பணி ஓய்வு (Retirement from Service) என்பது குறிப்பிட்ட வயது எய்திய ஊழியரை, அவர் செய்யும் பணியிலிருந்து பணி வழங்குபவர் முற்றிலுமாக விடுவிப்பதாகும்.[1][2]

இந்தியாவில் பணி ஓய்வு வகைகள் தொகு

வயது முதிர்வு ஓய்வு தொகு

இந்தியாவின் நடுவண் அரசின் ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. தமிழ்நாடு அரசுத் துறையில் பணிபுரிபவர் எனில் 58 வயது நிறைவடைந்ததும் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறவேண்டும். எனினும் அடிப்படை பணிபுரிபவர் என்றால் 60 வயது முடிந்தவுடன் ஓய்வு பெறவேண்டும். இவ்வாறு நியமிக்கப்பட்ட வயதடைந்து ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு, “வயது முதிர்வு ஓய்வு” (Retirement on Superannuation) எனப்படும்[3][4].

விருப்ப ஓய்வு தொகு

ஒரு அரசு ஊழியர் 58 அல்லது 60 வயது முடிவதற்கு முன்னர் தானாகவே முன்வந்து விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறுவதற்கு வழங்கப்படுவது “விருப்ப ஓய்வு” (Voluntary Retirement) ஆகும்.

கட்டாய ஓய்வு தொகு

அரசு ஊழியர் ஒருவருக்குக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுவதற்காக அளிக்கப்படும் ஓய்வு “கட்டாய ஓய்வு” (Compulsury Retirement) எனப்படும்.

இயலாமை ஓய்வு தொகு

மருத்துவக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஒரு அரசு ஊழியர் பணிபுரிய இயலாதவர் என்றோ மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றோ அவருக்கு வழங்கப்படுவது ”இயலாமை ஓய்வு” (Invalid Retirement) எனப்படும்

மேற்கோள்கள் தொகு

இவற்றையும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணி_ஓய்வு&oldid=3561726" இருந்து மீள்விக்கப்பட்டது