விலா மடிப்புத்தேர்

சதுரங்க விளையாட்டில் விலா மடிப்புத்தேர் (fianchetto) என்பது ஒருவிதமான முன்னேற்றம் தரும் நகர்வு வகையாகும். இத்தாலி மொழியில் "சிறிய விலாமடிப்பு“ என்று இதற்குப் பொருள். இதனடிப்படையில் ஒரு மந்திரி அடுத்துள்ள குதிரை வரிசையின் இரண்டாவது கட்டத்திற்கு இடம்பெயர்கின்றது என்பது பொருளாகும். ஆட்டக்காரர் சதுரங்க ஆடுகளத்தின் விலாப்பக்கத்தில் இந்தவகை முன்னேற்றம் நிகழ வேண்டுமென விரும்பினால் அவருடைய குதிரைக்கு முன்னால் நிற்கும் சிப்பாயை ஒன்றோ அல்லது இரண்டு கட்டங்களோ முன்னோக்கி நகர்த்தியிருக்க வேண்டும்.

அதிநவீன சதுரங்கத் திறப்பாட்டங்களிலும் விலா மடிப்பில் மந்திரியை நிறுத்துமாறு ஆட்டத்தைத் திறப்பது ஒரு நிலையான திறப்பு முறையாக கருதப்படுகிறது. சதுரங்க ஆடுகளத்தின் மத்திய பகுதியை எதிரியின் காய்கள் நேரடியாக ஆக்கிரமிப்பதை தாமதிக்கச் செய்வது இம்முறையின் பின்னுள்ள தத்துவமாகும். இதன்மூலம் எதிரியின் காய்கள் போர்களத்தின் மத்தியில் வருவதை குறைக்கவும் முடியும், தேவைப்பட்டால் மத்தியப் பகுதிக்கு முன்னேறி வந்துவிட்ட எதிரியின் காய்களை அழிக்கவும் செய்யலாம். இந்தியத் தடுப்பாட்டங்களில் இந்த விலாமுறை முன்னேற்ற நகர்வு வழக்கமாக நிகழ்வதுண்டு. (1.e4 e5) வகைத் திறப்பு ஆட்டங்களில் பொதுவாக விலா மடிப்புத்தேர் மிகக் குறைவாக அமைவதுண்டு. ஆனாuல், எசுப்பானிய ஆட்டம் போன்ற ஆட்டங்களில் கருப்பு நிற ராசாவின் மந்திரி விலா மடிப்புத்தேர் நகர்வுக்கும், வியன்னா ஆட்டம் போன்ற அசாதரணமான வகை ஆட்டங்களில் வெள்ளை ராசாவின் மந்திரி விலா மடிப்புத்தேர் நகர்வுக்கும் ஆயத்தமாகத் திட்டமிடப்படுகின்றது.

விலா மடிப்பு மந்திரியை அதிக செயல்திறம் கொண்டிருக்குமாறு இயங்க அனுமதிப்பதே விலா மடிப்புத் தேர் நகர்வின் முக்கியமான நன்மைகளில் ஒன்றாகும். ஏனென்றால் இவ்வமைப்பில் நீளமான மூலைவிட்டப் பாதையில் ( h1-a8 அல்லது a1-h8 ) மந்திரி நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் மந்திரி தாக்குதல் நிகழ்த்தும் வலிமையான காயாகவும் அதிகமானக் கட்டங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள காயாகவும் திகழ்கிறது. இருந்தபோதிலும் விலா மடிப்புத்தேர் நகர்வமைப்பு எதிரிக்கும் சில வாய்ப்புகளை வழங்காமலில்லை. ஒருவேளை விலா மடிப்பு மந்திரியை எதிரி கைப்பற்றிவிட்டால் அல்லது பரிமாற்றம் செய்து கொண்டால், இம்மந்திரியின் பாதுகாப்பு வலையில் இருந்த காய்கள் பலமிழந்து பின்னர் எளிதாகத் தாக்கப்படுகின்றன. குறிப்பாக ராசாவின் பக்கமிருக்கும் விலாமடிப்பு மந்திரி இவ்வாறான சிக்கலில் சிக்க நேரிடுகிறது. எனவே விலா மடிப்புத்தேரை அவ்வளவு எளிதாகப் பரிமாற்றம் செய்து கொள்ள எதிரிக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. அதிலும் முக்கியமாக எதிரியின் அதே நிறத்து மந்திரி ஆட்டத்தில் இருக்கும் போது எச்சரிக்கையுடன் ஆடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

