வியட்நாம் பெண்கள் நினைவகம்
வியட்நாம் பெண்கள் நினைவகம் (Vietnam Women's Memorial) என்பது வியட்நாம் போரில் பணியாற்றிய அமெரிக்காவின் செவிலியர்கள் மற்றும் பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும். [1] [2] ஒரு காயமுற்ற சிப்பாயுடன் மூன்று சீருடை அணிந்த பெண்கள் இருப்பதைச் சித்தரிக்கிறது [2] செவிலியர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், தகவல் தொடர்பு வல்லுநர்கள் போன்ற பெண்கள் போரில் ஆற்றிய முக்கிய பணிகளை நினைவூட்டுவதாகவும் அவர்களுக்கான ஆற்தலை அளிப்பதாகவும் உள்ளது.[3] இது வியட்நாம் படைவீரர் நினைவகத்தின் ஒரு பகுதியாகும். வாசிங்டன் டி.சி இல் உள்ள தேசிய மாலில் அந்நினைவகத்திற்குத் தெற்கிலும் பிரதிபலிப்பு குளத்தின் வடக்கிலும் அமைந்துள்ளது. [1]
வியட்நாம் பெண்கள் நினைவகம் Vietnam Women's Memorial | |
---|---|
அமைவிடம் | தேசிய மால் வாசிங்டன், டி. சி. அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
நிறுவப்பட்டது | 1993 |
நிருவாக அமைப்பு | தேசிய பூங்கா சேவை |
ஒரு முன்னாள் இராணுவ செவிலியராக இருந்த டயான் கார்ல்சன் இவான்சு 1984 ஆம் ஆண்டு வியட்நாம் பெண்கள் நினைவகத் திட்டத்தை (தற்போது வியட்நாம் மகளிர் நினைவு அறக்கட்டளை) நிறுவினார். [1] [2] இந்த நினைவுச்சின்னம் கிளென்னா குடாக்ரே [4] என்பவரால் வடிவமைக்கப்பட்டது மற்றும் 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று வியட்நாம் படைவீரர் நினைவுச்சின்னத்தின் ஒரு பகுதியாக அர்ப்பணிக்கப்பட்டது [1] [5]
இந்த நினைவுச்சின்னம் துல்லியமற்றது என்று விவரிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது போன்ற முதன்மை பராமரிப்பு அமெரிக்க இராணுவ மருத்துவர்கள் மற்றும் அமெரிக்க கடற்படை வீரர்களால் மட்டுமே வழங்கப்படுகிறது. இராணுவ மருத்துவமனைகளில் பிரத்தியேகமாகப் பணிபுரியும் செவிலியர்கள் மட்டுமே இத்தகைய மருத்துவ சேவையை வழங்குகிறார்கள். [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Schmitt, Eric. "A Belated Salute to the Women Who Served." New York Times. Late ed. November 12, 1993. 1+.
- ↑ 2.0 2.1 2.2 Biggins, Virginia. "Memorial to commemorate women in Vietnam War." Daily Press [Newport News, VA]. August 6, 1992.
- ↑ "Reflect at the Vietnam Women's Memorial (U.S. National Park Service)". www.nps.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
- ↑ Haederle, Michael. "For the Forgotten." Los Angeles Times. April 29, 1992. E1+.
- ↑ "Vietnam Women's Memorial". www.vietnamwomensmemorial.org. Archived from the original on 2020-11-27. பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
- ↑ Kulik, Gary (2009). 'War Stories': False Atrocity Tales, Swift Boaters, and Winter Soldiers – What Really Happened in Vietnam. Potomac Books. p. 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1597976377.
புற இணைப்புகள்
தொகு- வியட்நாம் பெண்கள் நினைவு அறக்கட்டளை
- போரில் இறந்த பெண்கள்
- நூனி ஃபோர்டின் வியட்நாமில் இழந்த அமெரிக்க பெண்களின் பட்டியல்
- டோனட் டோலி டைரி பரணிடப்பட்டது 2012-04-25 at the வந்தவழி இயந்திரம், சூசன் மெக்லீன் மற்றும் சின்னி கிர்சு பற்றிய தளம்
- சி-இசுபான் வீடியோ: அர்ப்பணிப்பு விழா