விளக்கு உவமை
விளக்கு உவமை என்பது இயேசுவின் உவமைகளுள் ஒன்றாகும். புதிய ஏற்பாட்டின் மூன்று நற்செய்தி நூல்களில் இடம்பெறுகின்றது. மத்தேயு 5:14–15, மாற்கு 4:21–25 மற்றும் லூக்கா 8:16–18இல் இடம் பெறும் இவ்வுவமை, இந்த நூல்களில் விவரிப்பில் மிக சிறு வேறுபாட்டையே கொண்டுள்ளது. மாற்கு நற்செய்தியில் இவ்வுவமை உப்பும் ஒளியும் சொற்பொழிவுக்கு பின் வருகின்றது.
இயேசுவின் இந்த உவமையின் அடிப்படையில் "to hide one's light under a bushel" என்னும் ஆங்கில பழமொழியும் உண்டு.[1]
உவமையின் விவரிப்பு
தொகுலூக்கா நற்செய்தியில், பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் இயேசுவிடம் கூடி வந்தபோது அவர் கூறியது:
'எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர். வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை. ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக் கொள்ளப்படும்'
– லூக்கா 11:33–36, பொது மொழிபெயர்ப்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ Wilson, F. P. ed. (1970). The Oxford Dictionary of Proverbs. Third Edition. Oxford University Press. p.371. "Hide one's light (candle) under a bushel, To."