வினைல்சல்போனிக் அமிலம்

வேதிச் சேர்மம்

வினைல்சல்போனிக் அமிலம் (Vinylsulfonic acid) என்பது CH2=CHSO3H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு கரிமக் கந்தகச் சேர்மமாகும். நிறைவுறாத சல்போனிக் அமிலத்திற்கு ஓர் எளிய எடுத்துக்காட்டாக வினைல்சல்போனிக் அமிலம் கருதப்படுகிறது. [2] இச்சேர்மத்தின் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள C=C இரட்டைப் பிணைப்பினால் அதிக அளவிலான வினைகளில் வினைல்சல்போனிக் அமிலம் ஈடுபடுகிறது.

வினைல்சல்போனிக் அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தீன்சல்போனிக் அமிலம்
இனங்காட்டிகள்
1184-84-5 Y
3039-83-6 (சோடியம் உப்பு) Y
ChemSpider 56254
InChI
  • InChI=1S/C2H4O3S/c1-2-6(3,4)5/h2H,1H2,(H,3,4,5)
    Key: NLVXSWCKKBEXTG-UHFFFAOYSA-N
  • InChI=1/C2H4O3S/c1-2-6(3,4)5/h2H,1H2,(H,3,4,5)
    Key: NLVXSWCKKBEXTG-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62474
SMILES
  • C=CS(=O)(=O)O
UNII GJ6489R1WE Y
F7K3L38Z7B (சோடியம் உப்பு) Y
பண்புகள்
C2H4O3S
வாய்ப்பாட்டு எடை 108.11 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
கொதிநிலை 128 °செல்சியசு[1]
* 95 °C  
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வினைல் வேதி வினைக்குழுவாக [3] இடம்பெற்றுள்ள சேர்மங்கள் மற்றும் மெத்(அக்ரைலிக்) அமிலச் சேர்மங்கள்[4] ஆகியவற்றுடன் வினைல்சல்போனிக் அமிலத்தை ஓர் இணை ஒருமமாக பயன்படுத்தி பலபடியாதல் வினைக்கு உட்படுத்தினால் பாலிவினைல்சல்போனிக் அமிலம் கிடைக்கிறது. வினைல்சல்போனிக் அமிலம் நிறமற்றதாகவும் நீரில் கரையக்கூடியதாகவும் உள்ளது. வணிக மாதிரிகள் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்திலும் காணப்படுகின்றன.

தயாரிப்பு தொகு

கார்பைல் சல்பேட்டை கார நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி தொழிற்சாலைகளில் வினைல்சல்போனிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. விளைபொருளாக உருவாகும் வினைல் சல்போனேட்டை தொடர்ந்து அமிலமாக்கல் வினைக்கும் உட்படுத்தினால் வினைல்சல்போனிக் அமிலம் உருவாகிறது.[5]

 

வினையானது அதிக அளவு வெப்ப உமிழ்வினையாகும் (வினை வெப்ப அடக்கம் 1,675 கிலோயூல்/கிலோகிராம்) எனவே நீராற்பகுப்பின் போது வெப்பநிலை மற்றும் pH இன் சரியான பராமரிப்பு தேவைப்படுகிறது. கால்சியம் ஐதராக்சைடை நீராற்பகுப்பு ஊடகமாகப் பயன்படுத்தும்போது, கால்சியம் வினைல் சல்போனேட்டு கரைசல் கிடைக்கிறது. இந்த நீராற்பகுப்பு கலவையை கந்தக அமிலத்துடன் சேர்த்து அமிலமாக்கம் செய்தால் குறைவான கரைதிறன் கொண்ட கால்சியம் சல்பேட்டுடன் சேர்ந்து வினைல்சல்போனிக் அமிலமும் கிடைக்கிறது.

பாசுபரசு பெண்டாக்சைடுடன் ஐசிதயோனிக் அமிலத்தைச் சேர்த்து நீர்நீக்கம் செய்வதன் மூலமும் வினைல்சல்போனிக் அமிலத்தை தயாரிக்கலாம்.[6]

 

குளோரோயீத்தேனை சல்போகுளோரினேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம். உருவாகும் விளைபொருளில் இருந்து ஓர் ஐதரசன் ஆலைடை நீக்கம் செய்து தொடர்ந்து கிடைக்கும் குளோரைடை நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்திய பின்னர் தேவையான வினைல் சல்போனிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.

