தன்சிங் தாப்பா

லெப்டினன்ட் கர்ணல் தன் சிங் தாப்பா (Lieutenant Colonel Dhan Singh Thapa), PVC (10 எப்ரல் 1928 – 5 செப்டம்பர் 2005) இந்திய இராணுவத்தின் கோர்க்கா துப்பாக்கி ரெஜிமெண்டின் படை அதிகாரியும், பரம் வீர் சககர விருதாளரும் ஆவார்.[2]

லெப். கர்ணல்

தன் சிங் தாப்பா

புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் தன் சிங் தாப்பாவின் மார்பளவுச் சிற்பம்
பிறப்பு(1928-04-10)10 ஏப்ரல் 1928
சிம்லா, இமாச்சலப் பிரதேசம், இந்தியா
இறப்பு5 செப்டம்பர் 2005(2005-09-05) (அகவை 77)
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1949–1980
தரம் லெப். கர்ணல்
தொடரிலக்கம்IC-7990[1]
படைப்பிரிவு8 கோர்க்கா ரைபிள்ஸ்
போர்கள்/யுத்தங்கள்இந்திய சீனப் போர்-1962
விருதுகள் பரம் வீர் சக்கரம்
பாங்காங் ஏரி, கிழக்கு லடாக்

1962 இந்திய-சீனப் போரின் போது, 21 அக்டோபர் 1962 அன்று கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரிக்கு வடக்குப் பகுதியில் உள்ள சிரிஜாப் மற்றும் யூலா பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் வந்த சீனப்படையினர் முன்னேறி வந்தனர். அதுபோது பாங்காங் ஏரியின் வடக்ரையில் நிலை கொண்டிருந்த மேஜர் தன் சிங் தாப்பா தலைமையிலான கோர்க்கா ரெஜிமெண்டின் 8-வது துப்பாக்கிப் படையினரை, பெரும் ஆயுதங்களுடன் வந்த சீனப்படையினர் சுற்றி வளைத்து தாக்கிய போது, தன் சிங் தாப்பா தலைமையிலான படைகள், சீனப்படையினரை மூன்று முறை எதிர்த்துப் போராடினர். இறுதியில் சீனர்கள் டாங்குப்படைகளுடன் தாக்க வந்த போது, தன் சிங் தாப்பா தனது வீரர்களுடன், பதுங்கு குழிகளிலிருந்து வெளிவந்து, சீனர்களை கையால் தாக்கிக் கொன்றார். பின்னர் சீனர்கள் அவரை போர்க் கைதியாக சிறைபிடித்தனர். போரின் முடிவில் தன் சிங் தாப்பா விடுவிக்கப்பட்டார். போரின் போது தன் சிங் தாப்பா சீனர்களுக்கு எதிராக நடத்திய வீர தீரச் செயல்களை பாராட்டப்பட்டு, 1962-ஆம் ஆண்டில்பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது[3]

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Chakravorty 1995, ப. 79.
  2. "DHAN SINGH THAPA | Gallantry Awards". gallantryawards.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-07-12.
  3. "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்சிங்_தாப்பா&oldid=3791511" இலிருந்து மீள்விக்கப்பட்டது