விவேகா பாபாஜி

விவேகா பாபாஜி (Viveka Babajee 27 மே 1973 - 25 ஜூன் 2010) ஒரு மொரிசிய வடிவழகி மற்றும் நடிகை ஆவார் . மொரிசியசஸ் அழகி பட்டத்தினை 1993 ஆம் ஆண்டிலும் மொரிஷியஸ் பிரபஞ்ச அழகி 1994 ஆகிய பட்டங்களை பெற்றார் [1] [2] விவேகா பாபாஜி எஃப்டிவி இந்தியாவின் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக இருந்தார்.1990 களில் காமசூத்ரா ஆணுறை விளம்பரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். [3] 1994 ஆம் ஆண்டு "மணிலா திரைப்பட விழா" என்று அழைக்கப்படும் ஊழலிற்காவும் அவர் பரவலாக அறியப்படுகிறார். [4] 2002 ஆம் ஆண்டில் வெளியான யே கைசி மொஹபத் திரைப்படத்தின் மூலம் திரைவாழ்க்கையில் அறிமுகமானார்.

பாபாஜீ 25 ஜூன் 2010 அன்று மும்பையில் உள்ள அவரது பாந்த்ரா இல்லத்தில் தனது குடியிருப்பில் உச்சவரம்பு மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

நான்கு சகோதரிகளில் இளையவர், பாபாஜி 27 மே 1973 அன்று மொரீஷியஸின் போர்ட் லூயிஸில் பிறந்தார்.[சான்று தேவை] மராத்தியரான இவரது தாயார் ஐதராபாத்தில் பிறந்தார். 1990 களின் நடுப்பகுதியில் பாபாஜி இந்தியா சென்றார்.

தொழில் தொகு

காமசூத்ரா ஆணுறை விளம்பரங்கள் மூலம் பாபாஜி இந்தியாவில் பரவலாக அறியப்பட்டார். தலேர் மெகந்தியின் "பூம் பூம்", ஹர்பஜன் மானின் "ஹாய் மேரி பில்லோ" மற்றும் அபேயின் "ஃபிர் சே" ஆகியவற்றுக்கான இசை நிகழ்படங்களிலும் பங்கேற்றார். 2009 ஆம் ஆண்டில், அவரது நிறுவனம், அவரது முன்னாள் காதலரும் வணிக கூட்டாளியுமான கார்த்திக் ஜோபன்புத்ராவின் உதவியுடன் வெற்றியை அடைந்தது.

பாபாஜி ரிது குமார், ரிது பேரி, அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா, ரோஹித் பால், சுனீத் வர்மா, ஜேஜே வளையா, தருண் தகிலியானி மற்றும் பலர் உள்ளிட்ட சிறந்த வடிவமைப்பாளர்களுக்களின் ஆடை வடிவமைப்பில் வடிவழகியாக கலந்து கொண்டார். ஜனவரி 2010 இல், அவர் தனது சொந்த நிகழ்வு மேலாண்மை தொழிலைத் தொடங்கினார் மற்றும் தாஜ் கொலாபாவின் அர்ஜுன் கன்னா நிகழ்ச்சி போன்ற திட்டங்களை நிர்வகித்தார். அவரது நிறுவனத்திற்கு "VIBGYOR ENT" (வாழ்க்கை முறை மற்றும் நவரீக ஆடைக் கடை) என்று பெயரிடப்பட்டது. VIBGYOR என்பது வானவில்லின் ஏழு வண்ணங்களின் சுருக்கமாகும் (வயலட், இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு).

விவேகா பாபாஜி எஃப்டிவி இந்தியாவின் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக இருந்தார். அவர் 2002 ஆம் ஆண்டில் வெளியான தீக்சா மற்றும் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்த யே கைசி மொஹபத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். வணிக ரீதியில் இந்தப் படம் தோல்வி அடைந்தாலும் இவரது நடிப்பிற்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்தது.

இறப்பு தொகு

25 ஜூன் 2010 அன்று மும்பையில் உள்ள அவரது பாந்த்ரா இல்லத்தில் அவர் தனது குடியிருப்பில் உள்ள கூரை மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். பாபாஜி மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினரின் அறிக்கைகள் தெரிவித்தன. அவரது உடலுக்கு அருகில் இருந்த அவளது நாட்குறிப்பில் , "நீ என்னை கொன்றாய், கௌதம் வோரா," என்று குறிப்பிடப்பட்டிருந்தது[5] மற்றும் உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் அவள் தன் காதலனான கௌதம் வோராவை பிரிந்த பிறகு மனச்சோர்வாக இருந்ததாகக் கூறியது. [6] இருப்பினும், 2012 ஆம் ஆண்டில், கௌதம் வோரா ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பின்னர் காவல்துறையால் இந்த வழக்கு மீண்டும் துவங்கப்பட்டது. [7]

சான்றுகள் தொகு

  1. "List of Former Miss Mauritius World". Miss Mauritius Organisation. Archived from the original on 27 July 2011. பார்க்கப்பட்ட நாள் 26 June 2010.
  2. "List of Former Miss Mauritius Universe". Miss Mauritius Organisation. Archived from the original on 27 July 2011. பார்க்கப்பட்ட நாள் 26 June 2010.
  3. "Rare Kamasutra Condom Ad" (VID). 2010-06-27.
  4. "Supermodel-actress Viveka Babajee hangs self in India". 26 June 2010. http://www.mb.com.ph/articles/263943/supermodelactress-viveka-babajee-hangs-self-india. 
  5. "A nightmare birthday for Gautam Vohra". Archived from the original on 12 January 2010. பார்க்கப்பட்ட நாள் 14 January 2012.
  6. "Facebook messages provide new leads in Viveka case", 13 August 2010, என்டிடிவி
  7. "Who wrote Viveka Babajee's 'suicide letter'?". NDTV. NDTV. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேகா_பாபாஜி&oldid=3316066" இலிருந்து மீள்விக்கப்பட்டது