விடத்தல்பளை

விடத்தல்பளை, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த ஓர் ஊர்.[1] இவ்வூர் நாவற்குழி-காரைதீவு-மன்னார் நெடுஞ்சாலையை அண்டி நாவற்குழியில் இருந்து ஏறத்தாழ 7.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து இதன் தொலைவு ஏறத்தாழ 16 கிலோமீட்டர். விடத்தல்பளையைச் சுற்றிலும், கரம்பகம், கெற்பேலி ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன.

நிறுவனங்கள்தொகு

விடத்தல்பளையில் கமலாசனி வித்தியாலயம் என்னும் பாடசாலை உள்ளது.[2] இப்பாடசாலையில் முதலாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரையில் கற்பிக்கப்படுகிறது. இவ்வூரில் அலங்கார வேலாயுத சுவாமி கோயில் என்னும் கோயில் உள்ளது.[3]

மேற்கோள்கள்தொகு

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 33.
  2. School Net – Sri Lanka
  3. Department of Hindu Religious and Cultural Affairs

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விடத்தல்பளை&oldid=2771821" இருந்து மீள்விக்கப்பட்டது