வியட்நாம் அரசுத்தலைவர்

வியட்நாம் சோசலிசக் குடியரசின் அரசுத்தலைவர் (president of the Socialist Republic of Vietnam) என்பவர் வியட்நாமின் தேசிய சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாட்டுத் தலைவர் ஆவார். வியட்நாம் ஒரு கட்சி நாடாக இருப்பதால், பதவிக்கான வேட்பாளர்கள் வியட்நாம் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழுவால் பரிந்துரைக்கப்படுகிறார்கள். அரசியல் அமைப்பில் வியட்நாம் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளருக்குப் பிறகு, அரசுத்தலைவர் பதவியில் இருப்பவர் பொதுவாக இரண்டாவது-உயர்ந்த பதவியை வகிப்பவராகக் கருதப்படுகிறார்.[2]

வியட்நாம் சோசலிசக் குடியரசு அரசுத்தலைவர்
Chủ tịch nước Cộng hòa xã hội chủ nghĩa Việt Nam
வியட்நாம் சின்னம்
தற்போது
தோ லாம்

22 மே 2024 முதல்
Typeநாட்டுத் தலைவர்
உறுப்பினர்
  • வியட்நாம் கம்யூனிசக் கட்சியின் மத்திய குழு
  • தேசிய சட்டமன்றம்
  • மத்திய இராணுவ ஆணையம்
வாழுமிடம்அரசத்தலைவர் மாளிகை
பரிந்துரையாளர்தேசிய சட்டமன்றத்தின் நிலைக்குழு
நியமிப்பவர்தேசிய சட்டமன்றம்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள், மூன்று தடவைகள்
அரசமைப்புக் கருவிவியட்நாமிய அரசியலமைப்பு
முதலாவதாக பதவியேற்றவர்ஹோ சி மின்
உருவாக்கம்2 செப்டம்பர் 1945; 79 ஆண்டுகள் முன்னர் (1945-09-02)
துணை அரசுத்தலைவர்துணை அரசுத்தலைவர்
ஊதியம்மாதம் 30,420,000₫[1]
இணையதளம்அதிகாரபூர்வ இணையதளம்

நாட்டுத் தலைவராக, அரசுத்தலைவர் உள்நாட்டிலும் பன்னாட்டு அளவிலும் வியட்நாமைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், அத்துடன் தேசிய அரசாங்கத்தின் வழக்கமான மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டினையும் நிலைத்தன்மையையும் பராமரிக்கிறார், நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கிறார்.

அரசுத்தலைவர் தேசிய சட்டமன்றத்தின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். கூடுதலாக, அரசுத்தலைவர் பாரம்பரியமாக பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், அரசாயக் குழுவின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு தேசிய சட்டமன்றத்தின் நிலைக்குழுவிற்கு வேட்பாளர்களைப் பரிந்துரைக்கிறது, பின்னர் தேசிய சட்டமன்றத்தின் அனைத்து பிரதிநிதிகளாலும் அந்த வேட்பாளர்களை அதிகாரப்பூர்வத் தேர்தலுக்கு உறுதிப்படுத்திப் பரிந்துரைக்கிறது.

அரசுத்தலைவர் துணை அரசுத்தலைவர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகளை தேசிய சட்டமன்றத்தின் ஒப்புதலுடன் நியமிக்கிறார். அரசுத்தலைவர் வியட்நாம் மக்கள் ஆயுதப் படைகளின் பெயரளவிலான உச்சத் தளபதியாகவும், தேசியப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் பேரவையின் தலைவராகவும் உள்ளார். கூடுதலாக, அவர் மத்திய இராணுவ ஆணையம், மத்திய காவல்துறைக் கட்சிக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். செப்டம்பர் 2011 முதல், நீதித்துறை சீர்திருத்தத்திற்கான மத்திய வழிகாட்டுதல் குழுவின் தலைவராகவும் உள்ளார்.

