விஷ்வநாத் சர்மா

ஜெனரல் விஷ்வநாத் சர்மா (General Vishwa Nath Sharma), PVSM, AVSM, (பிறப்பு: 4 சூன் 1930) இந்தியத் தரைப்படையின் 14வது தலைமைப் படைத்தலைவராக 1988 முதல் 1990 முடிய பணியாற்றியவர்.[2] [3]

ஜெனரல்

விஸ்வநாத் சர்மா

பிறப்பு4 சூன் 1930 (1930-06-04) (அகவை 94)
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1950 - 1990
தரம் ஜெனரல்
தொடரிலக்கம்IC-4769[1]
படைப்பிரிவு16வது பீரங்கிப்படை
66வது கவசப் படை ரெஜிமெண்ட்
கட்டளை இராணுவத்தின் கிழக்கு கட்டளை அதிகாரி
போர்கள்/யுத்தங்கள்இந்தியா-பாகிஸ்தான் போர், 1965
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்
1987 இந்திய அமைதி காக்கும் படை
விருதுகள்பரம் விசிட்ட சேவா பதக்கம்
அதி விசிட்ட சேவா பதக்கம்

குடும்பம்

தொகு

இவரது தந்தை மேஜர் ஜெனரல் அமர்நாத் சர்மா பிரித்தானிய இந்தியா இராணுவத்தில் பணிபுரிந்தவர். இவரது இளைய சகோதரர் மறைந்த மேஜர் சோம்நாத் சர்மா 1947-48 இந்திய-பாகிஸ்தான் போரில் வீரதீரமாகப் போரிட்டு வீரமரணம் அடைந்தார். மறைவிற்குப் பின் சோம்நாத் சர்மாவிற்கு பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது. இவரது மற்றொரு சகோதரர் சுரேந்திர நாத் சர்மா இந்திய இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவில் லெப்டினன்ட் ஜெனராலாக பணியாற்றியவர்.[4]

பெற்ற விருதுகள்

தொகு

இராணுவ வாழ்க்கை

தொகு

விஷ்வநாத் சர்மா தேராதூனில் உள்ள இந்திய இராணுவ அகாதமியில் 4 சூன் 1950 அன்று இராணுவ அதிகாரியாக பயிற்சி முடித்தவர். இவர் இந்தியா-பாகிஸ்தான் போர், 1965 மற்றும் 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்களில் பங்காற்றியவர். 1 மே 1988 அன்று இந்தியத் தரைப்படையின் தலைமைப் படைத்தலைவராக பதவி உயர்வு பெற்றார்.[5] 30 சூன் 1990 அன்று இராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 15 August 1970. p. 1003. 
  2. "General Vishwa Nath Sharma". Archived from the original on 21 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2013.
  3. Abidi, S. Sartaj Alam; Sharma, Satinder (2007). Services Chiefs of India. New Delhi: Northern Book Centre. pp. 76–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7211-162-5.
  4. Lt Gen K Surendra Nath,who has been officiating as General Officer Commanding-in-Chief
  5. Page 50, Where Gallantry is Tradition: Saga of Rashtriya Indian Military College, By Bikram Singh, Sidharth Mishra, Contributor Rashtriya Indian Military College, Published 1997, Allied Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7023-649-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்வநாத்_சர்மா&oldid=3751478" இலிருந்து மீள்விக்கப்பட்டது