வினைல்லித்தியம்
வினைல்லித்தியம் (Vinyllithium) என்பது LiC2H3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமலித்தியம் சேர்மமான இச்சேர்மம் நிறமற்று அல்லது வெண்மை நிறத்துடன், பிரதானமாக டெட்ரா ஐதரோபியூரானில் ஒரு கரைசலாக வினைல்லித்தியம் பெரும்பாலும் காணப்படுகிறது [1]
இனங்காட்டிகள் | |
---|---|
917-57-7 | |
ChemSpider | 10254403 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C2H3Li | |
வாய்ப்பாட்டு எடை | 33.99 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | காற்றில் தீப்பற்றும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு மற்றும் கட்டமைப்பு
தொகுஇலித்தியம் ஆலசன் பரிமாற்ற வினைகள் மூலமாக வினைல்லித்தியம் கரைசல்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆலசன் இல்லாத வினை வகைகளில் டெட்ராவினைல்வெள்ளீயம் பியூட்டைல்லித்தியம் பயன்படுத்தப்படுகிறது.
- Sn(CH=CH2)4 + 4 BuLi → SnBu4 + 4 LiCH=CH2
எத்திலீனுடன் இலித்தியம் சேர்த்து வினைபுரியச் செய்தால் வினைல்லித்தியமும் இலித்தியம் ஐதரைடும் பிற கரிமலித்தியம் சேர்மங்களுடன் உருவாகின்றன.[1]. மற்ற கரிமலித்தியம் சேர்மங்கள் போலவே வினைல்லித்தியமும் டெட்ரா ஐதரோ பியூரானில் இருந்து கியூபேன் போன்ற கட்டமைப்பில் கொத்துச் சேர்மமாகப் படிகமாகிறது.[2]
வினைகள்
தொகுவினைல்சிலேன்கள், வினைல்குப்ரேட்டுகள்,வினைல்சிடானேன்கள் போன்றவை தயாரிப்பில் முன்னோடிச் சேர்மமாக இருப்பதால், உலோக அடிப்படை வினையாக்கிகளில் வினைல் தொகுதிகளை நிறுவதலுக்கு வினைல்லித்தியம் பயன்படுகிறது [3] அல்லைலிக் ஆல்ககால்கள் தயாரிப்பில் கீட்டோன் சேர்மங்களுடன் வினைல்லித்தியத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Eisenhart, Eric K.; Bessieres, Bernard (2007). "Vinyllithium". e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. doi:10.1002/047084289X.rv015.pub2..
- ↑ Walter Bauer, Frank Hampel (1992). "X-Ray crystal structure of a vinyllithium–tetrahydrofuran solvate (C2H3Li–thf)4. Quantitative estimation of Li–H distances by 6Li–1H HOESY". J. Chem. Soc., Chem. Commun.: 903-905. doi:10.1039/C39920000903.
- ↑ Bruce H. Lipshutz, Robert Moretti, Robert Crow (1990). "Mixed Higher-order Cyanocuprate-induced Epoxide Openings: 1-benzyloxy-4-penten-2-ol". Org. Synth. 69: 80. doi:10.15227/orgsyn.069.0080.