வியட்நாமிய அரங்கு

வியட்நாமிய அரங்கு (Theatre of Vietnam)பல மரபான நாடக வடிவங்களைக் கொண்டதாகும். அவை இன்றும் பல்வேறு அளவுகளில் மக்களிடம் நிலைகொண்டுள்ளன.

1800 களில் துவோங் அரங்கு நடிகர்கள்.

அறிமுகம்

தொகு

வியட்நாமிய அரங்கு சீன இசைக்கூத்தின் தாக்கத்தைப் பேரளவில் பெற்றதாகும். இதில் தொப்பி துவோங், தொப்பி சேவோ, சாய் இலுவோங் ஆகிய வடிவங்களும் அடங்கும்.

தொப்பி துவோங் அல்லது தொப்பி போய்

தொகு

தொப்பி துவோங் (Hát tuồng) அல்லது தொப்பி போய் (hát bội) என்பது 13 ஆம் நூற்றாண்டளவில் சீனத்தில் இருந்து பெற்ற வடிவமாகும். இது அரைசரை மகிழ்விக்கும் நிலையில் இருந்து பிறகு இயங்கும் நடிகர்குழுவால் தன்வயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இசைக்கூத்தின் நவில்வுகள் அல்லது கதைகள் வரலாற்றுச் சமூக ஒழுங்கமைவைக் கொண்டமையும். உலக முழுவதும் உள்ள சேவோவும் அதன் மற்ற வடிவங்களும் போலவே, துவோங் இசைக்கூத்து தம் ஒப்பனையாலும் உடையாலும் உணரமுடிந்த வகைமைப் பாத்திரங்களால் நடிக்கப்படுகிறது. இவை ஆடம்பரமும் தொடர்வழக்கும் உள்ல பாத்திரங்கள் ஆகும்.

சாய் உலுவோங் (Cải lương) (நிகழ்நிலை நாட்டுப்புற இசைக்கூத்து)

தொகு

துவோங்குடனும் சேவோவுடனும் ஒப்பிடும்போது, சாய் உலுவோங் (cải lương) நிகழ்கால வியட்நாமியரிடையே மிகவும் பெயர்பெற்று விளங்குகிறது. இது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றி, பெருவழக்குக்கு வந்ததாகும். இதில் வரளாற்றுக் கருப்பொருள்களோடு நிகழ்கால நவில்வுகளும் நடிக்கப்படுகின்றன. இது இப்போது மின்கிதார் போன்ற இக்காலப் புதுமைபுனைவுக் கருவிகளையும் தகவோடு பயன்படுத்தும் வகையில் வளர்ந்துள்ளது. இது அரசவை இசையாகிய நாசு தாய் தூ எனும் சிக்கலான, ஓரளவு புதுக்கிய புத்திசையின் தொடர்ச்சியாக அமைகிறது.

சாய் உலுவோங் (Cải lương) பாடலில் நெட்டிசைகள் கூடுதலாக அமையும். பாடலில் இயல்பான சொற்கள் நீட்டி இசைக்கப்படும். சாய் உலுவோங்கில் வழக்கமாகப் பயன்படுத்தும் பண் வோங் சோ ஆகும்.

இது 1970 களிலும் 1980 களிலும் மக்களிடம் பரவியிருந்தாலும், இன்று இந்த மக்கள் செல்வாக்கு, குறிப்பாக இளந்தலைமுறையினரிடம் குறைந்துவிட்டது, இப்போது இக்கலை அரசு நிதியால் தப்பிப் பிழைத்துள்ளது.[1][2]

உரோய் நுவோசு (Rối nước)

தொகு

நீர்ப்பாவைக் கூத்துகள், அல்லது மூவா உரோய் நுவோசு (Múa rối nước) என்பது 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தன்மை வாய்ந்த வியட்நாமிய கலை வடிவமாகும். இன்று, நீர்ப்பாவைக் கூத்து வியட்நாம் வரும் பயணர்களிடம் மிகவும் பெயர்பெற்று விளங்குகிறது.நீர்ப்பாவைக் கூத்தில் மூங்கில் தட்டு கூத்தியற்றுவோர்களை மறைக்கிறது. இவர்கள் நீரில் நின்று திரைமுன் அமையும் பாவைகளை நீரில் மறைந்திருக்கும் கழிகளால் ஆட்டுவர் . இதன் கடுமாயான விதிகளால் இது 1984 அளவில் அழிந்துப் பின்னர் புத்துயிர்ப்பு பெற்றது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாமிய_அரங்கு&oldid=3352421" இலிருந்து மீள்விக்கப்பட்டது