வினீதா குப்தா

வினீதா குப்தா (Vineeta Gupta) ஓர் அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் மற்றும் பரோபகாரர் ஆவார்.[1][2][3] இவர் எச்ஐவி/எய்ட்ஸ் நிறுத்து, இந்தியா முன்முயற்சியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஆவார்.[4][5][6]

கல்வி

தொகு

குப்தா இந்தியாவில் பிறந்தார். இங்கு இவர் மருத்துவம் மற்றும் சட்டத்துறைகளில் பட்டம் பெற்றார்.[7] பின்னர், இவர் நோட்ரெ டேம் பல்கலைக்கழகத்தில் பயின்றார். இங்கு இவர் பன்னாட்டு மனித உரிமைகள் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[8][9]

குப்தா சேரிகளில் பணிபுரியும் அரசு மருத்துவ அதிகாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[10] இவரது தொழில் வாழ்க்கையில், இவர் 1990களில் பஞ்சாபில் மருத்துவ சேவை வகுப்பு அதிகாரியாக பணியாற்றினார். மக்கள் சிவில் உரிமைகளுக்கான கழகம் பணியாற்றினார். இங்கு இவர் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முயன்றார்.[3][10][11] வினீதா குப்தா & பஞ்சாப் மாநிலம் என்ற வழக்கில், பஞ்சாபில் நடுவண் ஒற்று முகமை அலுவலகங்கள், விசாரணை மையங்கள் மற்றும் காவல் நிலையங்களில் சித்திரவதைக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக வாதிட்டு வெற்றி பெற்றார்.[12] 2001ஆம் ஆண்டு பஞ்சாபில் ஒரு மருத்துவமனையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக இவர் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டார்.[13] பன்னாட்டு மன்னிப்பு அவை மனித உரிமைகள் அறிக்கை, பஞ்சாப் அரசாங்கம் குப்தாவை அநீதிக்குச் சவால் விடுத்ததற்காகத் துன்புறுத்தியதை ஆவணப்படுத்தியது.[13]

இந்தியாவில் எச்.ஐ.வி/ எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க குப்தா, எச்ஐவி/எய்ட்சை நிறுத்து இந்தியா முன்முயற்சியை நிறுவினார்.[8][9][14] இந்த அமைப்பினை நிறுவுவதற்கு முன்பு, இவர் இன்சாப் பன்னாட்டு அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தார்.[9]

2020 முதல் 2022 வரை, குப்தா ஆக்சன் குளோபல் ஹெல்த் அட்வகேசியின் செயலக இயக்குநராகப் பணியாற்றினார்.[8][14][15] இதில் சேர்வதற்கு முன்பு, இவர் குளோபல் ஹெல்த் அட்வகேசி இன்குபேட்டரில் இயக்குநராக இருந்தார்.[9]

2022-இல், குப்தா பொதுச் சுகாதார சட்டத்திற்கான வலையமைப்பின் நிர்வாக இயக்குநராகச் சேர்ந்தார்.[9]

குப்தா, பாலின உணர்திறன் மீது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவத்துடன், அணுகக்கூடிய சுகாதார அமைப்புகளை, மலிவு விலையில் பொதுவான மருந்துகளை உருவாக்க உதவினார். பொது மருந்துகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தக்கூடிய இந்தியக் காப்புரிமைச் சட்டத்தில் திருத்தங்களை எதிர்க்கும் பணிக்காகவும் அவர் அறியப்படுகிறார்.[7][16]

மேற்கோள்கள்

தொகு
  1. "Vineeta Gupta". C-SPAN.
  2. "Unhealthy policies from the world bank: An interview with Vineeta Gupta". Multinational Monitor.
  3. 3.0 3.1 Stycos, Steven (21 September 2001). "The Providence Phoenix This Just In". Providence Phoenix.
  4. "HIV infections: India flayed for scant action". ஹிந்துஸ்தான் டைம்ஸ். June 2, 2006.
  5. Ismail, M. Asif (December 13, 2006). "PEPFAR policy hinders treatment in generic terms". Center for Public Integrity.
  6. "The forgotten face". Frontline. June 29, 2006.
  7. 7.0 7.1 Kaung, Kyi May. "Vineeta Gupta profile".
  8. 8.0 8.1 8.2 "Vineeta Gupta, '04 LL.M. | The Law School | University of Notre Dame". November 19, 2020.
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 "Vineeta Gupta Archives". Archived from the original on 2024-02-12. பார்க்கப்பட்ட நாள் 2024-02-14.
  10. 10.0 10.1 Roy, Sandip (March 28, 2007). "AIDS in India, NRIsin the U.S. Building Bridges". India Currents.
  11. "The Danish Immigration Service: Report on fact-finding mission to Punjab, India" (PDF).
  12. "VINEETA GUPTA VS. STATE OF PUNJAB".
  13. 13.0 13.1 "UNHCR Web Archive".
  14. 14.0 14.1 "Working towards vaccine equity to leave no one behind". Gavi, the Vaccine Alliance.
  15. Pai, Madhukar. "Double Agents In Global Health". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-14.
  16. "World beat". January 16, 2005 – via தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினீதா_குப்தா&oldid=4108404" இலிருந்து மீள்விக்கப்பட்டது