வீணை தனம்மாள்

இந்திய இசைக் கலைஞர்

வீணை தனம்மாள் (Veenai Dhanammal) என அறியப்பட்ட தனம்மாள் (1868- 15 அக்டோபர் 1938)[1]; ஒரு சிறந்த வீணைக் கலைஞராவார். இவர் பாட்டிலும் நடனத்திலும் சிறந்து விளங்கியவர். இவர் சரஸ்வதி வீணைக் கலைஞராகவும் இருந்தார்.[1] இவரது பெயரில் உள்ள "வீணை" என்ற முன்னொட்டு அந்த கருவியில் இவரது விதிவிலக்கான தேர்ச்சியின் குறிகாட்டியாகும்.

வீணை தனம்மாள்
1930களின் நடுப்பகுதியில் வீணை தனம்மாள்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1867
பிறப்பிடம்ஜார்ஜ் டவுன், சென்னை
இறப்பு(1938-10-15)அக்டோபர் 15, 1938
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)வீணைக் கலைஞர்
இசைக்கருவி(கள்)வீணை
இசைத்துறையில்1880–1938
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள்
வீணை
தனது மகள் டி. லட்சுமிரத்னம் மற்றும் பேரனுடன் வீணை தனம்மாள் (இடதுபுறம், சுமார் 1910-15.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

தொகு

சென்னையின் ஜார்ஜ் டவுன் பகுதியில் தொழில்முறை இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்களின் குடும்பத்தில் தனம்மாள் பிறந்தார். இவரது பாட்டி காமாட்சி ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர் ஆவார். இவரது தாயார் கர்நாடக இசையில் மும்மூர்த்திகளான சியாமா சாஸ்திரிகளின் மகன் சுப்பராய சாத்திரியிடம் பயிற்சி பெற்ற ஒரு பாடகர் ஆவார்.

தனது குடும்ப உறுப்பினர்களின் பயிற்சிக்கு கூடுதலாக, தனம்மாள் வாலாசாபேட்டை பாலகிருஷ்ண தாஸ் (சேத்ரையாவின் பதங்களின் களஞ்சியமாக இருந்த பார்வையற்ற இசைக்கலைஞர்) மற்றும் சாத்தனூர் பஞ்சநாத ஐயர் ஆகியோரிடமிருந்தும் கற்றுக்கொண்டார்.

இசைப் பயிற்சி

தொகு

முதலில் அம்மாவிடமும், தனது பாட்டியிடமும் வீணையைக் கற்ற இவர், பின்னர் அழகச்சிங்கரையாதன், தம்பியப்ப பிள்ளை தீட்சிதர், முத்தையால்பேட்டை தியாகய்யர் ஆகியோரிடமும் இசை கற்றார். வீணை தனம்மாளின் மகள் டி. ஜெயம்மாள் ஒரு கருநாடக இசைப் பாடகி ஆவார்.

இந்துஸ்தானி இசையில் கிரானா கரானாவின் (பாடும் பாணி) நிறுவனரான அப்துல் கரீம் கான் இவரிடமிருந்து கருநாடக பாடல்களைக் கற்றுக் கொண்டு அவற்றை மேடையில் வெளிபடுத்தினார்.

மாணாக்கர்கள்

தொகு

கௌரவம்

தொகு

இவரது நினைவாக இந்திய அஞ்சல் துறை ஒரு அஞ்சல் தலையை 03-டிசம்பர் 2010 அன்று வெளியிட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 University, Vijaya Ramaswamy, Jawaharlal Nehru (2017-08-25). Historical Dictionary of the Tamils (in ஆங்கிலம்). Rowman & Littlefield. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5381-0686-0.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. "Stamps - 2010". Department of Posts, Government of India. Archived from the original on 14 August 2013. பார்க்கப்பட்ட நாள் 2 August 2013.

நூல்பட்டியல்

தொகு
  • SubbaRao, T. V. Studies in Indian Music, Asia Publishing House, London, 1962.
  • Ayyangar, R. R. History of South Indian (Carnatic) Music, Published by the author, Madras, 1972.
  • Pesch, Ludwig. The Illustrated Guide to South Indian Classical Music, New Delhi: Oxford University Press, 1999.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீணை_தனம்மாள்&oldid=4043532" இலிருந்து மீள்விக்கப்பட்டது