விஷ்ணு தர்மோத்திரம்

விஷ்ணு தர்மோத்திரம் இந்து சமயத்தின் ஒரு உபபுராண நூல் ஆகும். இது ஒரு இந்து கலைக்களஞ்சியம் ஆகவும் கொள்ளப்படுகிறது. புவியியல், வானியல், வானசாத்திரம், காலபரிமாணம், சோதிடம், ஒழுக்கம், ஆசாரம், சட்டம், அரசியல், மருத்துவம், கணிதம், கருவிகள், அறிவுத்துறைகள், யுத்த தந்திரம், கலை, ஓவியம், சிற்பம் எனப் பல்வேறு விடயங்கள் பற்றி விளக்குகிறது.[1] இது விஸ்ணு புராணத்தின் ஒரு பின்னிணைப்பாக கொள்ளப்படுகிறது. இது 18 உபபுராணங்களில் ஒன்றாகவும் கூறப்படுகிறது..[2]

நூல் உள்ளடக்கம்

தொகு

நூல் மூன்று காண்டங்களைக் கொண்டது. முதல் காண்டத்தில் 269 அத்தியாயங்களும், இரண்டாம் காண்டத்தில் 183 அத்தியாயங்களும், மூன்றாம் காண்டத்தில் 118 அத்தியாயங்களும் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Hazra, R.C. (1962, reprint 2003). The Upapuranas in S. Radhakrishnan (ed.) The Cultural Heritage of India, Vol.II, Kolkata:The Ramakrishna Mission Institute of Culture, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85843-03-1, pp.277-8
  2. Hazra, R.C. (1962, reprint 2003). The Upapuranas in S. Radhakrishnan (ed.) The Cultural Heritage of India, Vol.II, Kolkata:The Ramakrishna Mission Institute of Culture, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85843-03-1, p.272
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணு_தர்மோத்திரம்&oldid=2698614" இலிருந்து மீள்விக்கப்பட்டது