வி. வி. சுப்பிரமணியம்

இந்திய வயலின் இசைக் கலைஞர்

வி.வி.சுப்ரமணியம் (V.V.Subrahmanyam) இந்தியாவை சேர்ந்த ஒரு வயலின் இசை கலைஞராவார். வி.வி.எசு எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறார். இவர் வயலின் இசையமைப்பாளராகவும் கல்வியாளராகவும் [1] [2] இயங்கினார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

1944 ஆம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வடக்கேஞ்சேரி வீரராகவ சுப்ரமணியம் என்ற பெயருடன் பிறந்தார்.[2]

வி.வி.எசு தனது ஆரம்பக் கல்வியை தந்தையிடமிருந்து பெற்றார். [1] திரிபுனித்துரா நாராயண ஐயர், செம்பை, முசிறி சுப்ரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர் போன்ற கர்நாடக இசை வயலின் கலைஞர்களிடம் மேலும் பயிற்சி பெற்றார். [1]

தொழில் தொகு

1966 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் டி.கே.மூர்த்தி மற்றும் எம்.எசு.சுப்புலட்சுமி ஆகியோருடன் விவிஎசு வயலின் வாசித்தார். [1] [3] [4]

1978 முதல் 1982 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வயலின் பேராசிரியராக வி.வி.எசு பணிபுரிந்தார்.[2] அமெரிக்காவில் உள்ள வெசுலியன் பல்கலைக்கழகம் மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில பல்கலைக்கழகங்களிலும் வயலின் கற்பித்துள்ளார். [2]

1993 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கிய கலைமாமணி விருதை பெற்றார். [2]

1998 ஆம் ஆண்டில் கேரள சங்கீத நாடக அகாடமி விருதையும் பெற்றார். [2]

விருதுகள் மற்றும் அங்கீகாரம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "VV Subramanyam, TV Gopalakrishnan & VVS Murari".
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 "Awardees - V V Subrahmanyam" (PDF).
  3. Revathi, R. (24 March 2022). "Remembering a guru, who structured the art of mridangam playing". The Hindu.
  4. "On a Classical Note". Indian Express. August 19, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._வி._சுப்பிரமணியம்&oldid=3579421" இலிருந்து மீள்விக்கப்பட்டது