 

பயன்கள் தொகு

வினைல்சல்போனிக் அமிலத்தின் செயல்படுத்தப்பட்ட C=C இரட்டைப் பிணைப்பு ஒரு கூட்டு வினையில் மின்னணுகவரிகளுடன் உடனடியாக வினைபுரிகிறது. 2-அமினோ ஈத்தேன்சல்போனிக் அமிலம் அம்மோனியாவுடனும் மற்றும் 2-மெத்திலமினோ ஈத்தேன்சல்போனிக் அமிலம் மெத்திலமீனுடன் உருவாகின்றன. [7]

வினைல்சல்போனிக் அமிலம் அதிக அமிலத்தன்மை கொண்ட அல்லது எதிர்மின்னயன ஓரியல்பலபடிகள் மற்றும் இணைபலபடிகளை தயாரிப்பதில் பயன்படும் ஓர் ஒருமம் ஆகும். இந்த பலபடிகள் மின்னியல் துறையில் ஒளித் தடுப்பிகளாகவும் எரிபொருள் செல்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, உயர் அயனி பரிமாற்ற திறன் மற்றும் புரோட்டான் கடத்துத்திறன் கொண்ட சவ்வுகள் பாலிவினைல்சல்போனிக் அமிலத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

ஆய்வுகள் தொகு

வினைல்சல்போனிக் அமிலம் அதிக அமிலத்தன்மை கொண்ட அயனிப் பரிமாற்றிகளை வழங்க உதவும் பலபடியாக ஆராயப்பட்டுகிறது. (எ.கா. பாலி இசுடைரீன்) எசுத்தராக்கல் வினை பிரீடல் கிராப்ட்சு அசைலேற்ற வினை போன்ற வினைகளில் இது வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. [8] சல்போனிக் அமிலத்தின் செயல்பாடு அவசியமில்லாத இடங்களில், சோடியம் வினைல்சல்போனேட்டின் நீரியக் காரக் கரைசல் பயன்படுத்தப்படுகிறது, இது கார்பைல் சல்பேட்டின் கார நீராற்பகுப்பில் நேரடியாகப் பெறப்பட்டு வணிக ரீதியாக நிரிய கரைசலாக வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. H.C. Haas, M.S. Simon: Reactivity ratios of some monomer pairs in J. Polymer Sci. 9 (1952) 309–314, எஆசு:10.1002/pol.1952.120090403.
  2. Kosswig, Kurt (2000). "Sulfonic Acids, Aliphatic". Ullmann's Encyclopedia of Industrial Chemistry (Wiley-VCH). doi:10.1002/14356007.a25_503. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-527-30673-0. 
  3. EP 0643081, "Polymers of vinylsulfonic acid", issued 1995-03-15, assigned to Hoechst AG 
  4. US 2011017954, "VINYL SULFONIC ACID, POLYMER THEREOF, AND PRODUCTION METHOD THEREOF", issued 2011-01-27 
  5. US patent 3872165, "Manufacture of vinyl sulfonates and vinylsulfonic acid from carbylsulfate", issued 1975-03-18, assigned to BASF 
  6. US patent 2597696, "Preparation of ethylenesulfonic acid", issued 1952-05-20, assigned to American Cyanamid 
  7. H. Distler (1965-04-07). "Zur Chemie der Vinylsulfonsäure". Angewandte Chemie 77 (7): 291–302. doi:10.1002/ange.19650770704. 
  8. T. Okayasu, K. Saito, H. Nishide, M.T W. Hearn: Poly(vinylsulfonic acid)-grafted solid catalysts: new materials for acid-catalysed organic synthetic reactions. In: Green Chem. 12 (2010) 1981–1989, எஆசு:10.1039/C0GC00241K.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைல்சல்போனிக்_அமிலம்&oldid=3328997" இலிருந்து மீள்விக்கப்பட்டது