பெங்கோ பலியாட்டம்


சதுரங்க விளையாட்டில் பெங்கோ பலியாட்டம் ( Benko Gambit ) என்பது பெனானி தடுப்பாட்ட திறப்பின் மூன்றாவது நகர்வில் கருப்பு 3...b5 என்று நகர்த்தி விளையாடும் அடையாளமே பெங்கோ பலியாட்டம் எனப்படும்.

பெங்கோ பலியாட்டம்
abcdefgh
8
a8 black rook
b8 black knight
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
h8 black rook
a7 black pawn
d7 black pawn
e7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
f6 black knight
b5 black pawn
c5 black pawn
d5 white pawn
c4 white pawn
a2 white pawn
b2 white pawn
e2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் A57–A59
பெயரிடப்பட்டது பால் பெங்கோ
மூலம் பெனானி தடுப்பட்டம்
ஏனைய சொற்கள் வோல்கா பலியாட்டம்
வோல்கா - பெங்கோ பலியாட்டம்
Chessgames.com opening explorer
1. d4 Nf6
2. c4 c5
3. d5 b5


சதுரங்க முன்நகர்வுகளின் கலைக் களஞ்சியத்தில் பெங்கோ பலியாட்டத்திற்கு மூன்று குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன[1]. அவை,

  • A57 3...b5
  • A58 3...b5 4.cxb5 a6 5.bxa6
  • A59 3...b5 4.cxb5 a6 5.bxa6 Bxa6 6.Nc3 d6 7.e4

தோற்றமும் முன்னோடிகளும்

தொகு

கருப்பு ...b5 மற்றும் ...a6 என விளையாடி சிப்பாயைத் தியாகம் செய்வது மிகப்பழைய சதுரங்க உத்தியாகும். காரெல் ஓப்போசென்சிகை இந்த உத்தியை 1936 ஆம் ஆண்டு பொடேபிராடில் நடைபெற்ற ஆட்டத்தில் சிடேன் சுடால்பெர்க்குக்கு எதிராகவும் பார்னுவில் 1937 ஆம் ஆண்டில் பவுல் கீரசுக்குக்கு எதிராகவும் அதே ஆண்டு பராகுவேயில் எரிச்சு எலிசுகாசெசுக்கு எதிராகவும் விளையாடப் பயன்படுத்தினார். பின்னர் 1953 ஆம் ஆண்டு சூரிச்சுவில் பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் போட்டியில் மார்க்கு தைமோனோ,டேவிட் பிரான்சிடெய்ன் ஆடிய ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பெரும்பாலான ஆட்டங்களில் கருப்பு ..c5 மற்றும் ...b5 என்று ஆடிய பிறகு அரசரின் இந்தியத் தடுப்பாட்டத் திறப்போடு ஆரம்பித்தன. பின்னர் 1936 ஆம் ஆண்டு மியூனிச் நகரில் நடைபெற்ற போட்டியில் தோர்வால்டுசென் மற்றும் வைட்டோனிசு இடையிலான ஆட்டத்தில் இன்றுள்ள தரப்படுத்தப்பட்ட நகர்வு வரிசையான 1.d4 Nf6 2.c4 c5 3.d5 b5 என்ற வரிசை முதன்முதலாக ஆடப்பட்டது.

இத்திறப்பின் உண்மையான பெயர் வோல்கா பலியாட்டம் ஆகும். இத்திறப்பு உருசியாவில் உள்ள வோல்கா நதியின் பெயாரால் அழைக்கப்பட்டது. ஏனெனில் 3...b5!? என்ற நகர்வு குறித்த ஒரு படைப்பு உருசியாவில் வெளிவந்த பத்திரிகையான சிகாச்மேடியில் முதன்முதலில் பிரசுரமானது. இச்சொல்லாட்சி பரவலாக உருசிய இலக்கியங்களில் இன்னும் பயன்படுத்தப்படுகிறது.