தத்துவம்தொகு

வலது புறமுள்ள விளக்கப்படத்தில் மூன்று வெவ்வேறு வகையான விலா மடிப்புத்தேர் நகர்வுகள் காட்டப்பட்டுள்ளன. (இவை ஒரு உண்மையான விளையாட்டின் பகுதிகள் அல்ல ஆனால் இந்நகர்வின் போக்கை விளக்கும் தனி உதாரணங்கள் என்ற பார்வையில் கவனிக்கலாம்). வெள்ளை நிற ஆட்டக்காரரின் ராசாவின் மந்திரி வழக்கமான விலா மடிப்புத்தேர் நகர்வில் அமைந்துள்ளது. குதிரையின் முன் உள்ள சிப்பாய் ஒரு கட்டம் முன்னோக்கி நகர்ந்து மந்திரிக்கு நீளமான மூலைவிட்ட பாதைக்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது. இதுதான் பொதுவாக அழைக்கப்படும் விலா மடிப்புத்தேர் நகர்வு வகையாகும். இவ்வாறான அமைப்பு சிசிலியன் டிராகன் திறப்பாட்டம், பிர்க்கு தடுப்பாட்டத் திறப்பு, நவீனத் தடுப்பாட்டத் திறப்பு, நவீன பெனானி திறப்பாட்டம், கிரன்பெல்டு தடுப்பாட்டத் திறப்பு, இந்திய ராசா தடுப்பாட்டம் போன்ற பிற திறப்பாட்டங்களில் நிகழ்கிறது.

கருப்பு நிற ஆட்டக்காரரின் ரானியினுடைய மந்திரியும் விலா மடிப்புத்தேர் நகர்வு அமைப்பில் உள்ளது. ஆனால் இங்கு குதிரைக்கு முன்னால் உள்ள சிப்பாய் இரண்டு கட்டங்கள் முன்னோக்கி நகர்ந்து நீண்ட மூலைவிட்டப் பாதையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் b சிப்பாய் c4 கட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதும் ஒரு சாதகமான அம்சமாகும். வெள்ளை ஆட்டக்காரர் ஒருவேளை இந்திய ராசா தாக்குதல் ஆட்டம் 1.Nf3 2.g3, என்று ஆடுவாரேயானால் கருப்பு ஆட்டக்காரர் ராணியின் மந்திரியை விலா மடிப்புத்தேர் நகர்வு செய்து நீண்ட மூலைவிட்டப் பாதைக்கு வந்து வெள்ளை ஆட்டக்காரரின் மந்திரியை எதிர்த்து ஆடலாம். இதனால் வெள்ளை ஆட்டக்காரர் c4 நகர்வை செய்ய முடியாமல் திண்டாடுவார். ராசாவின் பக்கத்தில் உள்ள மந்திரியை நீண்ட மூலைவிட்டப் பாதைக்கு அழைத்து வரும் விலா மடிப்புத்தேர் நகர்வு அபூர்வமாகவே ஆடப்படுகிறது. ஏனெனில் கோட்டைக் கட்டிக் கொண்டுள்ள ராசாவிற்கு முன்பாக உள்ள சிப்பாய்களின் பாதுகாப்பு கேடயம் இந்நகர்வினால் பலவீனமாகிறது. அதுமட்டுமல்லாமல் மிகக் குறைவான அளவிலான கட்டங்களையே இந்நிலையில் இந்நகர்வு கட்டுபடுத்துகிறது. இருந்தபோதிலும் 1.g4?! என்ற கிராப்பின் தாக்குதல் திறப்பு மற்றும் 1.e4 g5?! என்ற [[போர்க்குவின் தடுப்பாட்டத் திறப்பு|போர்க்குவின் தடுப்பாட்டத் திறப்பிலும் சில வேளைகளில் மைக்கேல் பாசுமான் போன்ற சர்வதேச வீரரகளால் ஆடப்பட்டுள்ளது.

