விடுதலைப்புலிகள் (பத்திரிகை)

விடுதலைப்புலிகள் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வப் பத்திரிகையாகும்.

விடுதலைப்புலிகள்
வகைமாதம் செய்தித்தாள்
வடிவம்பெரியதாள்
உரிமையாளர்(கள்)தமிழீழ விடுதலைப்புலிகள்
தலைமை ஆசிரியர்நித்தியானந்தன்
நிறுவியது1984, மார்ச், 15
மொழிதமிழ்
தலைமையகம்அடையாறு, சென்னை 20 - கிளிநொச்சி

ஆரம்பம்

தொகு

இப் பத்திரிகை 1984இல் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைக்கப் பட்டது. பன்னிரண்டு பத்திரிகைகள் தமிழ்நாட்டில் இருந்து வெளியாகின.[1] அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பத்திரிகையின் மேற்பார்வையாளராகச் செயற்பட்டார்.[2]

இடைநிறுத்தம்

தொகு

1986இல் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தமிழநாட்டிலிருந்து வெளியேறி தமிழீழத்துக்கு வந்ததும் 'விடுதலைப்புலிகள்' பத்திரிகை அச்சாவது நின்று போனது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்திய – புலிகள் போர்க்காலத்திலும் பத்திரிகை வெளிவரவில்லை.

மீண்டும் ஆரம்பம்

தொகு

1990 இல் இந்திய இராணுவம் ஈழத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து 1990, பெப்ரவரி மாதத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீண்டும் இப் பத்திரிகையை ஆரம்பிக்கும் படி ஆணையிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் பத்திரிகையின் 13வது ஏடு 1990, ஏப்ரல் 15 இல் தமிழீழத்தில் வெளியானது.

செயற்பாடு

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


மேற்கோள்கள்

தொகு