பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்கள்
இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான பரம் வீர் சக்கரம், 1999-ஆம் ஆண்டு முடிய 21 இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.[1] 14 பேருக்கு இந்த விருது வீரர்கள் இறந்த பிறகு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 விருதுகள் இந்தியத் தரைப்படை வீரர்களும், ஒர் விருது இந்திய வான்படை வீரரும் பெற்றுள்ளார். இதில் இந்தியத் தரைப் படையின் கிரனேடியர்ஸ் எனும் எறிகணை வீச்சுப் படையினர் 3 விருதுகளும், கூர்க்கா ரைபிள்ஸ் ரெஜிமெண்ட் படையினர் 3 விருதுகளும் பெற்றுள்ளனர். இந்த விருது பெற்றவர்களின் மார்பளவுச் சிற்பங்கள் புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[2]
மரபுரிமைகள்
தொகுஅந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பெயர் சூட்டல்
தொகுஇதுவரை அந்தமான் நிக்கோபரில் உள்ள பல தீவுகளுக்கு பெயர் சூட்டப்படாமல் இருந்தது. சனவரி 2023ல் இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம் வீர் சக்கர விருது பெற்ற மேஜர் இராமசாமி பரமேஸ்வரன் உள்ளிட்ட 21 வீரத்தியாகிகளின் பெயர்களை அத்தீவுகளுக்கு சூட்டி இந்திய அரசு கௌரவம் செய்துள்ளது.[3][4][5]
பரம் வீர் சச்கர விருது பெற்றவர்கள் பட்டியல்
தொகுவிருது பெற்றவரின் சிற்பம் | படை எண் | பெயர் | படையணி | நாள் | இடம் | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|---|---|
IC-521 | மேஜர் சோம்நாத் சர்மா | 4வது படைப்பிரிவு, குமோன் படையணி | நவம்பர் 3, 1947 | பத்காம், காசுமீர் | மறைவிற்குப் பின் | ||
IC-22356 | லான்ஸ் நாயக் கரம் சிங் | 1வது படைப்பிரிவு, சீக்கியப் படையணி | அக்டோபர் 13, 1948 | தித்வால், காசுமீர் | |||
SS-14246 | செகண்ட் லெப். இராமா ரகோபா ராணே | பொறியாளர் படை | ஏப்ரல் 8, 1948 | நௌஷேரா, காசுமீர் | |||
27373 | நாயக் ஜாதுநாத் சிங் | 1வது படைப்பிரிவு, ராஜ்புத் படைப்பிரிவு | பெப்ரவரி 1948 | நௌஷேரா, காசுமீர் | மறைவுக்குப்பின் | ||
2831592 | ஹவில்தார் மேஜர் பிரு சிங் செகாவாத் | 6-வது படைப்பிரிவு, ராசபுதனா துப்பாக்கிகள் | 17 சூலை 1948–18 சூலை 1948 | தித்வால், காசுமீர் | மறைவுக்குப்பின் | ||
IC-8497 | கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா | 3வது படைப்பிரிவு, முதலாம் கூர்க்கா துப்பாக்கிகள் (மாலௌன் படையணி) | திசம்பர் 5, 1961 | லும்பாஷி (எலிசபெத்வில்) ,கடங்கா மாநிலம், கொங்கோ | மறைவுக்குப்பின் | ||
IC-7990 | மேஜர் தன்சிங் தாப்பா | 1வது படைப்பிரிவு, 8வது கூர்க்கா துப்பாக்கிகள் | அக்டோபர் 20, 1962 | லடாக், இந்தியா | |||
JC-4547 | சுபேதார் ஜோகீந்தர் சிங் | 1வது படைப்பிரிவு, சீக்கியப் படையணி | அக்டோபர் 23, 1962 | டோங்பென் லா, வடகிழக்கு முன்னணி முகமை, இந்தியா | மறைவுக்குப்பின் | ||
