விபூதிபுரா ஏரி

விபூதிபுரா ஏரி (Vibhutipura Lake) என்பது பெங்களூரு நகரின் தென்கிழக்கில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஏரியாகும். இந்த ஏரி பெல்லந்தூர்-வர்த்தூர் ஏரி தொடரின் ஒரு பகுதியாகும்.

விபூதிபுரா ஏரி
Vibhutipura Lake
Vibhuthipura Lake as on 10th June 2023
விபூதிபுரா ஏரி, சூன் 10, 2023-ல்
விபூதிபுரா ஏரி Vibhutipura Lake is located in Bengaluru
விபூதிபுரா ஏரி Vibhutipura Lake
விபூதிபுரா ஏரி
Vibhutipura Lake
விபூதிபுரா ஏரி Vibhutipura Lake is located in கருநாடகம்
விபூதிபுரா ஏரி Vibhutipura Lake
விபூதிபுரா ஏரி
Vibhutipura Lake
விபூதிபுரா ஏரி Vibhutipura Lake is located in இந்தியா
விபூதிபுரா ஏரி Vibhutipura Lake
விபூதிபுரா ஏரி
Vibhutipura Lake
அமைவிடம்பெங்களூர், கருநாடகம், இந்தியா
ஆள்கூறுகள்12°58′04″N 77°40′34″E / 12.9678°N 77.6761°E / 12.9678; 77.6761
வகைஏரி
பூர்வீக பெயர்ವಿಭೂತಿಪುರ ಸರೋವರ (கன்னட மொழி)
முதன்மை வரத்துமழைப்பொழிவு
மேலாண்மை முகமைபெரிய பெங்களூர் மாநகரப் பேரவை
கட்டியது1903 (1903) போசாளப் பேரரசு
மேற்பரப்பளவு43 ஏக்கர்கள் (17 ha)
அதிகபட்ச ஆழம்3 மீட்டர்கள் (9.8 அடி)
மேற்கோள்கள்[1]
விபூதிபுரா ஏரியும் சுற்றியுள்ள பகுதிகளும்

வரலாறு தொகு

விபூதிபுராவில் உள்ள ஒரு ஏரி போசாளப் பேரரசினால் (10-14 ஆம் நூற்றாண்டு) உருவாக்கப்பட்டது.[2] 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இப்பகுதியில் ஒரு கிராமம் மற்றும் குளத்தை உருவாக்கியதை விவரிக்கிறது.[2]

இந்த ஏரியை மாநில வனத்துறை பராமரித்து வந்தது.[3] இதனுடைய நிர்வாகம் பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்திடமும் பின்னர் பெரிய பெங்களூரு மகாநகர பேரவையிடமும் ஒப்படைக்கப்பட்டது.[4]

ஏரியில் கழிவுநீர் வரத்து, குப்பைக் கொட்டுதல் மற்றும் ஆக்கிரமிப்பு போன்றவற்றைத் தொடர்ந்து இப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.[5] இதன் விளைவாக ஏரியின் நிர்வாகத்திற்கு ஒரு ஜனரஞ்சக அணுகுமுறை ஏற்பட்டது.[5] குடியிருப்பு சங்கங்கள் மற்றும் விபூதிபுரா கேரே மேம்பாட்டுச் சங்கம் ஏரியை மீட்டெடுப்பதற்காகப் பிரச்சாரம் செய்துள்ளன.[6] மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் நடைபாதை அமைத்தல் மற்றும் வேலி அமைத்தல் ஆகியவை அடங்கும். பொழுதுபோக்கு பயன்பாடு அதிகரித்துள்ளது.[7] ஏரியில் பருவகாலத்தில் நீர் நிரம்பியும் கோட்டைக் காலத்தில் வறண்டுவிடுகிறது. வறண்ட காலத்தின் போது, ஏரியின் படுகையில் மட்டைப்பந்து விளையாடுவதும் மேய்ச்சல் போன்ற அதிகாரப்பூர்வமற்ற நடவடிக்கைகளும் நடைபெறுகிறது.[8] இது குறித்த செய்திகள் ஊடகங்களிலும் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளன.[9]

2023 தொகு

ஏப்ரல் 2023-ல், ஏரியில் வசிக்கும் நீர் பதுமராகங்கள் சுத்தம் செய்யப்பட்டது. இது ஏரியின் புத்துணர்ச்சிக்கு வழிவகுத்தது. ஏரியில் தண்ணீர் நிரம்பியிருப்பது கண்கொள்ளாக் காட்சி. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில், தற்போதும் ஏரியில் கழிவுநீர் கலக்கின்றது. ஆறு ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. களை அகற்றும் போது உடைந்த நடைபாதை இன்னும் சீரமைக்கப்படவில்லை.

ஆக்கிரமிப்பு தொகு

ஏரிப்பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. வேலி உடைக்கப்பட்டு, பைஞ்சுதை சுவர்கள் எழுப்பப்பட்டு வருகின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. Final Report on Inventorisation of Water Bodies in Bengaluru Metropolitan Area (BMA), vol. II: Lake Database and Atlas (Part-2: Bengaluru East Taluk), Funded by Karnataka Lake Conservation and Development Authority (KLCDA), Centre for Lake Conservation (CLC), Environmental Management and Policy Research Institute (EMPRI) (Department of Forest, Ecology and Environment, Government of Karnataka), March 2018, pp. 890, 916, 930, 1092{{citation}}: CS1 maint: others (link)
  2. 2.0 2.1 Harini Nagendra (2016). Nature in the City: Bengaluru in the Past, Present, and Future. Oxford University Press. பக். 163–164. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-908968-0. https://archive.org/details/nlsiu.508.95487.nag.36418. 
  3. Patel, Bharat A. (3 June 2015). "Vibuthipura lake gasping for breath". Bangalore Mirror. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  4. "Vibhutipura Lake stinks no more". Bangalore Mirror. 26 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  5. 5.0 5.1 Nath, Sanchayan (2021-05-19). "Managerial, clientelist or populist? Lake governance in the Indian city of Bangalore" (in en). Water International 46 (4): 524–542. doi:10.1080/02508060.2021.1926827. பன்னாட்டுத் தர தொடர் எண்:0250-8060. 
  6. "Bengaluru: Activists organise run to save Vibhutipura lake". Deccan Chronicle. 24 April 2017.
  7. Derkzen, Marthe L.; Nagendra, Harini; Van Teeffelen, Astrid J. A.; Purushotham, Anusha; Verburg, Peter H. (2017). "Shifts in ecosystem services in deprived urban areas: understanding people's responses and consequences for well-being". Ecology and Society 22 (1). doi:10.5751/ES-09168-220151. பன்னாட்டுத் தர தொடர் எண்:1708-3087. https://www.jstor.org/stable/26270102. 
  8. Sebastian, Bejoy (29 July 2019). "Bengaluru, believe it or not: This is a lake, and it stinks". Bangalore Mirror. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  9. "Lake Laxity". Bangalore Mirror. 20 Jan 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-06-16.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விபூதிபுரா_ஏரி&oldid=3849850" இலிருந்து மீள்விக்கப்பட்டது