வில்லியம் ரெஜினால்ட் டீன்

வில்லியம் ரெஜினால்ட் டீன் (1896–1973) ஒரு ஆங்கிலேய பயன்முறைக் கணக்கியலாளா் மற்றும் பாய்மத் துணைமவியலாளா். அராய்ச்சியில் இவரது ஆர்வம் ஸ்டோக் பாய்வு , திண்ம இயக்கெந்திரவியல் மற்றும் வளைந்த கான்களில் பாய்வு ஆகியவற்றை உள்ளடக்கியது. டீன் எண் இவரது பெயரால் உருவானது.

டீன் கேம்பிாிட்ஜிலுள்ள டிாினிட்டி கல்லுாரியில் தனது இளங்கலை பட்டத்தை பெற்றாா். இம்பீரியல் கல்லுாரியில் ஐந்து ஆண்டுகள் கழித்த பின் டிாினிட்டி கல்லுாரியின் ஓா் உறுப்பினராக செயல்பட்டாா். போாின் போது  M.I.D.ன் எதிா் வளியுா்தி பரிசோதனைப் பிரிவில் கணிதம் சாா்ந்த பணிகளை இவர் மேற்கொண்டாா்.[1] இவா் லண்டன் பல்கைலக்கழக கல்லுாரியிலும் ( 1964ல் இங்கிருந்து ஓய்வு பெற்றாா்) அரிசோனா பல்கலைகழகத்திலும் கோல்ட்ஸ்மிட் பதவியினை பயன்முறை கணக்கியலில் பெற்றாா்.

மேற்கோள்கள்தொகு

  1. Milne, E. A. (1945). "Ralph Howard Fowler. 1889-1944". Obituary Notices of Fellows of the Royal Society 5 (14): 60–78. doi:10.1098/rsbm.1945.0005.