அரசுத்தலைவர் பதவியின் அதிகாரங்களும் கௌரவமும் பல ஆண்டுகளாக வேறுபட்டு வருகின்றன. உதாரணமாக, பதவியேற்ற முதலாவது அரசுத்தலைவர் கோ சி மின், பொதுவுடைமைக் கட்சியின் தலைவராகவும் இருந்தபோது, ​​அவர் (அந்த நிலையில்) வியட்நாமின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான அரசாயக்குழுவின் முதல் தரவரிசை உறுப்பினரானார். அவரை அடுத்துப் பதவியேற்ர தொன் தூக் தாங், அரசாயத்தில் உறுப்பினராக இருக்கவில்லை, ஆனால் பொதுச் செயலாளர் இலே துவானின் கீழ் ஒரு குறியீட்டு அதிகாரியாகப் பணியாற்றினார். துரோங் சின் அரசுத்தலைவரானதில் இருந்து, அரசுத்தலைவர் 1வது (ஒரே நேரத்தில் இவரே பொதுச் செயலாளராகப் பணியாற்றியிருந்தால்) அல்லது 2வது இடத்தைப் பிடித்தார்.

அரசுத்தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும், ஒருவர் மூன்று முறை மட்டுமே அரசுத்தலைவராகப் பணியாற்ற முடியும். அவரால் பதவிக் கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், அவர் மீண்டும் கடமையைத் தொடங்கும் வரை அல்லது தேசிய சட்டமன்றத்தால் புதிய அரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால அடிப்படையில் துணைத் தலைவர் அரசுத்தலைவர் பதவி ஏற்பார்.[3]

வோ வான் துரோங் தவறுகள் மற்றும் விதிமுறைகளை மீறியதால் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகியதால், புதிய அரசுத்தலைவராக தோ லாம் 2024 மே 22 முதல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5]

வியட்நாம் அரசுத்தலைவர்களின் பட்டியல்

தொகு
  பதில் அரசுத்தலைவர் பதவியைக் குறிக்கிறது

வியட்நாம் சனநாயகக் குடியரசு (வடக்கு வியட்நாம், 1945–1976)

தொகு
இல. படிமம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
பதவிக்காலம் அரசியல் கட்சி
பதவியேற்பு விலகல் பதவியில்
1   ஹோ சி மின்
(1890–1969)
2 செப்டம்பர் 1945 2 செப்டம்பர் 1969
(பதவியின்போது இறப்பு)
24 ஆண்டுகள் இந்தோசீனப் பொதுவுடைமைக் கட்சி
(பெப்ரவரி 1951 வரை)
வியட்நாம் தொழிலாளர் கட்சி
(பெப் 1951 முதல்)
  கூயின் தூக் காங்
(1876–1947)
29 மே 1946 21 அக்டோபர் 1946 0 ஆண்டுகள், 145 நாட்கள் சுயேச்சை
  தொன் தூக் தாங்
(1888–1980)
2 செப்டம்பர் 1969 23 செப்டம்பர் 1969 0 ஆண்டுகள், 21 நாட்கள் வியட்நாம் தொழிலாளர் கட்சி
2 23 செப்டம்பர் 1969 2 சூலை 1976 6 ஆண்டுகள், 283 நாட்கள்

தெற்கு வியட்நாம் குடியரசு (1969–1976)

தொகு
இல. படிமம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
பதவிக்காலம் அரசியல் கட்சி
பதவியேற்பு விலகல் பதவியில்
தென் வியட்நாம் குடியரசின் தற்காலிக புரட்சிகர அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவர்
  நியூவென் கூ தோ
(1910–1996)
8 சூன் 1969 2 சூலை 1976 7 ஆண்டுகள், 24 நாட்கள் வியட்நாம் மக்களின் புரட்சிகரக் கட்சி
(வியட்கொங்)
(வியட்நாம் தொழிலாளர் கட்சியி தாக்கம்)

வியட்நாம் சோசலிசக் குடியரசு (1976 முதல்)

