வில்லியம் வில்பர்ஃபோர்ஸ்

வில்லியம் வில்பர்ஃபோர்ஸ்

William Wilberforce
William Wilberforce
by Karl Anton Hickel, அண். 1794
Member of Parliament
பதவியில்
31 October 1780 – February 1825
முன்னையவர்David Hartley
பின்னவர்Arthur Gough-Calthorpe
தொகுதிKingston upon Hull (1780–1784)
Yorkshire (1784–1812)
Bramber (1812–1825)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 August 1759
Kingston upon Hull, Great Britain
இறப்பு29 July 1833 (aged 73)
இலண்டன், United Kingdom
அரசியல் கட்சிIndependent
துணைவர்Barbara Spooner
பிள்ளைகள்William, Barbara, Elizabeth, Robert, Samuel and Henry

வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் (24 ஆகஸ்ட் 1759-29 ஜுலை 1883) ஒரு ஆங்கிலேய அரசியல்வாதி, கொடையாளி மற்றும் அடிமை வணிகத்தைத் தடுக்கும் இயக்கத்தின் தலைவராகவும் இருந்தார். இவர் 1780-ல் அரசியலில் நுழைந்தார். இறுதியாக யாக்சயாின் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக (1784-1812) ஆனார். இவர் 1785-ல் கிறிஸ்தவராக மாறினார். இந்நிகழ்வு இவர் வாழ்க்கையில் பல மாற்றங்களைத் தந்தது. 17877-ல் வில்லியம், தாமஸ் கிரார்க்சோனட் சார்ப், கன்னா மோர் மற்றும் சார்லஸ் மிடில்டன் ஆகியோரைச் சந்தித்தார். இவர் அனைவரும் சேர்ந்து வில்லியம்-யை அடிமை ஒழிப்பு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல சம்மதிக்க வைத்தனர். விரைவில் இவ்வியக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார். ஆங்கில அடிமை வணிகத்திற்கு எதிராக 20 ஆண்டுகளாக போராடினார்.

மதம் நல்லொழுக்கம் மற்றும் கல்வி ஆகியவற்றின் முக்கியத்துவம் வில்லியமுக்கு உணர்த்தப்பட்டது. தீமையை அளிக்கும் கழகம், இந்தியாவில் கிறிஸ்துவ சமயத்தைப் பரப்பும் அமைப்பு, சுதந்திர சைர லியோன் காலனியை உருவாக்குதல் கிறிஸ்துவ சபை உருவாக்கம், விலங்குகள் வதை தடுப்புக் கழகம் ஆகியவற்றிற்காக பரப்புரை மேற்கொண்டு வெற்றிபெற்றார். மாறுதலை விரும்பாத அவருடைய பண்பு அவரை அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கருத்து மாறுபாடுள்ள சட்டத்தை ஆதரவளிக்க வழிகோலியது. மேலும் இவர் சொந்த நாட்டில் உள்ள அநீதியைக் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும், மாற்றாக வெளிநாடுகளில் உள்ள அடிமைகளுக்காக பரப்புரை மேற்கொள்வதாகவும் விமர்சனத்திற்கு உள்ளானார். அதன்பிறகு, முழுமையான அடிமைத் தனத்தை ஒழிப்பதற்காக பரப்புரை மேற்கொண்டார். 1826-ல் வில்லியம்-ன் உடலநலக்குறைவு காரணமாக நாடாளுமன்றத்திலிருந்து பதவி விலகினார். அதன்பிறகும் தொடர்ந்து அடிமை ஒழிப்பிற்காக போராடினார். இவருடைய பரப்புரை அடிமை ஒழிப்புச் சட்டம் 1833 உருவாக வழி வகுத்தது. இச்சட்டம் ஆங்கில பேரரசில் அடிமை ஒழிப்பிற்கு வழி வகுத்தது. இச் சட்டம் ஆங்கிலப் பராளுமன்றத்தில் நிறைவேறியதைக் கேட்ட 3 நாட்களுக்குப் பிறகு வில்லியம் மரணமடைந்தார். வில்லியம் தன்னுடைய நெருங்கிய நண்பரான வில்லியம் பிட்டின் கல்லரைக்கு அருகில் புதைக்கப்பட்டார்.

