வி. ஏ. ஆண்டமுத்து
வி. ஏ. ஆண்டமுத்து (V. A. Andamuthu) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ஆவார். இவர் 1996 ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினை (திமுக) சார்ந்தவர்.[1]
ஏப்ரல் 1997இல், இவர் சக திமுக அரசியல்வாதிகளான பி. செல்வராஜ் மற்றும் எஸ். கே. ராஜேந்திரனுடன், கருணாநிதி, முதல்வராகத் தொடர்வதற்கான பிரார்த்தனையாகச் சேலத்திற்கு அருகிலுள்ள பன்னாரி அம்மன் கோவிலில் பூக்குழி பிராத்தனை செய்தார். நாத்திக முதலமைச்சர் கருணாநிதி "எனது அரசாங்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நான் கவலைப்படவில்லை. இது எவ்வளவு காலம் பகுத்தறிவின் கொள்கைகளை கடைப்பிடிக்கும் என்று நான் கவலைப்படுகிறேன்" எனக்கூறி இந்தச் செயலைப் பின்பற்றும் எந்தவொரு நபரையும் கட்சியிலிருந்து வெளியேற்றுவதாகக் கண்டித்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 7. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
- ↑ Jagadheesan, L. R. (30 April 1997). "Religious fireworks". India Today. http://indiatoday.intoday.in/story/dmk-mlas-walk-on-burning-coal-for-longevity-of-govt-karunanidhi-terms-it-barbaric/1/275741.html. பார்த்த நாள்: 2017-05-06.