1960 களின் ஆரம்பத்தில் இத்திறப்பு உத்தி அங்கேரி மற்றும் அமெரிக்கா நாடுகளைச் சார்ந்த கிராண்ட் மாசுடர் பால் பெங்கோ என்பவரால் பரிந்துரைக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டில் இவர் பலபுதிய வழிமுறைகளுடன் இத்திறப்பைக் குறித்து எழுதி தன்னுடைய பெங்கோ பலியாட்டம் என்ற நூலை வெளியிட்டார். அன்று முதல் பெங்கோ பலியாட்டம் என்ற பெயர் நிரந்தரமாகி குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

பெங்கோ பலியாட்டம் என்பதும் வோல்கா பலியாட்டம் என்பதும் உண்மையில் வெவ்வேறான நகர்வுகளாகும். சில வேளைகளில் கருப்பின் 3...b5 நகர்வைத் தொடர்ந்து விரைவாக ...e6 என ஆடுவது வோல்கா பலியாட்டம் என்றும் மாறாக 3...b5 4.cxb5 a6 என்று ஆடப்படுவது பெங்கோ பலியாட்டம் எனவும் அழைக்கப்பட்டது. தற்பொழுது இவை இரண்டும் ஒரே வகையானவை என்று கருதப்பட்டு பெங்கோ – வோல்கா பலியாட்டம் அல்லது வோல்கா – பெங்கோ பலியாட்டம் என்று அழைக்கப்படுகிறது[2] Now the terms are synonyms and are used interchangeably or joined together with a hyphen (Volga–Benko Gambit).[3].

பெங்கோ பலியாட்டக் கோட்பாடு

தொகு

1.d4 Nf6 2.c4 c5 3.d5 b5 என்ற நகர்வுகளுக்குப் பின்னர் 4. cxb5 a6 5. bxa6 Bxa6 நகர்வுகளை விளையாடுவது பிரதானமான வரிசையாகும். இதைத் தொடர்ந்து கருப்பு தன்னுடைய f8-அமைச்சரை விலா மடிப்புத்தேராக உருவாக்கி விளையாடுகிறார். (கருப்பு ஆட்டக்காரர்கள் இரண்டு விலா மடிப்புத் தேர்களை உருவாக்க தயங்குகின்றனர், ஆனால் வெள்ளை தன்னுடைய g3 மற்றும் b3 சிப்பாய்களைத் தள்ளி இரண்டு பக்கங்களிலும் விலா மடிப்புத் தேர் உருவாக்கி ஆடுகின்றனர்.) கருப்பு 6.b3 Bg7 7.Bb2 Nxa6! என்ற நகர்வுகளை உத்தேசித்து தன்னுடைய ஐந்தாவது நகர்த்தலை 5...g6 என்றும் ஆட வாய்ப்பும் உள்ளது.

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது யாதெனில் கருப்பின் அடுத்த நகர்வான Nb4 நகர்வை தடுமாற்றத்துடன் சந்திக்க வேண்டிய நிலை வெள்ளைக்கு ஏற்படுகிறது. ஏனெனில் குதிரை ஒரே நேரத்தில் d5 மற்றும் a2 சிப்பாய்களை தாக்குகிறது. இதிலிருந்து தப்பிக்க Nc3 நகர்வை ஆடினால் கருப்பு தனது அடுத்த நகர்வில் ...Nfxd5 என்று விளையாடும். d5 குதிரையக் கைப்பற்ற வெள்ளையால் முடியாது, ஏனெனில் c3 கட்டத்தில் குதிரை செருகியாக மாறியுள்ளது.

