விதை பரவுதல்
விதை பரவுதல் (Seed dispersal) என்பது தாய் தாவரத்திலிருந்து விதைகள் வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது அல்லது கடத்தப்படுவதைக் குறிக்கும்.[1] தாவரங்கள் அவற்றின் மட்டுப்படுத்தப்பட்ட இயக்கம் காரணமாக அவற்றின் விதைகளைக் கொண்டு செல்ல பல்வேறு பரவல் காரணிகளை நம்பியுள்ளன, இதில் காற்று போன்ற உயிரற்ற காரணிகள் மற்றும் உயிர் வாழும் காரணிகளான பறவைகள் ஆகியவையும் உள்ளடங்கும். விதைகளை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாய் தாவரத்திலிருந்து சிதறடிக்கலாம், அதே போல் வெவ்வேறு இடங்களிலோ அல்லது வெவ்வேறு நேரங்களிலோ பரவலுக்குட்படலாம். விதை பரவலின் வடிவங்கள் பரவல் வழிமுறைகளால் பெருமளவில் தீர்மானிக்கப்படுகின்றன, மேலும் இது தாவரத்தொகையின் அடர்த்தி மற்றும் மரபியல் அமைப்பு, அத்துடன் வடிவங்கள் மற்றும் இனங்களின் தொடர்புகளுக்கு முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. விதை பரவலில் ஐந்து முக்கிய முறைகள் உள்ளன. அவை, ஈர்ப்பு, காற்று, வீசி எறியப்படுதல், நீர் மற்றும் விலங்குகள் போன்றவை ஆகும். சில தாவரங்கள் மரபுவழி மற்றும் சுற்றுச்சூழல் தூண்டுதலுக்கு பதிலளிக்கும் வகையில் மட்டுமே அவற்றின் விதைகளை பரப்புகின்றன.[1].[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Howe, H F; Smallwood, J (November 1982). "Ecology of Seed Dispersal" (in en). Annual Review of Ecology and Systematics 13 (1): 201–228. doi:10.1146/annurev.es.13.110182.001221. பன்னாட்டுத் தர தொடர் எண்:0066-4162.
- ↑ Green, Andy J.; Baltzinger, Christophe; Lovas‐Kiss, Ádám (2021-06-24). "Plant dispersal syndromes are unreliable, especially for predicting zoochory and long‐distance dispersal". Oikos 2022 (2). doi:10.1111/oik.08327. பன்னாட்டுத் தர தொடர் எண்:0030-1299. https://onlinelibrary.wiley.com/doi/full/10.1111/oik.08327.
- ↑ Bullock, James M.; Shea, Katriona; Skarpaas, Olav (2006-10-01). "Measuring plant dispersal: an introduction to field methods and experimental design" (in en). Plant Ecology 186 (2): 217–234. doi:10.1007/s11258-006-9124-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-5052. https://doi.org/10.1007/s11258-006-9124-5.