விண்மீன் கோட்டை, மாத்தறை

விண்மீன் கோட்டை (Star Fort) என்பது நிலவை கங்கையின் கிழக்குக் கரையில் மாத்தறைக் கோட்டையின் வாயிலுக்கு சுமார் 350 மீட்டர்கள் (1,150 அடி) தொலைவில் அமைந்துள்ள கோட்டையாகும். விண்மீன் கோட்டை 1765 இல் ஒல்லாந்தரால் கட்டப்பட்டது.

விண்மீன் கோட்டை
பகுதி: மாத்தறை
மாத்தறை
நுழை வாயில்
விண்மீன் கோட்டை is located in இலங்கை
விண்மீன் கோட்டை
விண்மீன் கோட்டை
ஆள்கூறுகள் 5°56′53″N 80°32′54″E / 5.94806°N 80.54833°E / 5.94806; 80.54833
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கை அரசாங்கம்
மக்கள்
அநுமதி
ஆம்
நிலைமை நன்று
இட வரலாறு
கட்டிய காலம் 1763–65
கட்டியவர் நெதர்லாந்து
கட்டிடப்
பொருள்
கருங்கற்பாறைகள், பவளப்பாறை

1640 இல், ஒல்லாந்தர் பிரதான கோட்டையை மாத்தறையில் கட்டி முடித்தனர். ஆயினும் நிலப்பகுதியில் இருந்து வரும் தாக்குதலை எதிர்கொள்வதில் பலவீனமாக இருந்தது. 1762 இல் கண்டி அரசினால் உதவியளிக்கப்பட்ட சிங்களப் படைகள் இதனைத் தாக்கி, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.[1] ஒல்லாந்தர் இதனை 1763 இல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதே வருடம் ஒரு சிறிய கோட்டையை நிலவை கங்கையின் கிழக்குக் கரையில், இக்கோட்டையின் பாதுகாப்பிற்காக அமைத்தனர்.

உசாத்துணை தொகு

  1. Kulatunge, Manuri (30 June 2013). "How the Dutch Fortified Matara with Star Fort". The Nation இம் மூலத்தில் இருந்து 19 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140819090104/http://www.nation.lk/edition/fine/item/18794-how-the-dutch-fortified-matara-with-star-fort.html. பார்த்த நாள்: 15 August 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்மீன்_கோட்டை,_மாத்தறை&oldid=3228657" இலிருந்து மீள்விக்கப்பட்டது