வெள்ளை நிற ஆட்டக்காரரின் மந்திரி a3 கட்டத்திற்கு நகர்ந்து மூலைவிட்டப் பாதை அமைப்பை உண்டாக்குவது விலா மடிப்புத்தேர் நகர்வின் நீட்டிப்பு என்றழைக்கப்படுகிறது. நீண்ட மூலைவிட்டப் பாதையை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக இந்நகர்வு f8 சதுரத்தை நோக்கமாக கொண்டிருக்கும். ஒருவேளை கருப்பு ஆட்டக்காரர் e சிப்பாயை நகர்த்தும் பட்சத்தில் வெள்ளை ஆட்டக்காரர் Bxf8 என்று ஆடமுடியும். இதன் பிறகு ராசாவால் அதைக் கைப்பற்றினாலும் செயற்கைக் கோட்டைக் கட்டிக் கொள்ள கருப்பு ஆட்டக்காரர் நீண்ட நேரத்தை வீணாக்க வேண்டியுள்ளது. இத்தந்திரம் இவான்சு பலியாட்டம் மற்றும் பெங்கோ பலியாட்டம் போன்ற திறப்பாட்டங்களில் நிகழ்கிறது. மேலும் பிரெஞ்சு தடுப்பாட்டத் திறப்பில்கருப்பு ஆட்டக்காரர் பரவலாக Ba6 என்ற நகர்வை ஆடும்போதும் ராணியின் இந்தியத் தடுப்பாட்டத் திறப்பின்போது வெள்ளை ஆட்டக்காரர் g3 நகர்வை ஆடும்போதும் இவ்வகையான் விலாமடிப்புத் தேர் நகர்வு நிகழ்கிறது.

நான்கு விலா மடிப்புத்தேர் மந்திரிகள்தொகு

abcdefgh
88
77
66
55
44
33
22
11
abcdefgh
நான்கு விலா மடிப்புத்தேர் மந்திரிகள் 8.Bb2 என்ற நகர்வுக்குப் பின்னர்.[1]

உரூபின்சுடெய்ன் மற்றும் நிம்சோவிட்ச்சு இடையில் 1925 ஆம் ஆண்டு மேரியான்பாத்தில் நான்கு விலா மடிப்புத்தேர் மந்திரிகள் நிகழ்வு அமைந்தது. இரண்டு குதிரைகள் முன்னேறியும் இரண்டு குதிரைகள் சிறிதளவும் நகராமல் சொந்த சதுரத்திலும் உள்ளன.இந்த நிலையில், நிம்சோவிட்ச்சு ” அதிநவீன ஆட்டக்காரர்களான எங்களைப் போன்றவர்கள்தான் மனசாட்சியின் படி இரண்டு பக்கமும் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு நான்கு விலா மடிப்புத்தேர் மந்திரிகளையும் உருவாக்க முடியும்” என்று நகைச்சுவையாக சுட்டிக்காட்டுகிறார்.

மேற்கோள்கள்தொகு

உசாத்துணைகள்தொகு

  • Hooper, David; Whyld, Kenneth (1992), The Oxford Companion to Chess (2nd ed.), ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், ISBN 0-19-866164-9
  • Golombek, Harry (1977), Golombek's Encyclopedia of Chess, Crown Publishing, ISBN 0-517-53146-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலா_மடிப்புத்தேர்&oldid=2409293" இருந்து மீள்விக்கப்பட்டது