வியட்நாம் ஊடகங்கள்

வியட்நாம் ஊடகங்கள் (Media of Vietnam) என்பன வியட்நாமில் நிலவும் அச்சு, ஒலிபரப்பல், இணையப் பெருந்திரள் ஊடகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

ஹோ சி மின் நகரத்தின் தொலைக்காட்சி அலுவலகப் படங்கள்

தொலைக்காட்சி

தொகு

வியட்நாம் தொலைக்காட்சி

தொகு

முதன்மைக்கட்டுரை: வியட்நாமில் தொலைக்காட்சி

வியட்நாமில் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பு 1960 களில் தொடங்கியது. முதன்முதலாக, அமெரிக்காவும் தென்வியட்நாமும் இணைந்து வியட்நாம் மொழியில் ஒன்றும் ஆங்கிலத்தில் ஒன்றுமாக இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளைச் சாய்கோனில் உருவாக்கின.

தேசிய ஒளிபரப்பு நிறுவனமாகிய வியட்நாம் தொலைக்காட்சி (VTV) கியூபா தொழில்நுட்ப உதவியுடனும் பயிற்சியுடனும் 1970 செப்டம்பரில் நிறுவப்பட்டது . VTV நாட்டிலேயே மிகப் பெரிய தொலைக்காட்சி நிறுவனமாகும். இது ஒனபது முழுநேர அலைவரிசைகளில் பன்னாட்டளவில் செயற்கைகோள் வழியாக ஒளிபரப்புகிறது. இது (VTVCab) எனும் மிகப் பெரிய வடத் தொலைக்காட்சி வலையமைப்பையும் DTH எனும் செயற்கைகோள் சேவை அமைப்பையும் இயக்குகிறது. இவை VTV1 முதல்- VTV9 வரையிலான ( VTV7, VTV8 இயங்கவில்லை) பின்வரும் ஒன்பது முழுநேர அரசு அலைவரிசைகளையும் பதினாறு வியட்நாமிய முகவாண்மை அலைவரிசைகளையும் இயக்குகின்றன: VTVCab1 (கியாய் திரி TV), VTVCab2 (பிம் வியட்), VTVCab3 (தே தாவோ ]]), VTVCab (வான் கோவா), VTVCab5 (E அலைவரிசை), VTVCab6, VTVCab7 (D நாடகங்கள்), VTVCab8 (பிபி), VTVCab9 (தகவல் TV), VTVCab10 (O2 TV), VTVCab11 (TVஅங்காடி VTVCab12 (நயப்பு பாணி TV), VTVCab14 (உலோத்தே தாத் வியட் வீட்டங்காடி), VTVCab15 (M அலைவரிசை), VTVCab16 (போங் தா TV), VTVCab17 (யேய1 TV), VTVCab19 (திரைப்படம்), VTVCab20 (V குடும்பம்)அலைவரிசையும் 45 வட்டார, பன்னாட்டு அலைவரிசைகளும்.

வியட்நாம் பல்லூடகக் கூட்டிணையம்

தொகு

முதன்மைக்கட்டுரை: வியட்நாமியப் பல்லூடகக் கூட்டிணையம்

வியட்நாமியப் பல்லூடகக் கூட்டிணையம் (VTC) ஐந்து தேசிய அலைவரிசைகளை இயக்குகிறது. இது மட்டுமே வியட்நாமில் இலக்கவியல் தரைத்தொலைக்காட்சி நிலையச் சேவையைக் (DTT) கொண்டுள்ளது. இது சந்தாவழிச் சேவை என்றாலும் இதன் குறிகைகளைப் பரவலாகக் கமுக்கமாக உரிமம் இன்றியே மடுப்பதும் உண்டு.