IC-7990 | மேஜர் சைத்தான் சிங் | 13வது படைப்பிரிவு, குமோன் படையணி | நவம்பர் 18, 1962 | ரெசாங் லா | மறைவுக்குப்பின் | ||
2639885 | ஹவில்தார் அப்துல் ஹமித் | 4வது படைப்பிரிவு, கிரெனேடியர்சு | செப்டம்பர் 10, 1965 | சீமா, கேம் கரண் பகுதி | மறைவுக்குப்பின் | ||
IC-5565 | லெப்.கர்ணல் அர்தசிர் தாராபூர் | 17வது பூனா குதிரைப்படை | அக்டோபர் 15, 1965 | பில்லோரா , சியால்கோட் பகுதி, பாகிஸ்தான் | மறைவுக்குப்பின் | ||
4239746 | ஆல்பர்ட் எக்கா | 14வது படைப்பிரிவு, பாதுகாவல் படைகள் | திசம்பர் 3, 1971 | பிரம்மன்பரியா மாவட்டம், வங்காளதேசம் | மறைவுக்குப்பின் | ||
10877 F(P) | நிர்மல் சிங் செக்கோன் | 18-ஆம் வான்படைப் பிரிவு, இந்திய வான்படை | திசம்பர் 14, 1971 | ஸ்ரீநகர், காசுமீர் | மறைவுக்குப்பின் | ||
IC—25067 | அருண் கேதார்பால் | 17வது பூனா குதிரை | திசம்பர் 16, 1971 | ஜார்பால், ஷகார்கர் பகுதி | மறைவுக்குப்பின் | ||
IC-14608 | கோசியார் சிங் தாகியா | 3வது படைப்பிரிவு, கிரெனேடியர்சு | திசம்பர் 17, 1971 | பசன்தர் ஆறு, ஷகார்கர் பகுதி | |||
JC-155825 | நயீப் சுபேதார் பானா சிங் | 8வது படைப்பிரிவு, சம்மு காசுமீர் இலகு காலாட்படை | சூன் 23, 1987 | சியாச்சென் பனியாறு, சம்மு காசுமீர் | |||
IC-32907 | மேஜர் பரமேஸ்வரன் | 8வது படைப்பிரிவு, மஹர் படையணி | நவம்பர் 25, 1987 | இலங்கை | மறைவுக்குப்பின் | ||
IC-56959 | மனோஜ் குமார் பாண்டே | 1வது படைப்பிரிவு, 11வது கூர்க்கா துப்பாக்கிகள் | சூலை 3, 1999 | காலுபெர்/ஜபெர் டாப், பதாலிக் பகுதி , கார்கில் வட்டாரம், சம்மு காசுமீர் | மறைவுக்குப்பின் | ||
2690572 | யோகேந்திர சிங் யாதவ் | 18வது படைப்பிரிவு, கிரெனேடியர்சு | சூலை 4, 1999 | டைகர் ஹில், கார்கில் வட்டாரம் | |||
13760533 | சஞ்சய் குமார் | 13வது படைப்பிரிவு, சம்மு காசுமீர் துப்பாக்கிகள் | சூலை 5, 1999 | ஏரியா பிளாட் டாப், கார்கில் வட்டாரம் | |||
IC-57556 | விக்கிரம் பத்ரா | 13வது படைப்பிரிவு, சம்மு காசுமீர் துப்பாக்கிகள் | சூலை 6, 1999 | முனை 5140, முனை 4875, கார்கில் வட்டாரம் | மறைவுக்குப்பின் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.
- ↑ "PARAM VIR CHAKRA Awardees". Archived from the original on 2020-09-18. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.
- ↑ அந்தமானில் பிரதமரால் பெயரிடப்பட்ட தீவுகள்: யார் யார் அவர்கள்?
- ↑ அந்தமானில் 'ராமசுவாமி தீவு' - மோதி அறிவித்த பரம்வீர் சக்ரா தமிழ் அதிகாரிக்கு 35 வருடத்துக்கு பிறகு கெளரவம்
- ↑ PM Modi names 21 islands of Andaman and Nicobar Islands after Param Vir Chakra awardees