வி. எஸ். ராகவன் (இயக்குநர்)

ஒலிப்பதிவாளர், இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர்

வி. எஸ். ராகவன் ஒரு திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஒலிப்பதிவு பொறியாளருமாவார். ரேவதி புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் ஒலிப்பதிவுக் கலையகத்தையும் சொந்தமாக வைத்திருந்தார்.[1]

தொழில் வாழ்க்கை

தொகு

வி. எஸ். ராகவன் இயக்கிய திரைப்படங்களில் கள்வனின் காதலி(1955) [1], சாரங்கதரா (1958)[2], மணிமேகலை (1959)[3], சந்திரிகா (1950 - மலையாளம்)[4] என்பன அடங்கும்.

வி. எஸ். ராகவன் ஏ. வி. எம். கலையகத்தில் ஒலி பொறியாளராக கடமையாற்றினார். தென் இந்தியாவின் முதல் ஒலி பொறியாளர் இவர்தான். ஜெமினி நிறுவனத்தில் பணியாற்றிய சி. ஈ. பிக்ஸ் என்ற பொறியாளரிடமிருந்து இவர் பயிற்சி பெற்றார். 1943 ஆம் ஆண்டு சத்ய ஹரிச்சந்திரா (1943 திரைப்படம்) என்ற திரைப்படம் கன்னட மொழியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல் மொழிமாற்றுத் திரைப்படமாகும். இந்த மொழிமாற்று ஒலிப்பதிவை செய்தவர் வி. எஸ். ராகவன்.[5][6]

சொந்த வாழ்க்கை

தொகு

அவரது முழுப்பெயர் வி. ஸ்ரீனிவாச ராகவன். ஆயினும் வி. எஸ். ராகவன் என்றே அழைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Kalvanin Kadhali 1955". தி இந்து. 22 நவம்பர் 2008 இம் மூலத்தில் இருந்து 2018-01-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180110001231/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/Kalvanin-Kadhali-1954/article15394184.ece. பார்த்த நாள்: 10 ஜனவரி 2018. 
  2. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-01-10. பார்க்கப்பட்ட நாள் 2022-04-25.
  3. "Manimekalai 1959". Archived from the original on 2018-01-10. பார்க்கப்பட்ட நாள் 10 ஜனவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. B. Vijayakumar (8 மார்ச் 2010). "Chandrika 1950". தி இந்து. Archived from the original on 2014-09-20. பார்க்கப்பட்ட நாள் 10 ஜனவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. Pillai, Swarnavel Eswaran (2015). Madras Studios: Narrative, Genre, and Ideology in Tamil Cinema. India: SAGE Publications. p. 107–108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5150-121-3.
  6. "Sayee and Subbulakshmi's Film Industry Relatives". Archived from the original on 2018-01-10. பார்க்கப்பட்ட நாள் 10 ஜனவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)