சோம்நாத் சர்மா

மேஜர் சோம்நாத் சர்மா (Somnath Sharma), PVC (31 சனவரி 1923 – 3 நவம்பர் 1947), போரில் வீர தீரச் செயல்கள் புரியும் இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான பரம் வீர் சக்கரம் விருதை பெற்ற முதல் இந்திய இராணுவ அதிகாரி ஆவார்.[2]இவரது சகோதரர்கள் மேஜர் ஜெனரல் விஷ்வநாத் சர்மா மற்றும் லெப். ஜெனரல் சுரேந்திரநாத் சர்மா ஆவர்.

மேஜர்

சோம்நாத் சர்மா

2003-இல் இந்திய அஞ்சல் தலையில் சோம்நாத் சர்மாவின் படம்
பிறப்பு(1923-01-31)31 சனவரி 1923
தாத், காங்ரா மாவட்டம், பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு3 நவம்பர் 1947(1947-11-03) (அகவை 24)
பட்காம், ஜம்மு காஷ்மீர், இந்தியா
சார்பு இந்தியா
 இந்தியா
சேவை/கிளைபிரித்தானிய இந்தியாவின் இராணுவம்
 இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1942–1947
தரம் மேஜர்
தொடரிலக்கம்IC-521[1]
படைப்பிரிவு4-வது பட்டாலியன், குமாவுன் ரெஜிமெண்ட்
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்
விருதுகள்
உறவினர்மேஜர் ஜெனரல் விஷ்வநாத் சர்மா (சகோதரர்)
லெப். ஜெனரல் சுரேந்திரநாத் சர்மா (சகோதரர்)
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் சோம்நாத் சர்மாவின் மார்பளவுச் சிற்பம்
தேசிய போர் நினைவகத்தில் மேஜர் சோம்நாத்தின் பெயர் பொறித்த பலகை

நவம்பர் 1947- இந்திய-பாகிஸ்தான் போரின் போது, சிறீநகர் விமான நிலையத்திற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படையினரை எதிர்த்துப் போராடி விரட்டி அடித்தார். மேலும் பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக நடைபெற்ற பட்காம் சண்டையின் போது, பாகிஸ்தானின் பழங்குடியினப் படைவீரர்களை எதிர்த்துப் போராடி, காஷ்மீரில் ஊடுருவதை தடுத்து நிறுத்திய போது, சோம்நாத் சர்மா வீர மரணமடைந்தார். இவரது இறப்பிற்கு 21 சூன் 1950-இல் சோம்நாத் சர்மாவிற்கு பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[3] [4] மேஜர் சோம்நாத் சர்மாவின் சகோதரரின் மாமியாரான சாவித்திரி கனோல்கர் என்பவரே பரம் வீர் சக்கரம் விருதினை வடிவமைத்தவர் ஆவார். [5][6]

பரம் வீர் விருது பெற்றவர்கள்

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Chakravorty 1995, ப. 75–76.
  2. "SOMNATH SHARMA | Gallantry Awards". Gallantry Awards, Government of India. Archived from the original on 16 December 2017. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
  3. "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.
  4. "11 Facts You Need To Know About The Param Vir Chakra". India Times. Archived from the original on 17 September 2016. பார்க்கப்பட்ட நாள் 24 September 2016.
  5. NCERT 2016, ப. 12.
  6. Priya Aurora (27 December 2013). "7 Facts Average Indian Doesn't Know About Param Vir Chakra". Topyaps. Archived from the original on 20 September 2016. பார்க்கப்பட்ட நாள் 24 September 2016.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Somnath Sharma
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம்நாத்_சர்மா&oldid=3792359" இலிருந்து மீள்விக்கப்பட்டது