விக்கிரம் பத்ரா

கேப்டன் விக்ரம் பத்ரா PVC (Captain Vikram Batra), (9 செப்டம் 1974 – 7 சூலை 1999) இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடட்டில் போர்க் கல்வி மற்றும் பயிற்சி முடித்த விக்ரம் பத்ரா இந்திய இராணுவத்தின் ஜம்மு காஷ்மீர் ரைபிள்சின் 13 படையணியில் இராணுவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தின் சோப்பூரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, 1999-ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரில், பாகிஸ்தானிய படைகளுக்கு எதிராக வீர தீரமாக போரிட்டு, பாக்கித்தானியப் படைத்தளங்களான 5140, 4875 மற்றும் 4875-ஐ கைப்பற்றி வீரமரணமடைந்தார்.[1] இவரது இறப்பிற்குப் பின், இவருக்கு இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[2]

கேப்டன்

விக்கிரம் பத்ரா

புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் கேப்டன் விக்ரம் பத்ராவின் மார்பளவுச் சிற்பம்
பிறப்பு(1974-09-09)9 செப்டம்பர் 1974
பாலம்பூர், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
இறப்பு7 சூலை 1999(1999-07-07) (அகவை 24)
கார்கில், லடாக், ஜம்மு காஷ்மீர், இந்தியா
சார்பு இந்தியக் குடியரசு
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1997–1999
தரம் கேப்டன்
தொடரிலக்கம்IC-57556
படைப்பிரிவு13 JAK RIF
போர்கள்/யுத்தங்கள்கார்கில் போர் (1999)
விருதுகள் பரம வீர சக்கரம்
கல்வி
இந்தியக் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணனிடமிருந்து பரம் வீர் சக்கரம் விருது பெறும் கேப்டன் விக்ரம் பத்ராவின் தந்தை

2023 ஆம் ஆண்டு நேதாஜி ஜெயந்தி விழாவில், பெயரிடப்படாத 21 அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை சூட்டுவதாக இந்திய அரசு அறிவித்தது. இதன்பொருட்டு விக்ரம் பத்ரவின் பெயரில் பத்ரா தீவு என ஒரு தீவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. [3]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "'He Still Protects Kargil Mountains': Remembering Capt Vikram Batra Where He Was Martyred 20 Years Ago". News18. 7 July 2019. பார்க்கப்பட்ட நாள் 11 June 2020.
  2. "CAPT VIKRAM BATRA, PARAM VIR CHAKRA (Posthumous)". Archived from the original on 2020-10-20. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.
  3. https://www.hindustantimes.com/india-news/pm-unveils-model-of-netaji-memorial-names-21-islands-in-andaman-and-nicobar-101674451915934.html

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  வெளி ஒளிதங்கள்
  யூடியூபில் Video about Captain Vikram Batra showing a reenactment of his final battle during Kargil War, narrated by his then-commanding officer, Yogesh Kumar Joshi
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிரம்_பத்ரா&oldid=4071948" இலிருந்து மீள்விக்கப்பட்டது