விலங்கு விடுதலை முன்னணி
விலங்கு விடுதலை முன்னணி (The Animal Liberation Front [ALF]) என்பது ஒரு சர்வதேச, தலைமையற்ற, பரவலாக்கப்பட்ட அரசியல் மற்றும் சமூக எதிர்ப்பு இயக்கமாகும். இது விலங்குகளைத் துன்புறுத்தும் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக அகிம்சை வழியில் வன்முறையற்ற நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஆதரிக்கிறது. இது 1970களில் பேண்ட்ஸ் ஆவ் மெர்சி என்ற அமைப்பிலிருந்து உருவானது. ஆய்வகங்கள் மற்றும் பண்ணைகளில் இருந்து விலங்குகளை அகற்றி அவற்றை விடுவித்தல், அந்த கட்டுமானங்களை அழித்தல், பாதுகாப்பான புகலிடங்களை ஏற்படுத்துதல், விலங்குகளுக்கு மருத்துவப் பராமரிப்பினை நல்குதல், விலங்குகள் தொடர்ந்து வாழப்போகும் இடங்களில் சரணாலயங்களை அமைத்தல் உள்ளிட்டவற்றை செயற்படுத்தும் நவீன கால அடிமை ஒழிப்புக் குழு என்று இவ்வமைப்பினைச் சேர்ந்தோர் இதனை வர்ணிக்கின்றனர்.[2][3][4][5] இதன் விமர்சகர்களோ இவ்வமைப்பைச் சேர்ந்தவர்களை சுற்றுச்சூழல் பயங்கரவாதிகள் எனச் சாடுகின்றனர்.[6][7][8][9]
உருவாக்கம் | சூன் 1976 |
---|---|
நோக்கம் | விலங்குரிமை |
தலைமையகம் |
|
மூலம் | ஐக்கிய இராச்சியம் |
முறை | நேரடி நடவடிக்கை |
முழக்கம் | மனித மற்றும் மனிதரல்லா உயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் எச்சரிக்கையுடன் கூடி விலங்கின விடுதலையை நோக்கி செயற்படுத்தப்படும் எந்த ஒரு செயலும் விலங்கு விடுதலை முன்னணியின் செயற்பாடு என்று அறியப்படும்.[1] |
வலைத்தளம் | animalliberationfrontline |
நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்பட்டுவரும் இவ்வமைப்பின் குழுக்கள் இரகசியமாக செயல்படுகின்றன. பல சமயங்களில் இது ஒரு சிறிய நண்பர்களின் குழுக்களாகவும், சில சமயங்களில் ஒரு நபரை மட்டுமே கொண்ட குழுவாகவும் செயற்படுவதால் இந்த இயக்கத்தை கண்காணிப்பதென்பது அதிகாரிகளுக்கு மிகவும் கடினமான பணியாக உள்ளது. அனிமல் லிபரேஷன் பிரஸ் அலுவலகத்தின் ராபின் வெப் கூறுகையில் "அதனால்தான் விலங்கு விடுதலை முன்னணியை உடைக்கவோ, திறம்பட ஊடுருவவோ, முற்றிலுமாக நிறுத்தவோ முடியாது. நீங்கள்—நீங்கள் ஒவ்வொருவரும்—நீங்கள் தான் விலங்கு விடுதலை முன்னணி."[10]
இந்த இயக்கம் வன்முறையற்றது என்கின்றனர் இதன் ஆர்வலர்கள். விலங்கு விடுதலை முன்னணியின் முழக்க வசனத்தின் படி, மனித மற்றும் மனிதரல்லா உயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் அனைத்து நியாயமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கூடி விலங்கின விடுதலையை நோக்கி செயற்படுத்தப்படும் எந்த ஒரு செயலும் விலங்கு விடுதலை முன்னணியின் செயற்பாடு என்று அறியப்படும். இதில் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் முட்டுக்கட்டை செயற்பாடுகளும் அடங்கும்.[1] "நாங்கள் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை என்ற ஒன்று மட்டுமே எங்களைப் போன்ற விலங்கு விடுதலை முன்னணி செயற்பாட்டாளர்களை பயங்கரவாதிகள், வன்முறைக் குற்றவாளிகள் போன்ற குற்றம் செய்யும் நபர்களிலிருந்து வேறுபடுத்தப் போதுமான ஒன்று என்று நான் கருதுகிறேன்" என்று அமெரிக்க ஆர்வலரான ராட் கொரோனாடோ 2006-ல் கூறினார்.[11]
ஆயினும், விலங்கு விடுதலை முன்னணியின் செய்தித் தொடர்பாளர்களும் ஆர்வலர்களும் வன்முறைச் செயல்களைக் கண்டிக்கத் தவறிவிட்டனர் என்றும் அவர்களே சிலசமயம் அவ்வியக்கத்தின் பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வியக்கத்தினர் வன்முறையைப் பயன்படுத்துதல் குறித்தும் காவல்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றின் கவனத்தை ஈர்ப்பது குறித்தும் விலங்குரிமை இயக்கத்திலேயே சில கருத்து வேறுபாடுகளும் விமர்சனங்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது. 2002-ம் ஆண்டு அமெரிக்காவில் தீவிரவாதத்தைக் கண்காணிக்கும் அமைப்பான தெற்கு வறுமைச் சட்ட மையம் (Southern Poverty Law Center [SPLC]), "ஸ்டாப் ஹண்டிங்டன் விலங்கு வன்கொடுமை" பிரச்சாரத்தில் விலங்கு விடுதலை முன்னணியின் பங்கினைக் குறிப்பிட்டுக் காட்டியது. இந்தப் பிரச்சாரமானது பயங்கரவாத யுக்திகளைப் பயன்படுத்தியதாக முதலில் குற்றஞ்சாட்டிய SPLC பின்னர் தனது அறிக்கையொன்றில் அவர்கள் யாரையும் கொல்லவில்லை என்பதை ஒப்புக்கொண்டது.[6] 2005-ம் ஆண்டில் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமெரிக்க அரசாங்கத்தால் கவனிக்கப்படவேண்டிய பல உள்நாட்டு பயங்கரவாத அச்சுறுத்தல்களைப் பட்டியலிடும் தனது திட்டமிடல் ஆவணத்தில் விலங்கு விடுதலை முன்னணியைச் சேர்த்தது.[7] இங்கிலாந்தில், விலங்கு விடுதலை முன்னணியின் நடவடிக்கைகள் உள்நாட்டு தீவிரவாதத்தின் எடுத்துக்காட்டுகளாகக் கருதப்பட்டு பிற சட்டவிரோத விலங்குரிமை நடவடிக்கைகளைக் கண்காணிக்க 2004-ல் அமைக்கப்பட்ட தேசிய தீவிரவாத தந்திரோபாய ஒருங்கிணைப்பு பிரிவால் கையாளப்படுகிறது.[8][12]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Best, Steven & Nocella, Anthony J. (eds), Terrorists or Freedom Fighters?, Lantern Books, 2004, p. 8.
