வி. வர்ஷினி

வி. வர்ஷினி (பிறப்பு 28 ஆகஸ்ட் 1998), ஒரு இந்திய பெண் சதுரங்க விளையாட்டு வீரர். பிடே செப்டம்பர் 2019 இல் பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை இவருக்கு வழங்கியது.

வி. வர்ஷினி
பிறப்பு28 ஆகத்து 1998 (1998-08-28) (அகவை 26)
காரைக்குடி, தமிழ்நாடு, India
பட்டம்பெண் கிராண்ட்மாஸ்டர் (2019)
பிடே தரவுகோள்2226 (ஜனவரி 2021)
உச்சத் தரவுகோள்2271 (டிசம்பர் 2015)

சதுரங்க வாழ்க்கை

தொகு

வர்ஷினி 2018 இல் ஒரு பெண் சர்வதேச மாஸ்டர் (WIM) ஆனார். [1] மே 2018 இல் புவனேஸ்வரில் நடந்த கே.ஐ.ஐ.டி சர்வதேச சதுரங்க விழாவில் தனது முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் நெறியை அடைந்தார். அடுத்து டிசம்பர் 2018 இல் மும்பையில் நடந்த சர்வதேச கிரண்ட்மாஸ்டர் சதுரங்க போட்டியில், அவர் தனது இரண்டாவது பெண் கிராண்ட்மாஸ்டர் நெறியைப் பெற்றார். வர்ஷினி தனது மூன்றாவது மற்றும் இறுதி நெறியை ஆகஸ்ட் 2019 இல் ரிகா, லாட்வியாவில் நடந்த ரிகா தொழில்நுட்ப பல்கலைக்கழக திறந்த போட்டியில் அடைந்தார். அவர் இந்தியாவின் பதினெட்டாவது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார்[2]. செப்டம்பர் 2019 இல் அவருக்கு அதிகாரப்பூர்வமாக பெண் கிராண்ட்மாஸ்டர் (WGM) பட்டம் வழங்கப்பட்டது. [3]

காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப்பில், 16 வயதிற்குட்பட்டோருக்கான தங்கப் பதக்கத்தையும், 18 வயதுக்குட்பட்டோருக்கான வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். 2016 ஆம் ஆண்டில் விளையாட்டுப் பிரிவின் கீழ் கிண்டி, அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்க தகுதி பெற்றார்[4]. இந்திய சதுரங்க வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதில் உள்ள நிதி பற்றாக்குறை பற்றி வர்ஷினி பேசியுள்ளார்[5].

இதையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு

 

  1. "Title Application" (PDF). fide.com. FIDE. பார்க்கப்பட்ட நாள் 31 January 2021.
  2. Aug 22, Prasad RS / TNN /; 2019; Ist, 10:44. "Nandhidhaa & Varshini, two new WGMs from Tamil Nadu | Chess News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-07. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  3. "Title Application" (PDF). fide.com. FIDE. பார்க்கப்பட்ட நாள் 31 January 2021.
  4. "My aim is to become grand master: Sports quota topper". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2016-06-25. பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.
  5. "Funds, marriage roadblocks for Indian women in chess". The New Indian Express. Archived from the original on 2021-10-07. பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._வர்ஷினி&oldid=3629871" இலிருந்து மீள்விக்கப்பட்டது