வி ஆர் த நைட் (திரைப்படம்)

வி ஆர் த நைட் 2010ல் ஜெர்மனியில் வெளிவந்த வாம்பைர் திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை டென்னிஸ் கன்செல் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஒரு பெண் வாம்பைர், இளம் பெண்ணொருத்தியைக் கடித்தனால் அவள் வாழ்வில் ஏற்படுகின்ற மாற்றத்தினைப் பதிவு செய்திருந்தது. இப்படத்தில் மனச்சோர்வு, தன்னே துன்புறுத்துதல், தற்கொலை, இறவாமை போன்றவையும், பிரிவினைவாதப் பெண்ணியத்தினையும் வெளிபடுத்தியது.

வி ஆர் த நைட்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்டென்னிஸ் கன்செல்
தயாரிப்புகிறிஸ்டீன் பெக்கர்
கதைஜான் பெக்கர்
டென்னிஸ் கன்செல்
நடிப்புகாத்தரோலின் ஹெர்புர்த்
நினா ஹோஸ்
ஜெனிப்பர் Ulrich
அன்னா பிஷ்ஷர்
மேக்ஸ் ரிமேல்ட்
கலையகம்ரேட் பேக் பிலிம்புரோடக்சன்
வெளியீடுஅக்டோபர் 28, 2010 (2010-10-28)
ஓட்டம்100 நிமிடங்கள்
நாடுஜெர்மினி
மொழிஜெர்மன்
ஆக்கச்செலவு€6,500,000
(about $8,500,000)


தனியார் விமானமொன்றில் அனைவரும் வாம்பைரால் தாக்கப்பட்டு இறந்திருப்பதும், அதில் மூன்று இளம் பெண்கள் மட்டும் உயிரோடிருப்பதுமாகப் படம் தொடங்குகிறது. அவர்களில் தலைவராக இருக்கும் பெண், கழிவறையில் ஒரு விமானப் பணிப்பெண் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்து அவரைக் கொல்கிறார். பின் மூவரும் விமானத்திலிருந்து கீழே குதிக்கின்றார்கள்.

லீனா, பெர்லின் நகரில் வசிக்கும் ஒரு சிறிய திருடி. ஒரு முறை அவர் திருடும் பொழுது, காவல்துறை அதிகாரியான டாம் பிடிக்க முயலுகிறார். அவரிடமிருந்து தப்பி ஓடும் லீனா, ஒரு துணிக் கடையில் பெண்ணின் உடையை திருடி அணிந்து கொண்டு, பாலம் ஒன்றின் மீது அமர்ந்துகொள்கிறார். திருடனை பிடிக்க ஓடிவந்த டாம், அங்கு லீனாவிடம் விசாரனை செய்கிறார். அதன்பின்பு லீனாவின் கைகளில் ஏற்பட்ட காயத்தினைக் கண்டு தான் தேடிவந்த திருடன் லீனாதான் என்பதை உறுதிசெய்கிறார். ஆனால் லீனா டாமை தாக்கிவிட்டுத் தப்பிவிடுகிறார்,.

ஒரு நாள் இரவு நேர விடுதியொன்று பூங்காவின் நடுவே இருப்பதை லீனா காண்கிறார். அதனுட் செல்ல முற்படுகையில் தடுத்து நிறுத்தும் காவலாளியிடம் லீலாவை உள்ளே வரவிடும்படி வாம்பைரில் ஒருத்தியான லூய்சி உத்தரவிடுகிறார். லீனாவுடன் நடனமாடும் லூய்சி, அவளை குளியலறைக்கு அழைத்துச் சென்று கடித்துவிடுகிறார். தன்னை ஒரு வாம்பைர் கடித்துவிட்டது என அறிந்த லீனா பயந்தபடி வீட்டிற்கு சென்றுவிடுகிறார். மறுநாள் காலை அவளுடைய அறையில் சூரியன் கதிர்கள் உடம்பில் பட, தானும் வாம்பைராக மாறிவிட்டதை உணர்கிறார்.

தன்னை இவ்வாறு மாற்றிய லூய்சியிடம் முறையிட அன்றிரவு இரவு நேர விடுதிக்கு செல்கிறார் லீனா. அங்கு லூய்சியுடன் மேலும் இரு பெண்கள் இருப்பதைக் காண்கிறார். வாம்பைராக இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி லீனாவிற்கு தெரிவிக்க லூய்சி அவளை ஒரு விபச்சாரத் தரகரிடம் அனுப்புகிறார். அங்கு இருவரை வாம்பைர் பெண்கள் கொல்கின்றார்கள். அதனை ஒளிந்திருந்த காணும் ஒருவன் மட்டும் உயிர் தப்புகிறான். கொலை நடந்த இடத்திற்கு மறுநாள் காவல்துறை வருகிறது. அதிகாரியான டாம் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த காணொளிப் பதிவுகளை அறையில் வைத்துக் காண்கிறான். அதில் கொலை நடந்த போது ஒளிந்திருந்த குண்டர்களில் ஒருவன் மிகுந்த பயத்துடன் வெளியேறுவது பதிவாகியிருக்கிறது. காவல்துறை அந்த மனிதனைத் தேடுகிறது.

இதற்கிடையே வாம்பைர் பெண்கள் மேலும் இரு காவலரைக் கொலை செய்கின்றார்கள். அதனைப் பார்த்துப் பயந்த லீனா அவர்களிடமிருந்து தப்பித்துவிட எண்ணி டாமைத் தொலைபேசியில் தொடர்புகொள்கிறார். லீனாவைக் காப்பற்ற வரும் டாமிடமிருந்தும் காவல்துறையிடமிருந்தும் தப்பிக்க முயலும் போது ஒரு பெண் வாம்பைர் கொல்லப்படுகிறாள். லூய்சியுடன் இருந்த மற்றொரு வாம்பைரும் சூரியனின் கதிரில் நின்று தற்கொலை செய்து கொள்கிறது. இறுதியாக டாமை துப்பாக்கியால் லூய்சி வீழ்த்த, லீனா லூய்சியிடம் சண்டையிட்டு டாமை மீட்கிறார்.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி_ஆர்_த_நைட்_(திரைப்படம்)&oldid=2749873" இலிருந்து மீள்விக்கப்பட்டது