வினய் குமார் திரிபாதி

இந்தியப் பொறியியலாளர்

வினய் குமார் திரிபாதி (Vinay Kumar Tripathi) இந்தியாவைச் சேர்ந்த தொடர்வண்டி இயக்கு பொறி பொறியியலாளர் ஆவார். இந்திய இரயில்வே அதிகாரியான இவர் இரயில்வே வாரியத்தின் தலைவராக பணியாற்றுகிறார். வடகிழக்கு இரயில்வே மண்டலத்தின் பொது மேலாளராகப் பணியாற்றினார். வினய் குமார் திரிபாதி 1983 ஆம் ஆண்டு இந்திய இரயில்வே மின் பொறியாளர் சேவைக்காகத் தேர்வான அதிகாரி ஆவார்.

வினய் குமார் திரிபாதி ரூர்க்கியில் இருந்து மின் பொறியியலில் பட்டம் பெற்றார். 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய இரயில்வே தேர்வாணையம் மூலம் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று இந்திய இரயில்வேயில் சேர்ந்தார். வடக்கு இரயில்வேயில் மின் பொறியாளர் பதவி திரிபாதியின் முதல் பதவியாக அமைந்தது.

வினய் குமார் திரிபாதி, இந்திய இரயில்வேயில் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய போது, அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்தில் உயர் நிர்வாகப் பயிற்சித் திட்டங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்புகளைப் பெற்றார். இந்திய இரயில்வேயில் நவீன மூன்று கட்ட இரயில் இயந்திரங்களை இயக்குவதில் முக்கியப் பங்காற்றினார். வினய் குமார் திரிபாதியின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் வடகிழக்கு இரயில்வே இரண்டு இரயில்வே வாரிய கேடயங்களை வென்றது. விற்பனை மேலாண்மைக்காகவும் மற்றொன்று ஓடும் அறை பிரிவுக்காகவும் இக்கேடயங்கள் கிடைத்தன.[1][2][3][4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. Thakur, Rajesh Kumar. "Vinay Kumar Tripathi appointed as new chairman of Railway Board". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 2022-12-10.
  2. Singh, Vinod. "रेलवे बोर्ड के नए चेयरमैन वीके त्रिपाठी का प्रयागराज से है गहरा नाता". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-12-10.
  3. Shukla, Satish. "पूर्वोत्तर रेलवे के नए महाप्रबंधक बने विनय कुमार त्रिपाठी". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-12-10.
  4. Tripathi, Shailaja (2022-01-03). "Vinay Kumar Tripathi becomes new Chairman, CEO of Railway Board". Jagran Josh. பார்க்கப்பட்ட நாள் 2022-12-10.
  5. Athrady, Ajith (2021-12-31). "V K Tripathi new Railway Board Chairman". டெக்கன் ஹெரால்டு (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினய்_குமார்_திரிபாதி&oldid=3940272" இலிருந்து மீள்விக்கப்பட்டது