வீட்டுப் பயன்கருவிகள்

வீட்டுப் பயன்கருவி (domestic appliance) என்பது சமையல், அல்லது உணவு காப்பு போன்ற சில வழமையான வீட்டுப்பணிகளை செய்து முடிக்க உதவிடும் பெரிய இயந்திரம் ஆகும். இவை வீடுகளிலோ, நிறுவனங்களிலோ, வணிக அல்லது தொழிலகங்களிலோ இருக்கலாம். இக்காரணங்களால் சிலநேரங்களில் அவற்றை அனைத்து இடங்களுக்கும் பொதுவாக முதன்மை பயன்கருவிகள் என்பதும் உண்டு. இவற்றிற்கு நீரைத் தவிர பொதுவாக மின்சாரம் அல்லதுபுரொப்பேன் /இயற்கை எரிவளியைப் பயன்படுத்துவதால் நீர்க்குழாய் போன்ற பிற வீட்டுக்கருவிகளிடமிருந்து இவை வேறானது. பிரித்தானிய ஆங்கிலம் பேசப்படும் பகுதிகளில் வெள்ளைப் பொருட்கள் அல்லது வைட்வேர்[1] எனப்படுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வெள்ளைப் பொருட்கள் என்ற சொல் பொதுவாக லினன்துணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.[2]

குளிர்சாதனப் பெட்டி

இப்பயன் கருவிகளின் கட்டுப்பாடுகள் மிகவும் சிக்கலாகி வருகின்றன. உலகின் பல்வேறு நாடுகளும் ஆவை பயன்படுத்தும் ஆற்றலை சேமிக்கும் நோக்குடன் ஆற்றல் குறிப்புச்சீட்டுக்கள் (Energy Labelling) வழங்கி வருகின்றன. மேலும் சுற்றுச்சூழல் காரணங்களால் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் வளிமத்தையும் கட்டுப்படுத்துகின்றன.

இந்தச் சாதனங்கள் பெரும்பாலும் பெரியவையாவும் நகர்த்த இயலாததாகவும் இருப்பதால் பல வளர்ந்த நாடுகளில் வாடகைகாரர்களுக்காக இவற்றைப் பொருத்துவது கட்டிட வரையறைகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றிற்காக கூடுதல் மின்னோட்டம் அல்லது/உடன் கூடிய மின்னழுத்தம் தாங்கவியலும் தனியான மின்சார இணைப்புகளும் ஏற்படுத்த வேண்டியிருக்கும்.

மேற்சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டுப்_பயன்கருவிகள்&oldid=3792431" இலிருந்து மீள்விக்கப்பட்டது