விவேகானந்தா உயர்நிலைப் பள்ளி, பிரிக்பீல்ட்சு
விவேகானந்தா தேசிய உயர்நிலைப்பள்ளி (Sekolah Menengah Kebangsaan (SMK) Vivekananda, சுருக்கமாக SMKV, அல்லது SMK VIVE) கோலாலம்பூரின் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமையானப் பள்ளியாகும். இது முன்னதாக செகோலா மெனென்கா தமிழ் விவேகானந்தா (விவேகானந்தா தமிழ் உயர்நிலைப்பள்ளி) என அழைக்கப்பட்டு வந்தது.
விவேகானந்தா உயர்நிலைப் பள்ளி | |
---|---|
அமைவிடம் | |
கோலாலம்பூர், கூட்டாட்சிப் பகுதி (மலேசியா) மலேசியா | |
தகவல் | |
வகை | அரசு இருபாலர் மேநிலைப்பள்ளி |
குறிக்கோள் | பெங்கெடயுவன் குன்சி கெபகாகியான் அறிவே மகிழ்ச்சிக்கு வழி |
தொடக்கம் | 1958 |
அதிபர் | திருமதி யோகராதை நாகலிங்கம் |
தரங்கள் | படிவம் 1 - படிவம் 5 |
வளாகம் | பெரும் பள்ளி வளாகம் |
நிறங்கள் | மஞ்சளும் அடர் நீலமும் |
இணைப்புகள் | மலேசியக் கல்வித்துறை |
சுருக்கம் | VIVE |
2009ஆம் ஆண்டில் இப்பள்ளியில் 1043 மாணாக்கர்கள் (499 மாணவர்களும் 544 மாணவிகளும்) பயின்றனர். 68 ஆசிரியர்கள் பணியாற்றினர்.
வரலாறு
தொகுவிவேகானந்தா ஆசிரமத்தின் ஆதரவில் இப்பள்ளி 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதனை மலேசியாவின் முதல் பிரதமர், துங்கு அப்துல் ரகுமான், துவக்கி வைத்தார்.
தலைமை ஆசிரியர்கள்
தொகு- திரு. எம் டி பிள்ளை 1960-1962
- திருமதி. ஐ. ஜி. யோகம் 1962-1964
- திரு கே. புருசோத்தமம் 1964-1979
- திரு ஜி. இராமலிங்கம் 1980-1983
- திரு பி. ஏ. தெய்முடு 1983-1988
- திருமதி பத்மாவதி சீ 1988-1989
- திரு ஆர். கணேசன் 1989-1998
- திருமதி சுசீலா நாயர் 1998-1999
- திருமதி புஷ்பா லீலா மகாலிங்கம் 2000-2004
- திருமதி சுமம் வேலாயுதன் 2005-2007
- திருமதி யோகராதை சி நாகலிங்கம் 2007-2011(மே)
- திரு. மோகன் சண்முகம் 2011(சூன்)-நடப்பில்
கட்டிடங்கள்
தொகுவிவேகானந்தா உயர்நிலைப்பள்ளியில் நான்கு கட்டிடத் தொகுதிகளும் (ஏ,பி,சி,டி) மூன்று கூடங்களும் உள்ளன.