வில்லியம் குட்டெல்

 

வில்லியம் குட்டெல்
பிறப்புஅக்டோபர் 17, 1829
மால்டா
இறப்புஅக்டோபர் 27, 1894(1894-10-27) (அகவை 65)
பிலடெல்பியா, பென்சில்வேனியா
அறியப்படுவதுகுட்டெல் குறியீடு
மருத்துவப் பணிவாழ்வு
தொழில்மருத்துவர்
சிறப்புத்துறைமகளிர் நலவியல்
கையொப்பம்

வில்லியம் குட்டெல் (William Goodell (gynecologist); அக்டோபர் 17,1829- 27,1894) என்பவர் பிலடெல்பியாவியாவைச் சேர்ந்த ஓர் அமெரிக்க மகளிர் மருத்துவ நிபுணர் ஆவார். இவர் குட்டெல்லின் குறியீடு என்று குறிப்பிடப்படுவதை முதலில் விவரித்ததற்காக நன்கு நினைவுகூரப்படுகிறார்.[1]

வாழ்க்கை

தொகு

வில்லியம் குட்டெல் மால்டாவில் மிசனரி வில்லியம் குடெல்லின் மகனாகப் பிறந்தார். இவர் மாசசூசெட்சில் உள்ள வில்லியம்ஸ் கல்லூரி மற்றும் பிலடெல்பியாவில் உள்ள ஜெபர்சன் மருத்துவக் கல்லூரியில் பயின்று 1854-இல் பட்டம் பெற்றார்.[2] இவர் 1861 வரை கான்ஸ்டான்டினோப்பிளில் பணியாற்றினார். 1870ஆம் ஆண்டில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பெண்களின் மகப்பேறியல் நோய்கள் குறித்த விரிவுரையாளராகவும், பின்னர் 1874-இல் பெண்கள் மற்றும் குழந்தைகள் நோய்களில் மருத்துவ பேராசிரியராகவும் நியமிக்கப்படும் வரை இவர் மேற்கு மையத்தில் பணியாற்றினார்.[3]

1877ஆம் ஆண்டில் அமெரிக்கத் தத்துவ சங்கத்தின் உறுப்பினராக வில்லியம் குட்டெல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

1882ஆம் ஆண்டில், இவர் 31 வயதான நோயாளியிடமிருந்து 51 கிலோ எடையுள்ள கருப்பைக் கட்டியை அகற்றினார். இந்த நோயாளி அறுவை சிகிச்சைக்குப் பிறகு 34 கிலோ எடையைக் கொண்டிருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. William Goodell at Mondofacto online medical dictionary
  2. Charles Cole Creegan, Josephine A.B. Goodnow. Great Missionaries of the Church, page 42. Ayer Publishing, 1972. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780836925418/
  3. Obituary Br Med J. 1894 November 17; 2 (1768): 1149.
  4. "APS Member History". search.amphilsoc.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_குட்டெல்&oldid=3946030" இலிருந்து மீள்விக்கப்பட்டது