வில்மா சுப்ரா
வில்மா சுப்ரா (Wilma Subra) ஓர் அமெரிக்க சுற்றுச்சூழல் விஞ்ஞானியாவார்.[2] சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனமான சுப்ரா நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.[3]
வில்மா சுப்ரா Wilma Subra | |
---|---|
பிறப்பு | 1943[1] மோர்கன் நகரம், லூசியானா |
கல்வி | இளநிலை (1965), முதுநிலை (1966), வேதியியல் மற்றும் நுண்ணுயிரியியல் தென்மேற்கு லூசியானா பல்கலைக்கழகம்[1] |
பணி | வேதியியலாளர் |
அமைப்பு(கள்) | சுப்ரா நிறுவனம் |
அறியப்படுவது | சுற்றுச்சூழல் சுகாதாரம் |
சுப்ரா அமெரிக்காவிலுள்ள லூசியானாவின் மோர்கன் நகரில் 1943 ஆம் ஆண்டு பிறந்தார். மோர்கனிலும் அருகில் உள்ள பயோ விசுடா நகரத்திலும் இவர் வளர்ந்தார். சுப்ராவின் தந்தை ஒரு வேதியியலாளர் மற்றும் தாத்தா ஒரு மீனவர். சுப்ரா 1965 ஆம் ஆண்டு லாஃபாயெட்டில் உள்ள தென்மேற்கு லூசியானா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் மற்றும் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார், மேலும் ஓராண்டு கழித்து இத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[4]
1967 ஆம் ஆண்டு 1981 ஆம் ஆண்டு வரை சுப்ரா வளைகுடா தெற்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார்.[5] சுற்றுச்சூழல் சுகாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதற்காக இவர் 1981 ஆம் ஆண்டு மே மாதத்தில் சுப்ரா நிறுவனத்தை நிறுவினார்.[4]
சுப்ரா ஏழு ஆண்டுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை சுற்றுச்சூழல் கொள்கை மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக இருந்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் தேசிய சுற்றுச்சூழல் நீதி ஆலோசனைக் குழுவில் ஆறு ஆண்டுகளும் , சுற்றுச்சூழல் ஒத்துழைப்புக்கான ஆணையத்தின் அமெரிக்க பிரதிநிதியாக தேசிய ஆலோசனைக் குழுவில் ஐந்து ஆண்டுகளும் சுப்ரா பணியாற்றினார்.[3] 2010 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படமான காசுலேண்டில் தோன்றினார்.
விருதுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Jacqueline Vaughn, Waste Management: A Reference Handbook, ABC-CLIO, 2009, p. 163.
- Steve Lerner, "Wilma Subra", Commonweal, undated.
- ↑ Sharon, Cohen. "Genial Grandmother Is 'Top Gun' in Environmental Activism", Associated Press, October 21, 2001.
- ↑ 3.0 3.1 "Biography of Wilma Subra", Environmental Protection Agency, 2007.
- ↑ 4.0 4.1 Peggy Frankland, Women Pioneers of the Louisiana Environmental Movement, University Press of Mississippi, 2013, p. 167.
- ↑ Barbara L. Allen, Uneasy Alchemy: Citizens and Experts in Louisiana's Chemical Corridor Disputes, MIT Press, 2003, p. 124.
- ↑ "Meet the 1999 MacArthur Fellows", MacArthur Foundation
- ↑ "2008 Environmental Justice Conference: Wilma Subra". Princeton University. Archived from the original on 2012-04-07. பார்க்கப்பட்ட நாள் 2013-03-07.
மேலும் படிக்க
தொகு- "நியாயமான வளர்ச்சியின் வக்கீல்களுடன் உரையாடல்கள்" பரணிடப்பட்டது 2008-07-09 at the வந்தவழி இயந்திரம் காமன்வெல்
- "CHE பார்ட்னருடன் நேர்காணல், வில்மா சுப்ரா" பரணிடப்பட்டது 2016-03-13 at the வந்தவழி இயந்திரம், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கூட்டு
- வில்மா சுப்ராவிலிருந்து நியூயார்க் மாநிலத்திற்கு ஒரு கடிதம்: ஃப்ராகிங் vs. தண்ணீர்" அக்டோபர் 1, 2009
- "சூறாவளி தாக்கப்பட்ட பகுதியில் இருந்து வில்மா சுப்ரா குறிப்புகள்" பரணிடப்பட்டது 2010-10-08 at the வந்தவழி இயந்திரம், உலகளாவிய சமூக வலைப்பின்னல், செப்டம்பர் 16, 2005
- ஓநாய், விக்கி. "வில்மா சுப்ரா: நச்சு சூழலில் நீதி கண்டுபிடிக்க சமூகங்களுக்கு உதவும் வேதியியலாளர்", சுற்றுச்சூழல் நடவடிக்கைக்கான குடிமக்கள் லீக் இப்போது, பிப்ரவரி 2009.
- "வில்மா சுப்ரா: சுற்றுச்சூழல் வேதியியல் மற்றும் சமூக வாதத்தில் ஒரு முன்னோடி", வேதியியல் மற்றும் பொறியியல் செய்திகள், ஜனவரி 17, 2020