வினைல்சிலேன்
வினைல்சிலேன் (Vinylsilane) என்பது CH2=CHSiH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். கரிமசிலிக்கன் வகை சேர்மமான இது சிலேனின் வழிப்பெறுதியாகப் பெறப்படுகிறது. நிறமற்ற வளிமமான வினைல்சிலேன் பெரும்பாலும் கோட்பாட்டு ரீதியிலான பயன்பாடுகளை மட்டுமே கொண்டுள்ளது. [1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தினைல்சிலேன் | |
வேறு பெயர்கள்
வினைல்சிலேன்
| |
இனங்காட்டிகள் | |
7291-09-0 | |
பப்கெம் | 81714 |
பண்புகள் | |
C2H6Si | |
வாய்ப்பாட்டு எடை | 58.16 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற வளிமம் |
கொதிநிலை | -22.8 °செல்சியசு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பதிலீடு செய்யப்பட்ட வினைல்சிலேன்கள்
தொகுமூல வினைல்சிலேனைக் காட்டிலும் சிலிக்கன் மீது பிற பதிலிகள் பதிலீடு செய்யப்பட்ட வினைல் சிலேன்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. கரிமத் தொகுப்பு வினைகளில் வினைல்சிலேன்கள் பயனுள்ள இடைநிலைகளாகும். [2]
பலபடி வேதியியல் மற்றும் பொருள் அறிவியல் துறைகளில் வினைல்மும்மெத்தாக்சிசிலேன் அல்லது வினைல்மூவீத்தாக்சி சிலேன் போன்றவை ஒருமங்களாகவும் பிணைப்பு முகவர்களாகவும் செயல்படுகின்றன.
வினைல்சிலேன்கள் பெரும்பாலும் ஆல்கைன்களின் ஐதரோசிலைலேற்ற வினையின் மூலம் தயாரிக்கப்படுகின்றன. குளோரோசிலேன்களுடன் ஆல்கீனைல் லித்தியம் மற்றும் கிரிக்கனார்ட்டு வினைப்பொருள்கள் சேர்த்து வினைபுரியச் செய்தால் வினைல்சிலேனை உருவாக்கலாம். சில சந்தர்ப்பங்களில் சிலைலேற்ற ஐதரசன் நீக்கம் செய்யும் வினையும் மற்றொரு தயாரிப்பு முறையாகும். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ring, M. A.; O'Neal, H. E.; Rickborn, S. F.; Sawrey, B. A. (1983). "Kinetics of the high-temperature thermal decomposition of silanes and alkylsilanes". Organometallics 2: 1891-4. doi:10.1021/om50006a038.
- ↑ Fleming, Ian; Dunogues, Jacques; Smithers, Roger (1989). "The electrophilic substitution of allylsilanes and vinylsilanes". Organic Reactions 37: 57-575. doi:10.1002/0471264180.or037.02.
- ↑ Lu, B.; Falck, J. R. (2010). "Iridium-Catalyzed (Z)-Trialkylsilylation of Terminal Olefins". J. Org. Chem. 75: 1701-1705. doi:10.1021/jo902678p. பப்மெட்:20136153.