வீட்டுக்கல்வி

வீட்டுக்கல்வி (Homeschooling) தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டுக் கல்வி ( EHE ) என்றும் அழைக்கப்படுகிறது, இது பள்ளி வயதுக் குழந்தைகள் வீட்டிலோ அல்லது பள்ளியைத் தவிர வேறு பல இடங்களிலோ கல்வி கற்பதைக் குறிக்கிறது . [1]பொதுவாக பெற்றோர், ஆசிரியர் அல்லது இணைய வழி ஆசிரியரால் நடத்தப்படுகிறது. இந்த முறையில் பெரும்பாலானவை தனிப்பட்ட கற்றல் முறைகளைப் பயன்படுத்துகின்றன, வீட்டுக்கல்வியின் உண்மையான நடைமுறைகள் நாடுகள் வாரியாக மாறுபடலாம். "வீட்டுக் கல்வி" என்பது முதன்மையாக ஐரோப்பா மற்றும் பல பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர் நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. வீட்டுக்கல்வி என்பது தொலைநிலைக் கல்வியில் இருந்து மாறுபட்டது. இது இணையப் பள்ளின் தேவைகளுடன் இணங்குவதைக் குறிக்கிறது.

வீட்டில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் நபர்

சொற்பிறப்பியல்

தொகு

"வீட்டுக்கல்வி" என்பது அமெரிக்காவிலும் வட அமெரிக்காவில் உள்ள பிற நாடுகளிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல், "இது முதன்மையாக ஐக்கிய இராச்சியம், ஐரோப்பா மற்றும் பல பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர் நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. [1] [2] [3] வழக்கமான கல்வியினை விட விரைவாக தங்களுக்குத் தேவையான தகவல்களை வீட்டுக்கல்வியின் மூலம் பெறுவதாக சிலர் நம்புகிறார்கள். [4] [5] [6] [7]

வரலாறு

தொகு

ஆரம்பகால வரலாறு

தொகு

வரலாற்றின் பெரும்பகுதி மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களால் பாடம் கற்பிக்கும் வீட்டுக்கல்வி ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது. [8] தொழில்முறை ஆசிரியர்களிடம் பாடம் கற்றல் என்பது செல்வந்த குடும்பத்தினருக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருந்தது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் கட்டாய பள்ளி வருகைச் சட்டங்கள் இயற்றப்பட்டதன் மூலம் வீட்டுக்கல்விக்கான தேவை குறைந்துவிட்டது. இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களில் இது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. 1960கள் மற்றும் 1970களில் தொழில்மயமாக்கப்பட்ட கல்வியில் அதிருப்தியடைந்த கல்வி சீர்திருத்தவாதிகளுடன் வீட்டுக்கல்வி மீண்டும் எழுச்சிபெறத் தொடங்கியது. [8]

திறனாய்வு

தொகு

ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாவட்டங்களின் சில அமைப்புகள் வீட்டுக்கல்வியை எதிர்க்கின்றன. தேசிய கல்விச் சங்கம், அமெரிக்க ஆசிரியர் சங்கம் மற்றும் தொழில்முறை சங்கம் ஆகியன ஆசிரியர்களுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும் என்றும் மாநில அங்கீகாரம் பெற்ற பாடத்திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. [9] [10]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Elective home education—Guidelines for local authorities" (PDF). gov.uk. Section 1.2, page 3. Archived from the original on 2018-05-22. Retrieved 2018-10-11.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link) (PDF). gov.uk. Section 1.2, page 3. Archived from the original (PDF) on 2018-05-22. Retrieved 2018-10-11.
  2. International perspectives on home education : do we still need schools?.
  3. Home schooling and home education : race, class and inequality.
  4. "Here's Why Homeschooling Actually Makes More Sense in the Digital Age". Retrieved 2020-11-01.
  5. "How Has Homeschooling Changed in the Digital Age?". Retrieved 2020-11-01.
  6. "How the Internet Changed Homeschooling". Retrieved 2020-11-01.
  7. "The Role of Homeschooling in the Modern Era". Retrieved 2020-11-01.
  8. 8.0 8.1 A. Distefano, K. E. Rudestam, R. J. Silverman (2005) Encyclopedia of Distributed Learning பரணிடப்பட்டது 2016-01-01 at the வந்தவழி இயந்திரம் (p221) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7619-2451-5
  9. Lines, Patricia M. "Homeschooling". Kidsource. Archived from the original on 1 January 2016. Retrieved 13 September 2013.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  10. . 2008-04-03. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டுக்கல்வி&oldid=4108859" இலிருந்து மீள்விக்கப்பட்டது