கருப்பின் அதிக சிப்பாய் இழப்பு அதற்கு பலவகைகளில் நன்மையாக ஈடு செய்யப்படுகிறது. வெள்ளையின் காய்கள் பல இன்னமும் நகரமுடியாமல் நிற்பது முதலாவது நன்மையாகும். இந்த பிரச்சினையைத் தீர்க்க வெள்ளை முதலில் f1 அமைச்சரை வெளியில் கொண்டு வரவேண்டும். எனவே 6. Nc3 d6 என்ற ஆறாவது நகர்த்தலுக்குப் பின்னர் வெள்ளை 7.e4 என்றுதான் விளையாட வேண்டும். இதை ஆடினால் உடனடியாக கருப்பு 7...Bxf1 என்று ஆடுவார். 7...Bxf1 8.Kxf1 g6 9.g3 Bg7 10.Kg2 என்ற போக்கில் ஆட்டம் தொடர்ந்தாலும் வெள்ளை ஆட்டக்காரரால் கோட்டை கட்டிக் கொள்ள முடியாமல் போகிறது. அவர் தன்னுடைய அரசரை g2 கட்டத்திற்குத் தள்ளி செயற்கைக் கோட்டையே கட்டிக் கொள்ள வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க வெள்ளை விலா மடிப்புத்தேர் உருவாக்க நினைத்தாலும் அவருடைய சிப்பாய் d5 கட்டத்தில் நின்று பாதையை வழிமறித்து வெள்ளை ஆட்டக்காரருக்கு பின்னடைவை தருகிறது.

இவை தவிர, கருப்பு ஆட்டக்காரருக்கும் ஆட்டத்திற்குள் வேகமான முன்னேத்தையும் a1–h8 பாதையை கட்டுப்பாட்டில் வைத்து விளையாடும் வாய்ப்பும் ஏற்படுகிறது. மேலும் கருப்பு ஆட்டக்காரரால் பாதி திறந்த a- மற்றும் b- வரிசைகளில் வெள்ளைக்கு அழுத்தம் கொடுக்கவும் முடிகிறது. பலியாட்டத்தில் வழக்கமில்லாத இந்த நன்மைகள் ஆட்டத்தின் இறுதியாட்டம் வரையிலும் தொடர்கின்றன. இந்நிலையில் பரிமாற்றம் செய்யப்பட்ட அரசிகளைப் பற்றி கருப்பு கவலைப்படுவதில்லை. உண்மையில் அரசிகள் பரிமாற்றத்தினால் வெள்ளையினால் உண்டாகும் அரசர் பக்கத்து தாக்குதல் கருப்புக்கு சற்று குறையவே செய்கிறது.

பெங்கோ பலியாட்டத்தின் பிரதான வரிசை வெள்ளைக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க வரிசையாக உள்ளது. இவ்வரிசை உண்டாக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்க பல மாற்று வழிகள் காணப்படுகின்றன. அவற்றில் மிக எளியது நான்காவது நகர்வில் பலியை மறுத்துவிட்டு எளிமையாக 4.Nf3 என்று ஆடுவதாகும். இது தவிர 4.Nd2, 4.a4, மற்றும் 4.Qc2.என்று நகர்த்தியும் விளையாட முடியும். 2004 ஆம் ஆண்டுகளில் இந்நிலையில் விளையாடக்கூடிய கிராண்ட் மாசுடர் தரத்திலான மற்றொரு நகர்வு என்னவெனில் சிப்பாயை ஏற்றுக்கொண்டு 4.cxb5 a6 5.b6 என்று ஆடுவதாக இருந்தது. 5.e3 என ஆடுவதும் பிரபலாமாக இருந்தது.

பயன்

தொகு

இந்த பலியாட்ட நகர்வு பெங்கோவுக்கு பெங்கோ பலியாட்டம் என்ற பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. உலகத்தின் சதுரங்க சாம்பியன்கள் விசுவநாதன் ஆனந்த், காரி காசுப்ரோவ், வெசிலின் தோப்பலோவ், மைக்கேல் தால், வாசிலி இவான்சக், மைக்கேல் ஆடம்சு, அலெக்சி சிரோவ், போரிசு கெல்பண்ட் மற்றும் இவ்செனி பாரீவ் போன்றவர்கள் பலரும் ஒரு முறையாவது இந்த பலியாட்டத் திறப்பை ஆடியுள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Chess Archaeology: Openings classified under ECO A57–A59
  2. Benko, Pal (1974). The Benko Gambit. B. T. Batsford, London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7134-1058-2.
  3. Konikowski, Jerry (November 2002). "A weapon against the Volga Gambit". ChessBase Magazine (ChessBase GmbH) (98). 

இவற்றையும் காண்க

தொகு


உசாத்துணை

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெங்கோ_பலியாட்டம்&oldid=2919087" இலிருந்து மீள்விக்கப்பட்டது