கோவிந்தராசன் பத்மநாபன்

கோவிந்தராசன் பத்மநாபன் (Govindarajan Padmanaban)(பிறப்பு 20 மார்ச் 1938, சென்னை) என்பார் இந்திய உயிர்வேதியியலாளர் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலாளர் ஆவார். இவர் இந்திய அறிவியல் கழகத்தின் (ஐ.ஐ.எஸ்.சி) முன்னாள் இயக்குநராக இருந்தார். தற்போது ஐ.ஐ.எஸ்.சி.யில் உயிர் வேதியியல் துறையில் கெளரவ பேராசிரியராக பணியாற்றுகிறார்.

கோவிந்தராசன் பத்மநாபன்
பிறப்பு20 மார்ச்சு 1938 (1938-03-20) (அகவை 85)
சென்னை, இந்தியா
வாழிடம்இந்தியா
தேசியம்இந்தியன்
துறைஉயிர்வேதியியல்
பணியிடங்கள்இந்திய அறிவியல் கழகம்
தூய மரியன்னை மருத்துவமனை மருத்துவப் பள்ளி
சிகாகோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்இந்திய அறிவியல் கழகம், பெங்களூரூ
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், புது தில்லி
மாநிலக் கல்லூரி, சென்னை
ஆய்வு நெறியாளர்பி எஸ் சர்மா
விருதுகள்பத்மபூசண் (2003)
பத்மஸ்ரீ (1991)
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1983)

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

பத்மநாபன் பொறியாளர்களின் குடும்பத்தினைச் சார்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆனால் பெங்களூரில் குடியேறினார். பெங்களூரில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். பொறியியலில் அதிக ஆர்வமின்மை காரணமாகச் சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மண் வேதியியலில் முதுகலைப் படிப்பையும், முனைவர் பட்ட ஆய்வினை 1966இல் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ( ஐ.ஐ.எஸ்.சி ) உயிர் வேதியியலில் பெற்றார்.[1]

ஆராய்ச்சி தொகு

தனது ஆராய்ச்சியின் ஆரம்ப ஆண்டுகளில், இவர் கல்லீரலில் யூகாரியோடிக் மரபணுக்களின் வரிவடிவாக்க ஒழுங்குமுறையில் பணியாற்றினார். செல்களின் செயல்முறைகளில் பன்முகப் பங்கைத் தெளிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டினார். இவரது ஆய்வுக் குழுவினர் மலேரியா ஒட்டுண்ணியில் உள்ள ஹீம்-உயிரி உற்பத்தி வழி அமைவில் மருந்தின் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தடுப்பூசி வளர்ச்சியிலும் இவர் ஆர்வம் காட்டியுள்ளார். இவர்கள் குர்குமினின் மலேரியா எதிர்ப்புத் தன்மை மற்றும் கூட்டுச் சிகிச்சையில் இதன் செயல்திறனை ஆராய்ந்ததில் 2004ஆம் ஆண்டு வெற்றிபெற்றனர்.[2]

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Diamond, Bruce (2003). "Profile: Govindarajan Padmanaban". Nature Medicine 9 (8): 985. doi:10.1038/nm0803-985. பப்மெட்:12894150. 
  2. Reddy, Raju C.; Vatsala, Palakkodu G.; Keshamouni, Venkateshwar G.; Padmanaban, Govindarajan; Rangarajan, Pundi N. (2005). "Curcumin for malaria therapy". Biochemical and Biophysical Research Communications 326 (2): 472–4. doi:10.1016/j.bbrc.2004.11.051. பப்மெட்:15582601. 
  3. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து 15 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. 
  4. "List of Fellows NAMS". National Academy of Medical Sciences. 2016. http://www.nams-india.in/downloads/fellowsmembers/ZZ.pdf. 

வெளி இணைப்புகள் தொகு

வார்ப்புரு:S-aca
முன்னர்
சி என் ஆர் ராவ்
இயக்குநர், இந்திய அறிவியல் கழகம்
1994–1998
பின்னர்
கோவர்த்தன் மேத்தா