வீரபாண்டி எஸ். ஆறுமுகம்

தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர்
(வீரபாண்டி ஆறுமுகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வீரபாண்டி எஸ். ஆறுமுகம் (26 ஜனவரி 1937 - 23 நவம்பர் 2012) தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சரவையில் விவசாயத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகித்தார்.

வீரபாண்டி எஸ். ஆறுமுகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 26, 1937 (1937-01-26) (அகவை 87)
பூலாவரி, சேலம் மாவட்டம்
இறப்பு23, நவம்பர், 2012
போரூர், சென்னை
அரசியல் கட்சிதி.மு.க
பிள்ளைகள்ஆ.ராஜேந்திரன், ஆ.செழியன், ஆ.பிரபு

அரசியல் வாழ்க்கை

தொகு

சேலம் மாவட்டம் பூலாவரி கிராமத்தில் 1937-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ம் நாள் பிறந்த இவர் சேலம் மாவட்ட திமுக மாவட்ட செயலராகவும், திமுகவின் உயர்மட்டக் குழுவிலும் இருந்தார்.

1957ஆம் ஆண்டும் முதல் அரசியலில் இருந்த இவர், 1958ஆம் ஆண்டு பூலாவரி பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962 ஆம் ஆண்டு முதல் முறையாகச் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். அதன்பிறகு, 1967, 1971 என 15 ஆண்டுகள் உறுப்பினராகச் செயல்பட்ட இவர் மீண்டும் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், 1996 மற்றும் 2006 ஆண்டு நடைபெற்ற தேர்தல்களிலும் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரை தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். மூன்று முறை விவசாயத்துறை அமைச்சராகவும்(1990–1991, 1996–2001, 2006–2011) இருந்த இவர். 2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட இவர் அங்கு தோல்வியடைந்தார்.

கைது

தொகு

வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் 2011ஆம் ஆண்டு சூலை 30ஆம் நாள் சேலம் மாவட்ட துணை ஆய்வாளர் சத்யபிரியாவால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இறப்பு

தொகு

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 75 வயதான அவர், சிகிச்சை பலனின்றி 2012-ம் ஆண்டு நவம்பர் 23-ம் நாள் காலை உயிரிழந்தார்.[1][2][3]

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. "முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 23, 2012.
  2. "Veerapandi Arumugam dies". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 23, 2012.
  3. "DMK leader Veerapandi Arumugam passes away". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 23, 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரபாண்டி_எஸ்._ஆறுமுகம்&oldid=4120530" இலிருந்து மீள்விக்கப்பட்டது