விவேக் சகாய்

விவேக் சகாய் (Vivek Sahai) இந்தியாவில் போக்குவரத்து மற்றும் மேலாண்மை நிபுணர் ஆவார். 1973 ஆம் ஆண்டுத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய இரயில்வே போக்குவரத்து சேவை அதிகாரியாகப் பணியாற்றினார். 01-06-2010 முதல் 30-06-2011 வரை இரயில்வே வாரியத்தின் தலைவராகவும், இந்திய அரசின் முன்னாள் முதன்மை செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். கூடுதலாக, இவர் இந்திய பிரத்யேக சரக்கு நடைபாதை ஆணையத்தின் தலைவராக இருந்தார். மேலும் இந்திய அரசின் தேசிய போக்குவரத்து மேம்பாட்டுக் கொள்கைக் குழுவிலும் இவர் பணியாற்றினார். கடந்த காலத்தில், கோல் இந்தியா நிறுவனத்தின் இயக்குநராக 2007 ஆம் ஆண்டு சூலை மாதம் 9 ஆம் தேதி முதல் 2008 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 20 ஆம் தேதி வரை பணியாற்றினார். பிபாவாவ் இரயில்வே ஆணைய நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

விவேக் சகாய்
Vivek Sahai
பிறப்புஉத்தரப் பிரதேசம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்அலகாபாத் பல்கலைக்கழகம், முயர் விடுதி
பணிபணி ஓய்வு ஆட்சிப்பணி உயர் அலுவலர்

2006 ஆம் ஆண்டில் மும்பை தொடர் குண்டுவெடிப்புகளுக்கு இரயில்வே துறையை பொறுப்பாகக் கையாண்டதற்காக இவர் குறிப்பாக பாராட்டப்படுகிறார் [1]

ஓய்வுக்குப் பிறகு, 2013 ஆம் ஆண்டில் இரயில்வே அமைச்சரின் ஆலோசகராக பெரிய திட்டங்களை வழிநடத்த உதவுவதற்காக இவர் திரும்ப அழைக்கப்பட்டார்.[2]

சகாய் அப்சர்வர் ரிசர்ச் அறக்கட்டளையின் ஒரு புகழ்பெற்ற சக ஊழியராக உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவேக்_சகாய்&oldid=3922885" இலிருந்து மீள்விக்கப்பட்டது