வில்லியம் பெக்

சர் வில்லியம் பெக் (William Peck) (3 ஜனவரி 1862, தகிளாசுக் கோட்டை, கிர்க்குடுபிரைட்சயர் – 7 மார்ச்சு 1925, எடின்பர்கு) ஒரு இசுகாட்லாந்து வானியலாளரும் அறிவியல் கருவியியலாளரும் ஆவார். இவர் எடின்பர்கு அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினராகவும் எடின்பர்கு நகர வானியல் கழக இயக்குநராகவும் இருந்துள்ளார்.

வான்காணக இல்லம், எடின்பர்கு
அரசு வான்காணகம், பிளாக்போர்டு மலை
சர் வில்லியம் பெக் கல்லறை, வாரிசுட்டான் இடுகாடு, எடின்பர்கு

வாழ்க்கை தொகு

இவர் வில்லியம் பெக்கின் மகனாக கிர்க்குடுபிரைட்சயரில் உள்ள தகிளாசுக் கோட்டையில் 1862 ஜனவரி 3 இல் பிறந்தார். இவருடைய இளமையிலேயே இவரது குடும்பம் எடின்பர்கு நகருக்கு இடம்பெயர்ந்தது. அங்கு இவர் ஜார்ஜீ மாவட்டில் அமைந்த இராபர்ட் கோக்சின் பசைத் தொழிலத்தில் பணிபுரிந்தார். கோக்சு இவரை 1883 இல் தனியார் வான்கணகத்தின் பொறுப்பை ஏற்க வேண்டினார், இவருக்குப் பல்கலைக்கழகப் பயிற்சி இல்லாவிட்டாலும் இவர் வானியலில் விரிவுரை ஆற்றலானார்.[1]

இவர் 1889 இலிருந்து தன் இறப்பு வரை எடின்பர்கு நகர வான்காணக இயக்குநராக இருந்தார்.[2] இதே ஆண்டில் இவர் எடின்பர்கு அரசு கழக ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை முன்மொழிந்தவர்களுள் இராபர்ட் கோக்சு, சர் ஆர்த்தர் மிட்செல், அலெக்சாந்தர் புச்சான் எட்டாம் அரிகில் மன்னர் ஆகியோர் அடங்குவர்.[3] இவர் எடின்பர்கு வான்காணகத்தை கால்ட்டன் மலையில் இருந்து பிளாக்போர்டு மலைக்கு மாற்றும் பணியில் 1893 இலிருந்து 1896 வரை ஈடுபட்டார்.[4]

இவர் 1898 இல் மடெல்விக் உந்துப் பேழைக் குழுமம் ஒன்றை நிறுவினார். இது உலக மின்மகிழுந்துகளுக்கான முதன்மைத் தொழிலகங்களில் ஒன்றாகும். இது எடின்பர்கில் கிரேண்டன் மாடெல்விக் பணிப்பட்டறையில் அமைந்திருந்தது.[1]

பிளாக்போர்டு மலைக்கு வான்காணகம் மாற்றப்பட்ட பிறகும் இவர் எடின்பர்கிலுள்ள கால்ட்டன் மலை வான்காணக வீட்டிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.[5]

1800 களில் நிறுவப்பட்ட கமுக்க மருள்நெறிக் கழகமான தங்க விடியல் துறவு ஒழுங்கையிலும் இவர் இருந்துள்ளார். இந்த் தங்க விடியலின் உறுப்பினர்களாக இருந்தவர்களுள் அய்ரிய கவிஞர் வில்லியம் ஈட்சும் நடிகை புளோரன்சு பாரும், ஆசுக்கார் வைல்டின் மனைவி கோப்சுட்டன்சு மேரியும் பிராம் சுட்டோக்கரும் அலிசுட்டர் குரோவ்லியும் அடங்குவர்.

இவருக்கு ஐந்தாம் ஜார்ஜ் 1917 இல் வீரத்திருத்தகை பட்டம் (நைட் பட்டம்) அளித்தார்.

இவர் எடின்பர்கு, இன்வர்லீத் சரகத்தில் உள்ள தன் வீட்டில் 1925 மார்ச்சு 7 இல் இறந்தார். வாரிசுட்டான் இடுகாட்டில் முதன்மை கிழக்கு-மேற்கு வழியில் வடக்குப் புறத்து மேற்பிரிவில் இவர் புதைக்கப்பட்டார்.

குடும்பம் தொகு

இவர் 1889 இல் கிறித்தினா தாம்சனை மணந்தார் (1865-1922).

படைப்புகள் தொகு

  • கையடக்க விண்மீன்படம் (1880)
  • விண்மீன் கொத்துகளும் அவற்றைக் கண்டறிதலும் (1887)
  • வானியலுக்கான மக்கள் கையேடும் வரைநூலும் (1890)
  • நோக்கீட்டாளரின் வானக வரைநூல் (1898)
  • தென்னரைக்கோள விண்மீன் கொத்துகளும் அவற்றைக் கண்டறிதலும் (1911)
  • விண்கோள அறிமுகம். தொகுதி 1 விண்மீன் குழுக்களின் கிடப்பியலும் தொன்மவியலும் (1919)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_பெக்&oldid=3531490" இருந்து மீள்விக்கப்பட்டது