குழந்தைப் பருவம் மற்றும் கல்வி தொகு

வில்ஃபர்போர்ஸ் இங்கிலாந்திலுள்ள யார்க்சயர் மாகாணத்தில் உள்ள ஹல் என்ற ஊரில் ஆகஸ்ட் 24,1759-ல் ராபர்ட் வில்ஃபர்போர்ஸ் (1728-1768)ஒரு செல்வ செழிப்புமிக்க வணிகர்,அவருடைய மனைவி எலிசபெத் பேர்டு(1730-17980)ஆகிய இருவருக்கும் ஒரே மகனாகப் பிறந்தார். இவருடைய தாத்தா வில்லியம்(1690-1774 அல்லது 1776) கடல் கடந்து பால்டிக் நாடுகளுடன் வணிகம் செய்து, தன் குடும்பத்தைச் செழிப்புடன் வைத்திருந்தார். இவர் இரண்டு முறை ஹல்-ன் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வில்ஃபர்போர்ஸ் சிறிய, மெலிந்த, உடல்நலம் குன்றியராகவும் மற்றும் கண்பார்வை குறையுள்ள சிறுவனாகவும் இருந்தார். 1767-ல் ஹல்-ல் உள்ள இலக்கணப் பள்ளியில் சேர்ந்தார். அந்த நேரம் இளமை மற்றும் திறம் வாய்ந்த ஜோசப் மில்னர் அப்பள்ளியின் தலைமையாசிாியராக இருந்தார். இவர் வில்ஃபர்போர்ஸ்-ன் வாழ்நாள் நண்பராகத் திகழ்ந்தார். வில்லியம்-ன் தந்தை 1768-ல் இறந்தார். அதற்கு முன் வரை பள்ளியில் இவருக்கு சாதகமான சூழ்நிலையே இருந்தது. அவருடைய தந்தை இறந்தபின் வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. 9 வயது சிறுவனான வில்ஃபர்போர்ஸ்-ஐ வளர்க்க அவருடைய தாயார் மிகவும் சிரமப்பட்டார். எனவே செல்வச் செழிப்பு மிக்க அவருடைய அத்தை, மாமா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர்களுடைய வீடு புனித ஜேம்ஸ், லண்டன் மற்றும் லண்டனிலிருந்து 7 மைல் தொலைவில் இலண்டனின் தென்மேற்குப் பகுதியில் உள்ள விம்பிள்டன் ஆகிய இரு இடங்களிலும் இருந்தன. இரண்டு ஆண்டுகள் அவர் விடுதியில் தங்கிப் படித்தார். இவருடைய விடுமுறை நாட்களை விம்பிள்டனில் கழித்தார். அங்குதான் அவர் தன் உறவினர்களை அதிகமாக நேசித்தார். வில்ஃபர்போர்ஸ் கிறிஸ்தவ மதத்தின் மீது ஈடுபாடு கொண்டார். ஏனென்றால் அவருடைய அத்தை ஹன்னா, செல்வச் செழிப்பு மிக்க கிறிஸ்தவ வணிகரான ஜான் தார்ன்டன்-ன் தந்தையாவார். இவருடைய தாக்கத்தினாலேயே வில்ஃபர்போர்ஸ் கிறிஸ்தவராக மாறினார்.

வில்ஃபர்போர்ஸ் தீவிரமான கிறிஸ்தவனாக மாறினார். இதனைப் பார்த்த அவருடைய தாயும், தாத்தாவும் 1771-ல் அவருடைய 12-ம் வயதில் மீண்டும் ஹல்-லிற்கே அழைத்து வந்தனர். தன்னுடைய அத்தை, மாமாவைப் பிாிந்து வந்த வில்ஃபர்போர்ஸ் மிகவும் மனமுடைந்து போனார். வில்ஃபர்போர்ஸ்ஸின் குடும்பம் அவரை ஹல்-லில் உள்ள இலக்கணப் பள்ளியில் பயில அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அப்பள்ளியின் தலைமை ஆசிாியர் ஒரு தீவிர சமயப் பற்றாளர். ஆகவே வில்ஃபர்போர்ஸ் அருகில் உள்ள பாக்லிங்டன் பள்ளியில் 1771 முதல் 1776 வரை தன் படிப்பைத் தொடர்ந்தார். கிறிஸ்தவ சமயத்தால் ஈர்க்கப்பட்டதால், வில்ஃபர்போர்ஸால் ஹல்-ன் வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிறகு அவருடைய கிறிஸ்தவ மதத்தின் உணர்ச்சி வேகம் குறைந்தவுடன் ஹல்-ன் சராசாி வாழ்க்கையை ஏற்றுக் கொண்டார். அக்டோபர் 1776-ல் தனது 17 ஆவது வயதில், வில்ஃபர்போர்ஸ் கேம்பிாிட்ஜ்ஜில் உள்ள புனித ஜான் கல்லூரியில் சேர்ந்தார். அவருடைய தாத்தா மற்றும் மாமாவின் இறப்பிற்குப் பிறகு, 1777-ல் செல்வந்தராகவும், சுதந்திரமாக செயல்படுபவராகவும் மாறினார். அதன் விளைவாக அவருக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வம் குறையத் தொடங்கியது. சீட்டு ஆடுதல், சூதாட்டம் மற்றும் குடிப்பழக்கம் போன்ற இன்பகரமான வாழ்க்கை வாழ்ந்தார். நகைச்சுவைத் திறன், தாராள மனப்பான்மை மற்றும் சிறந்த உரையாடல் வல்லுநராக இருந்ததால் இவருக்கு நண்பர்கள் அதிகம். அதில் எதிர்கால பிரதமமந்திாி வி்ல்லியம் பிட் -ம் ஒருவர். படிப்பில் கவனம் இல்லாமல் இருந்த போதிலும், அவருடைய இளங்கலைப் பட்டத்தை 1781-லும் முதுகலைப் பட்டத்தை 1788-லும் பெற்றார்.

மேற்கோள்கள் தொகு