அருண் கேதார்பால்
2-ஆம் லெப்டிணன்ட் அருண் கேதார்பால் (பிவிசி (Arun Khetarpal) (14 அக்டோபர் 1950 – 16 திசம்பர் 1971) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலம், புனேவில் பிறந்தவர்.[2] புனேவில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் மேனிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார்.[3] சூன், 1967-இல் புனேவில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாதமியில் சேர்ந்தார். பின்னர் இந்திய இராணுவ அகாதமியில் இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சியினைப் பெற்றார். 1971-இல் இந்தியத் தரைப்படையில் புனே படையணியில் 2-ஆம் லெப்டிணன்ட் அதிகாரியாகச் சேர்ந்தார்.[4] இவரது தந்தை எம். எல். கேதார்பால் இந்திய இராணுவத்தில் பிரிகேடியராக இருந்தவர்.
2-ஆம் லெப்டிணன்ட் அருண் கேதார்பால் பவீச | |
---|---|
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் அருண் கேதார்பாலின் மார்பளவுச் சிற்பம் 2-ஆம் லெப்டிணன்ட் அருண் கேதார்பால் | |
பிறப்பு | 14 அக்டோபர் 1950 புனே, பம்பாய் மாகாணம், இந்தியா |
இறப்பு | 16 டிசம்பர் 1971 (வயது 21) பாரபிந்து, பஞ்சாப், இந்தியா |
சார்பு | இந்தியா |
சேவை/ | இந்திய இராணுவம் |
சேவைக்காலம் | 1971 (6 மாதங்கள்)[1] |
தரம் | 2-ஆம் லெப்டிணன்ட் |
தொடரிலக்கம் | IC-25067 |
படைப்பிரிவு | 17 புனே குதிரைப் படையணி |
போர்கள்/யுத்தங்கள் | இந்திய-பாகிஸ்தான் போர், 1971 பசந்தர் சண்டை |
விருதுகள் | பரம் வீர் சக்கரம் |
கல்வி | லாரன்ஸ் பள்ளி, சானாவார் |
1971- இந்திய பாக்கித்தான் போரின் போது, பஞ்சாப் பகுதியில் நடைபெற்ற சண்டையில், பாக்கித்தான் படைகளுக்கு எதிராக வீர தீரமாகப் போரிட்டு, பாக்கித்தான் படைகளின் 10 பீரங்கிகளை அழித்து, 16 திசம்பர் 1971 அன்று போரில் வீரமரணமடைந்தார். இறப்பிற்கு இவருக்கு 1971-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[1][5][6][7]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Archived copy". Archived from the original on 17 April 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Reddy, Kittu (2007). Bravest of the Brave: Heroes of the Indian Army. Ocean Books. pp. 52–54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87100-00-3.
- ↑ Arun Khetarpal on Indian army's site, indianarmy.nic.in
- ↑ "Lawrence School to get Khetarpal's statue". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2012-07-07. பார்க்கப்பட்ட நாள் 2012-02-10.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "2/LT ARUN KHETARPAL". Archived from the original on 2020-10-20. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
- ↑ "ARUN KHETARPAL | Gallantry Awards". gallantryawards.gov.in. Archived from the original on 2017-12-16. பார்க்கப்பட்ட நாள் 2017-12-15.
- ↑ "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.
- Jai Hind Jai Bharat பரணிடப்பட்டது 2012-03-20 at the வந்தவழி இயந்திரம்
- Indian Army
- [1] பரணிடப்பட்டது 2021-08-10 at the வந்தவழி இயந்திரம்