித்தனியாகவோ அல்லது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பல்வேறு துறைகளில் குழுக்களாகவோ செய்த சிறந்த மற்றும் ஊக்கமளிக்கும் பங்களிப்புகளை அங்கீகரிப்பதாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வாழ்நாள் சாதனை மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக விஞ்ஞான ரத்னா விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக மூன்று நபர்கள் விஞ்ஞாயன ரத்னா விருதைப் பெறுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 23ஆம் தேதியன்று வரும் தேசிய விண்வெளி நாளன்று இந்த விருதுகள் வழங்கப்படும்.

மூன்று நபர்களுக்கு விஞ்ஞான ரத்னா விருது வழங்க இந்தத் திட்டம் திட்டமிட்டிருந்தாலும், தொடக்க ஆண்டில், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் கோவிந்தராஜன் பத்மநாபன் என்ற ஒரே நபருக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டது. உயிரியல் அறிவியலில் குறிப்பிடத்தக்க மற்றும் ஊக்கமளிக்கும் பங்களிப்புகளுக்காக இவர் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]

விருது பெற்றோர் பட்டியல்

தொகு
ஆண்டு விருது பெற்றவர் படம் நிறுவனம் துறை
2024[6][7] கோவிந்தராசன் பத்மநாபன்   இந்திய அறிவியல் கழகம். பெங்களூரு உயிரியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Call for Nominations announced under Rashtriya Vigyan Puraskar 2024". pib.gov.in. Press Information Bureau, Govt. of India. பார்க்கப்பட்ட நாள் 15 August 2024.
  2. "Rashtriya Vigyan Puraskar 2024". awards.gov.in. CASU, Ministry of Home Affairs, Government of India. பார்க்கப்பட்ட நாள் 15 August 2024.
  3. Rohini Krishnamurthy. "Government discontinues science, health awards; to establish 'Vigyan Ratna' on lines of Nobel Prize". www.downtoearth.org.in. Down To Earth. பார்க்கப்பட்ட நாள் 16 August 2024.
  4. "Rashtriya Vigyan Puraskar (RVP) - 2024 : Final List of Awardees" (PDF). awards.gov.in. CASU, Ministry of Home Affairs, Government of India. பார்க்கப்பட்ட நாள் 15 August 2024.
  5. "Rashtriya Vigyan Puraskar: Chandrayaan-3 team and 32 others selected for first ever edition". economictimes.indiatimes.com. The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 15 August 2024.
  6. "Rashtriya Vigyan Puraskar (RVP) - 2024 : Final List of Awardees" (PDF). awards.gov.in. CASU, Ministry of Home Affairs, Government of India. பார்க்கப்பட்ட நாள் 15 August 2024.
  7. "Rashtriya Vigyan Puraskar: Chandrayaan-3 team and 32 others selected for first ever edition". economictimes.indiatimes.com. The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 15 August 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஞ்ஞான_ரத்னா_விருது&oldid=4082592" இலிருந்து மீள்விக்கப்பட்டது