விண்மீன் புறணி
விண்மீன் புறணி (corona ) அல்லது குற்ப்பாக, சூரியப்புறணி என்பது ஒரு விண்மீனின் அல்லது சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கு ஆகும். இது ஒரு மின்ம ஊடகமாகும்.
சூரியப் (விண்மீன்) புறணி நிற மண்டலத்திற்கு மேலே அமைந்துள்ளது. விண்வெளியில் மில்லியன் கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டு செல்கிறது. இது முழு சூரிய ஒளிமறைப்பின் போது மிகவும் எளிதாகக் காணப்படுகிறது , ஆனால் இதை ஒரு சூரியப் புறணிவரைவியாலும் நோக்கலாம். கதிர்நிரல்பதிவி அளவீடுகள் சூரியப் புறணியில் செறிவான இயனியாக்கமும் ஒளிக் கோளம் எனப்படும் சூரியனின் மேற்பரப்பை விட 1000000 கெல்வின்கள் உள்ள மின்ம ஊடக வெப்பநிலையைக் குறிக்கின்றன.