விலங்குக் கருணைக்கொலை

விலங்குக் கருணைக்கொலை (euthanasia; கிரேக்க மொழி: εὐθανασία; "நல்ல மரணம்") என்பது ஒரு விலங்கினை அது படும் துன்பத்திலிருந்து விடுவிக்கும் நோக்கில் கொல்லுதல் அல்லது சாகவிடுதல் ஆகும். குணப்படுத்த முடியாத (அல்லது வலி நிறைந்த) நோய் உள்ளிட்ட நிலைமைகள்,[1] ஒரு விலங்கினைக் காக்கத் தேவைப்படும் உணவு மற்றும் நிதி ஆதாரங்களின் பற்றாக்குறை, அறிவியல் ஆய்வக சோதனை நடைமுறைகள் உள்ளிட்டவை கருணைக்கொலைக்கான காரணங்களாகச் சுட்டப்படுகின்றன. கருணைக்கொலை முறைகள் குறைந்தபட்ச அளவில் மட்டுமே வலி அல்லது துயரத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. நோக்க அடிப்படையில் கருணைக்கொலை என்பது விலங்கு வதை, உயிர்க்கொல்லி முறைகள் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டிருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் நடைமுறை அளவில் இவையாவும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று விவாதிக்கப்படுகிறது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள் தரவுகள்

தொகு
  1. 2000 Report of the AVMA Panel on Euthanasia

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Animal euthanasia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்குக்_கருணைக்கொலை&oldid=3519145" இலிருந்து மீள்விக்கப்பட்டது