வி. என். பார்த்திபன்

வி. என். பார்த்திபன் (V.N. Parthiban) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிரந்தர மாணவர் என்ற சிறப்புக்கு உரியவராக அறியப்பட்டுகிறார். 55 வயதிற்குள் பார்த்திபன் தன்னுடைய 30 ஆண்டுகால கற்றல் செயலில் 145 பட்டங்களைப் பெற்றுள்ளார். [1] இந்திய சட்ட நிறுவனம், தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனம், இந்திய புள்ளியியல் நிறுவனம், இந்திய தொழில்துறை பொறியியல் நிறுவனம் மற்றும் லயோலா வணிக நிர்வாக நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் இவர் பட்டம் பெற்றுள்ளார். தனது இலக்குகளை அடைய திட்டமிட்ட நேர நிர்வாகத்தைப் பயன்படுத்தினார். [2] கணிதப் பாடத்தின் மீது இவருக்கு அச்சம் இருந்தபோதிலும் கூட பார்த்தீபன் இச்சாதனையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[3]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

பார்த்தீபனின் மனைவி எம் செல்வகுமாரியும் [4] 9 பட்டங்களை பெற்றுள்ளார். [5] அதிக அளவிலான தகவல்கள் சேகரமானதைத் தொடர்ந்து பார்த்தீபனுக்கு தற்போது சிறிதளவு நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டுள்ளது. [6] பார்த்திபன் தனது ஞாயிற்றுக்கிழமைகளை படிப்பதற்கோ அல்லது தேர்வு எழுதுவதற்கோ செலவிடுகிறார். [7]

தொழில் தொகு

பார்த்திபன் தற்போது இந்தியாவின் சென்னையில் உள்ள மைலாப்பூர் விவேகானந்தர் கல்லூரியில் துறைத் தலைவராகப் பணியில் உள்ளார்.[8] [9] நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு பாடங்களை கற்பிக்கிறார்.

பட்டங்களின் பட்டியல் தொகு

● வணிகப் பாடத்தில் 8 முதுநிலைப் பட்டங்கள்
● அறிவியல் பாடத்தில் 4 முதுநிலைப் பட்டங்கள்
● சட்டப் பாடத்தில் 10 முதுநிலைப் பட்டங்கள்
● தத்துவத்தில் 12 முதுநிலை பட்டங்கள் (ஆராய்ச்சி பட்டங்கள்)
● வணிக நிர்வாகத்தில் 14 முதுநிலைப் பட்டங்கள்
● 20 தொழில்முறை படிப்புகள்
● 11 சான்றிதழ் படிப்புகள்
● 9 முதுநிலை பட்டயப் படிப்புகள்
● 8 முதுநிலைப் பட்டங்கள் (தொழிலாளர் மேலாண்மை, நிதி மேலாண்மை, வெளிநாட்டு வர்த்தகம், சமூக பணி, என சிலவற்றை குறிப்பிடலாம்)
● மற்றும் பல பட்டயங்கள் & முதுநிலைப் பட்டயங்கள்

மேற்கோள்கள் தொகு

  1. "Meet VN Parthiban - The 55-YO Chennai Professor Who Has 145 Academic Degrees To His Credit". IndiaTimes (in Indian English). 2016-09-07. பார்க்கப்பட்ட நாள் 2022-07-04.
  2. "This 56-year-old has 140 degrees, wants to acquire more". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-07-04.
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  5. "Meet VN Parthiban - The 55-YO Chennai Professor Who Has A Whopping 145 Academic Degrees To His Credit". www.darpanmagazine.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-04.
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  7. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  8. "Meet VN Parthiban - The 55-YO Chennai Professor Who Has A Whopping 145 Academic Degrees To His Credit". www.darpanmagazine.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-04.
  9. "இன்னும் மூணுமாசத்துல என் 150-ஆவது டிகிரியை வாங்கிடுவேன்!' - 'மிஸ்டர் படிப்பு' பார்த்திபன்". ஆனந்த விகடன். https://www.vikatan.com/oddities/miscellaneous/82294-interview-with-parthiban-who-hold-more-than-140-degrees. பார்த்த நாள்: 4 July 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._என்._பார்த்திபன்&oldid=3455240" இலிருந்து மீள்விக்கப்பட்டது