- ↑ For their mission statement, see ALF mission statement பரணிடப்பட்டது 2008-05-11 at the வந்தவழி இயந்திரம், accessed June 5, 2010
- ↑ Coronado, Rod. "Reflections on Prison and the Needs of Our Movement" பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம், No Compromise, Issue 13, accessed June 5, 2010
- ↑ "History of the Animal Liberation Movement", Animal Liberation Press Office, accessed June 7, 2010
- ↑ Best, Steven & Nocella, Anthony J. (eds), Terrorists or Freedom Fighters?, Lantern Books, 2004, p. 91.
- ↑ 6.0 6.1 Blejwas, Andrew; Griggs, Anthony; and Potok, Mark. "Terror from the Right", Southern Poverty Law Center, Summer 2005, accessed June 7, 2010.
- ↑ 7.0 7.1 "From Push to Shove" பரணிடப்பட்டது 2005-02-04 at the வந்தவழி இயந்திரம், Southern Poverty Law Center Intelligence Report, Fall 2002.
- Rood, Justin. "Animal Rights Groups and Ecology Militants Make DHS Terrorist List, Right-Wing Vigilantes Omitted" பரணிடப்பட்டது 2008-11-29 at the வந்தவழி இயந்திரம், Congressional Quarterly, March 25, 2005.
- ↑ 8.0 8.1 "About NETCU" பரணிடப்பட்டது 2010-03-05 at the வந்தவழி இயந்திரம் and "What is domestic extremism?" பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம், National Extremism Tactical Coordination Unit, accessed June 7, 2010.
- ↑ "Global Terrorism Database Search Result for "Animal Liberation Front" Graph of incident types per year". The Global Terrorism Database. Archived from the original on January 20, 2019. பார்க்கப்பட்ட நாள் January 19, 2019.
- ↑ For the quote from Robin Webb, see "Staying on Target and Going the Distance: An Interview with U.K. A.L.F. Press Officer Robin Webb" பரணிடப்பட்டது 2006-06-23 at the வந்தவழி இயந்திரம், No Compromise, Issue 22, undated, accessed June 5, 2010.
- ↑ Keith, Shannon. Behind the Mask: The Story Of The People Who Risk Everything To Save Animals, 2006.
- ↑ "Investigation after uni bomb find" பரணிடப்பட்டது 2015-02-07 at the வந்தவழி இயந்திரம், BBC News, February 27, 2007.
மேலும் படிக்க
தொகு- "Terrorism 2000 / 2001" பரணிடப்பட்டது 2021-02-04 at the வந்தவழி இயந்திரம், FBI document mentioning the ALF, accessed January 10, 2014.
- Bond, Walter. Always Looking Forward. NAALPO, 2011. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0983054740
- Braddock, Kurt. "The utility of narratives for promoting radicalization: The case of the Animal Liberation Front" பரணிடப்பட்டது 2021-02-04 at the வந்தவழி இயந்திரம், Dynamics of Asymmetric Conflict, Volume 8, Number 1, April 2015.
- Tester, Keith. "The British experience of the militant opposition to the agricultural use of animals" பரணிடப்பட்டது 2021-02-04 at the வந்தவழி இயந்திரம், Journal of Agricultural and Environmental Ethics, Volume 2, Number 3, September 1989.
- Wolf, Screaming (1991). A Declaration of War. NAALPO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0983054733
- Young, Peter Daniel (2010). Animal Liberation Front: Complete Diary of Actions, The First 30 Years. Voice of the Voiceless Communications பரணிடப்பட்டது 2010-04-10 at the வந்தவழி இயந்திரம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9842844-0-5
- Young, Peter Daniel (2021) The A.L.F. Strikes Again: Collected Writings Of The Animal Liberation Front In North America. Warcry Communications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1732709690