தொகு
  பதில் அரசுத்தலைவர் பதவியைக் குறிக்கிறது
இல. படிமம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
பதவிக்காலம் தேர்தல் அரசியல் கட்சி
பதவியேற்பு விலகல் பதவியில்
வியட்நாம் சோசலிசக் குடியரசின் அரசுத்தலைவர்}}
(2)   தோன் தூக் தாங்
(1888–1980)
2 சூலை 1976 30 மார்ச் 1980
(பதவியின்போது இறப்பு)
3 ஆண்டுகள், 272 நாட்கள் 1976 வியட்நாம் தொழிலாளர் கட்சி
(திச. 1976 வரை)
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
(திச. 1976 முதல்)
  நியூவென் கூ தோ
(1910–1996)
30 மார்ச் 1980 4 சூலை 1981 1 ஆண்டு, 96 நாட்கள் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
வியட்நாம் சோசலிசக் குடியரசின் அரசப் பேரவையின் தலைவர்
3   துரோங் சின்
(1907–1988)
4 சூலை 1981 18 சூன் 1987 5 ஆண்டுகள், 349 நாட்கள் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
4   வோ சி கொங்
(1912–2011)
18 சூன் 1987 22 செப்டம்பர் 1992 5 ஆண்டுகள், 96 நாட்கள் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
வியட்நாம் சோசலிசக் குடியரசின் அரசுத்தலைவர்
5   இலே தூக் ஆன்
(1920–2019)
23 செப்டம்பர் 1992 24 செப்டம்பர் 1997 5 ஆண்டுகள், 1 நாள் 1992 வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
6   திரான் தூக் லுவோங்
(1937–)
24 செப்டம்பர் 1997 27 சூன் 2006
(பதவி விலகல்)
8 ஆண்டுகள், 276 நாட்கள் 1997 வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
7   நியூவென் மின் திரியெட்
(1942–)
27 சூன் 2006 25 சூலை 2011 5 ஆண்டுகள், 28 நாட்கள் 2006 வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
8   துருஒங் டான் சாங்
(1949–)
25 சூலை 2011 2 ஏப்ரல் 2016 4 ஆண்டுகள், 252 நாட்கள் 2011 வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
9   திரான் தாய் குவாங்
(1956–2018)
2 ஏப்ரல் 2016 21 செப்டம்பர் 2018
(பதவியில் இறப்பு)
2 ஆண்டுகள், 172 நாட்கள் 2016 வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
  தாங் தி ஞொக் தின்
(1959–)
21 செப்டம்பர் 2018 23 அக்டோபர் 2018 0 ஆண்டுகள், 32 நாட்கள் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
10   நியூவென் பூ துரொங்
(1944–2024)
23 அக்டோபர் 2018 5 ஏப்ரல் 2021 2 ஆண்டுகள், 164 நாட்கள் 2018 வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
11   நியூவென் உவான் பூக்
(1954–)
5 ஏப்ரல் 2021 18 சனவரி 2023
(பதவி விலகல்)
1 ஆண்டு, 288 நாட்கள் 2021 வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
  வோ தி ஆன் உவான்
(1970–)
18 சனவரி 2023 2 மார்ச் 2023 0 ஆண்டுகள், 43 நாட்கள் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
12   வோ வான் துரோங்
(1970–)
2 மார்ச் 2023 21 மார்ச் 2024
(பதவி விலகல்)
1 ஆண்டு, 19 நாட்கள் 2023 வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
  வோ தி ஆன் உவான்
(1970–)
21 மார்ச் 2024 22 மே 2024 0 ஆண்டுகள், 62 நாட்கள் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
13   தோ லாம்
(1957–)
22 மே 2024[6] நடப்பு 0 ஆண்டுகள், 187 நாட்கள் 2024 வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Bảng lương của lãnh đạo cấp cao khi tăng lương cơ sở lên 2,34 triệu đồng". Dân trí. 4 July 2024.
  2. "Bộ Chính Trị Quy Định 4 Chức Danh Lãnh Đạo Chủ Chốt Của Đảng, Nhà Nước". https://congdoanhaiphong.vn/tin-tuc-su-kien/danh-muc-trong/bo-chinh-tri-quy-dinh-4-chuc-danh-lanh-dao-chu-chot-cua-dang-nha-nuoc-4300.html. 
  3. "New Vietnamese president is first woman to hold office". South China Morning Post (in ஆங்கிலம்). 2018-09-24. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
  4. "To Lam becomes new State President". Vietnam+ (VietnamPlus). Vietnam News Agency. 2024-05-22. பார்க்கப்பட்ட நாள் 2024-05-22.
  5. Son Ha. "Vietnam lawmakers relieve Vo Van Thuong from president position - VnExpress International". VnExpress International. பார்க்கப்பட்ட நாள் 2024-05-22.
  6. "General To Lam becomes the President of Vietnam since 22 May 2024". VnExpress. 22 May 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாம்_அரசுத்தலைவர்&oldid=4051199" இலிருந்து மீள்விக்கப்பட்டது