இது வியட்நாம் அரசு இயக்கும் கூட்டிணையம் ஆகும். இது அஞ்சல், தொலைதொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இது மூன்று முழுநேர விளம்பர அலைவரிசைகளை இயக்குகிறது. இதோடு VBC-VTC5 எனும் பொழுதுபொக்குக் கேளிக்கை அலைவரிசை, இன்றைய TV-VTC7 எனும் திரைப்பட அலைவரிசை, Viet-VTC9 எனும் வியட்நாமியப் பண்பாட்டு அலைவரிசை ஆகியவையும் சந்தா வழி இயங்கும் பல அலைவரிசைகள் ஆகியவற்ரையும் இயக்குகிறது. பின்னவற்றில், (VTC2) எனும் தகவல் தொழில்நுட்ப, தகவல் தொடர்புத் தொழில்நுட்ப அலைவரிசை, VTC3 எனும் விளையாட்டு அலைவரிசை, (VTC4) எனும் நயப்புப் பொருள், நடை அலைவரிசை, VTC6 எனும் திரைப்பட அலைவரிசை ஆகியவை அடங்கும்.இவற்ரோடு மூன்று புதிய அலைவரிசைகளாக, முதவதாக (VTC7) எனும் தேர்வுக்கான அலைவரிசையும் இரண்டாவதாக VTC1, VTC13 ஆகியவை ஊடாட்ட அலைவரிசைகளாகவும் (VTC11) எனும் குழந்தைகள் அலைவரிசையும், VTC12 எனும் விளம்பர அலைவரிசையும் (VTC14) எனும் இயற்கைப் பேரிடர் அலைவரிசையும் (VTC16)(3NTV) எனும் வேளாண்மை அலைவரிசையும் இயங்குகின்றன. 2006 இல் (VTC அலைபேசி TV) எனும் அலைபேசிகளுக்கான உலகின் முதல் முகவாண்மைவழி தொலைக்காட்சிச் சேவை DVB-H அமைப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இது வியட்நாமியப் பல்லூடகக் கூட்டிணையத்தாலும் வியட்நாம் தொலைக்காட்சி உரிமையாளர்களாலும் இயக்கப்படுகிறது.

வட்டார நிலையங்கள்

தொகு

கனாய்த் தொலைக்காட்சி, ஓ சி மின் நகரத் தொலைக்காட்சி ஆகிய வட்டார தொலைக்காட்சி அமைப்புகள் வட்டார நிலையங்களாகச் செயல்படுகின்றன. பின்னது மேகாங் படுகை வட்டாரப் பெரும்பகுதியில் ஒளிபரப்புகிறது.

பிற முகமைத் தொலைக்காட்சி

தொகு

வியட்நாமில் 1991ஆம் ஆண்டுக்குப் பின் விடுதிகள் அயல்தூதரகங்கள், அரசு அலுவலகங்கள், செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு அலைஉணர் கிண்ணத்தை நிறுவவும் இயக்கவும் அயல்நாட்டு நிகழ்ச்சிகளைக் காணவும் உரிமம் அரசால் வழங்கப்பட்டது.இன்று, கனாய், ஓ சி மின் நகர் போன்ற பெருநகர்களில் உள்ள பெரும்பாலான மக்கள் வடத்தொலைக்காட்சிச் சேவையை முகமைப்பணம் கட்டிப் பெறுகின்றனர். இதில் மிகப் பெரிய வலையமைப்பு வியட்நாம் தொலைக்காட்சியின் பிரிவாகிய (VTVCab) நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இதைப் பின்பற்றி, ஓ சி மின் நகர்த் தொலைக்காட்சியும் (HTVC), (கனாய் தொலைக்காட்சி (Hanoicab) ஆகியன முகமைவழி சேவையை நடத்துகின்றன. அண்மையில், சாய்கோன் பயணியர் வடத்தொலைக்காட்சிச் சேவை (SCTV) தொடங்கப்பட்டுள்ளது. இது VTV, சாய்கோன் பயணியர்க் குழுமம் ஆகியவை கூட்டாக நடத்தும் சேவை அமைப்பு) ஆகும். மிக அண்மையில் K+ எனும் சேவை அமைப்பும் இயங்குகிறது. இது (VTVCab), Canal+ ஆகியவை 2009 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து கூட்டாக இயக்கும் நேரடி வீட்டுச் சேவை அமைப்பாகும்.

வானொலி

தொகு

முதல் வியட்நாமிய வானொலி ஒலிபரப்பல் 1945, செப்டம்பர் 2 இல் தொடங்கியது. இதில் ஓ சி மின் நாட்டின் விடுதலையை அறிவித்தார்.


தென்வியட்நாம் தனது வானொலியை 1955 இல் ஏற்படுத்தியது.

வியட்நாம் போர் முடிந்து, வியட்நாம் ஒருங்கிணைந்த்தும் 1978 இல் அனைத்து வானொலி நிலையங்களுக் வியட்நாம் குரல் அமைப்பின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு அது வியட்நாம் தேசிய வானொலி நிலையம் ஆகியது.

செய்தித்தாள்கள்

தொகு

தோய் மோய் நடவடிக்கையின்படி, வியட்நாம் கட்டற்ர சந்தைமுறைக்கு மாறியதும், அரசு தன் கொள்கைகளை மக்களுக்கு தொடர்ந்து உடனடியாக் அறிவிக்க செய்தித்தாள்களைப் பயன்படுத்தியது. இந்நடவடிக்கையால், 1996க்குப் பிறகு, செய்தித்தாள்கள் இருமடங்காகப் பெருகின.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

or [1] பரணிடப்பட்டது 2010-03-05 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாம்_ஊடகங்கள்&oldid=3792106" இலிருந்து மீள்விக்கப்பட்டது